இரும்பு(III) குரோமேட்டு

இரும்பு(III) குரோமேட்டு (Iron(III) chromate) என்பது Fe2(CrO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குரோமிக் அமிலத்தினுடைய இரும்பு(III) உப்பான இச்சேர்மம் மஞ்சள் நிறத்துடன் காணப்படுகிறது.

இரும்பு(III) குரோமேட்டு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(III) குரோமேட்டு
இனங்காட்டிகள்
10294-52-7 Y
பப்கெம் 21902690
பண்புகள்
Fe2(CrO4)3
வாய்ப்பாட்டு எடை 459.671 கி/மோல்l
தோற்றம் மஞ்சள் நிறத்தூள்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

கண்டுபிடிப்பு தொகு

1817 ஆம் ஆண்டு சாமுவேல் இப்பர்ட்டு-வேர் என்பவர் செட்லேண்டு தீவைப் பார்க்கச் சென்றபொழுது இரும்பு(III) குரோமேட்டைக் கண்டறிந்தார்.[2]

தயாரிப்பு தொகு

பொட்டாசியம் குரோமேட்டு மற்றும் இரும்பு(III) நைட்ரேட்டு வினைபுரிந்து இரும்பு(III) குரோமேட்டும் பொட்டாசியம் நைட்ரேட்டும் உருவாகின்றன. சாதாரண சூழ்நிலையில் இரும்பு மற்றும் குரோமியம் ஆக்சைடுகளை காற்றில் ஆக்சிசனேற்றம் செய்தும் இரும்பு(III) குரோமேட்டு தயாரிக்கலாம்.

4 Fe2O3 + 6 Cr2O3 + 9 O2 → 4 Fe2(CrO4)3

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பு(III)_குரோமேட்டு&oldid=3848907" இலிருந்து மீள்விக்கப்பட்டது