இரும்பு(II) லாக்டேட்டு
இரும்பு(II) லாக்டேட்டு (Iron(II) lactate) என்பது C6H10FeO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். பெரசு லாக்டேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. பொதுவாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட லாக்டேட்டு ஈந்தணைவிகள் சேர்ந்து இந்த அணைவுச் சேர்மம் உருவாகிறது. Fe(லாக்டேட்டு)2(H2O)2(H2O) என்பது இதற்கான ஓர் உதாரணமாகும். வாய்ப்பாட்டிலுள்ள லாக்டேட்டு CH3CH(OH)CO2- அயனியைக் குறிக்கும்.[2] இரும்பு(II) லாக்டேட்டு நிறமற்ற ஒரு திண்மமாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பெரசு 2-ஐதராக்சிபுரோப்பனோயேட்டு
| |
வேறு பெயர்கள்
இரும்பு இருலாக்டேட்டு
இரும்பு(II) லாக்டேட்டு | |
இனங்காட்டிகள் | |
5905-52-2 | |
ChemSpider | 20839 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 22197 |
| |
UNII | 5JU4C2L5A0 |
பண்புகள் | |
C6H10FeO6 | |
வாய்ப்பாட்டு எடை | 233.9888 கி/மோல் (நீரிலி) 288.03464 கி/மோல் (முந்நீரேற்று) |
தோற்றம் | பசுமை கலந்த வெண்மை நிறத் தூள் |
உருகுநிலை | 500 °C (932 °F; 773 K) |
முந்நீரேற்று: 2.1 கி/100மி.லி (10 °செல்சியசு) 8.5 கி/100மி.லி (100 °செல்சியசு) இருநீரேற்று: 2% (25 °செல்சியசு)[1] | |
கரைதிறன் | கார சிட்ரேட்டுகளில் கரையும் எத்தனாலில் சிறிதளவு கரையும் டை எத்தில் ஈதர் கரைப்பானில் கரையாது |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇரும்பு(II) லாக்டேட்டை பல வேதி வினைகள் மூலம் உற்பத்தி செய்ய முடியும். கால்சியம் லாக்டேட்டு மற்றும் இரும்பு(II) சல்பேட்டு ஆகியவற்றின் வினையினால் உற்பத்தி செய்யப்படுவதும் ஒரு முறையாகும்.:[3]
லாக்டிக் அமிலத்துடன் கால்சியம் கார்பனேட்டு மற்றும் இரும்பு(II) சல்பேட்டு ஆகியவற்றைச் சேர்த்து வினைபுரியச் செய்து இரும்பு(II) லாக்டேட்டு தயாரிப்பது மற்றொரு வழிமுறையாகும்.
பயன்கள்
தொகுஇரும்பு(II) லாக்டேட்டு புரோட்டான்-பரிமாற்ற சவ்வு எரிபொருள் செல்கள் உற்பத்தியில் ஒரு வினைபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக இந்த கலங்களில் பயன்படுத்தப்படும் நேர்மின்வாய் வினையூக்கி மாற்றிகளின் உற்பத்தியில் இது பயன்படுத்தப்படுகிறது. ஓர் அமிலத்தன்மை சீராக்கியாகவும், காற்றுடன் தொடர்பு கொள்ளும்போது ஆக்சிசனேற்றம் அடைவதால், ஆலிவ் போன்ற உணவுப் பொருட்களுக்கு நிறத்தைத் தக்கவைக்கும் முகவராகவும் பயன்படுத்தப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ஏற்படும் இரத்த சோகைக்கு மருந்தாகவும், இரும்புச்சத்து கொண்ட உணவுகளை வலுப்படுத்தவும் இது பயன்படுகிறது. மற்றும் மாத்திரை அல்லது மாத்திரை வடிவில் ஊட்டச்சத்து நிரப்பியாக ஓர் உணவு சேர்க்கை பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Iron(II) lactate dihydrate MSDS பரணிடப்பட்டது 2014-05-03 at the வந்தவழி இயந்திரம் at Jost Chemical
- ↑ Ping, Liu; Mao-Chun, Hong (1992). "Fe(CH3CH(OH)CO2)2(H2O)2(H2O)". Jiegou Huaxue (Chin.J.Struct.Chem.) 11: 44.
- ↑ CN104876816A, 刘平祥 & 林家燕, "Synthetic method of ferrous lactate", published 2015-09-02