இரும்பொறை

சங்க கால அரசர்களில் இரும்பொறை என்னும் பெயருடன் 7 அரசர்கள் காணப்படுகின்றனர். முதலில் அவர்களது செயல்களை தொகுத்துக் கொள்வோம்.

 1. பெருஞ்சேரல் இரும்பொறை - 8ஆம் பத்துத் தலைவன் - இவனைப் பாடிய புலவர் அரிசில் கிழார்
 2. இளஞ்சேரல் இரும்பொறை - 9ஆம் பத்துத் தலைவன் - இவனைப் பாடிய புலவர் பெருங்குன்றூர் கிழார்
 3. குட்டுவன் இரும்பொறை - 9ஆம் பத்துத் தலைவன் இளஞ்சேரல் இரும்பொறையின் தந்தை - இவனைப் பாடிய புலவர் பெருங்குன்றூர் கிழார்
 4. அந்துவஞ்சேரல் இரும்பொறை - இவனைப் பாடிய புலவர் உறையூர் ஏணிச்சேரி முட மோசியார்
 5. கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை - இவனைப் பாடிய புலவர் நரி வெரூஉத் தலையார்
 6. குடக்கோச் சேரல் இரும்பொறை - இவனைப் பாடிய புலவர் பெருங்குன்றூர் கிழார்
 7. சேரமான் யானைகட் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறை - இவனைப் பாடிய புலவர் குறுங்கோழியூர் கிழார் & கூடலூர் கிழார்
 1. தகடூர் நகரை அழித்தவன் * கொல்லிக் கூற்றம் போரில் அதியமான் அரசனை வென்றவன்.
 2. கல்லகப் போரில் இருபெரு வேந்தர்-ஐயும், விச்சிக்கோ அரசனையும் வென்றான். * இளம்பழையன் மாறன் அரசனை வென்றான்.
 3. 3ஆம் அரசனின் தந்தை
 4. அந்துவஞ்சேரல் இரும்பொறை அரசனும், உறையூர் ஏணிச்சேரியில் வாழ்ந்த புலவர் முட மோசியாரும் கருவூர் வேண்மாடத்தில் இருந்தனர். இந்த வேண்மாடம் அந்துவஞ்சேரலின் மாடம். சோழன் முடித்தலைக் கோப் பெரு நற்கிள்ளி யானைமீது ஏறிக் கருவூருக்குள் நுழைந்தபோது யானைக்கு மதம் பிடித்துவிட்டது. பொறையனிடம் புலவர் யானைமீது இருந்தவன் யார் என்று கூறினார். அவன் துன்பத்திலிருந்து மீள உதவ வேண்டும் என்பதையும் குறிப்பால் உணர்த்தினார். பொறையன் யானையின் மதத்தை அடக்கிக் காப்பாற்றினான் எனலாம்.
 5. பிணம் தின்னும் நரிகூட அஞ்சும் தலையைப் பெற்றிருந்த புலவர் நரிவெரூஉத் தலையார். இவர் கருவூரைத் தன் தலைநகரமாக மாற்றிக்கொண்ட ஒள்வாட்கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்டபோது நல்லுடம்பு பெற்றார். | புறம் 5
 6. குடக்கோச் சேரல் இரும்பொறையைக் கண்டு புலவர் பெருங்குன்றார் கிழார் பரிசில் வேண்டினார். பொறையன் முதல்நாள் பரிசில் தருவது போல நடித்து மறுநாள் தராமல் ஏமாற்றிவிட்டான். புலவர் வறிது மீண்டார். | புறம் 210, 211
 7. யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை கொல்லி நாட்டை அழித்தான் என்றும், தன் நாட்டில் நல்லாட்சி நடத்தினான் என்றும் குறுங்கோழியுர் கிழார் குறிப்பிடுகின்றார். (புறம் 20, 22) * கணித்த நாளில் இவன் இறந்ததைக் கூடலூர் கிழார் பாடியுள்ளார். (புறம் 229)

இந்தத் தொகுப்பை எண்ணிப் பார்க்கும் போது இந்த 7 அரசர்களும் வெவ்வேறு அரசர்கள் எனபதைத் தெளிவாக உணரமுடிகிறது. 'இரும்பொறை' என்னும் இவர்களது பெயர்களுக்குத் தரப்பட்டுள்ள அடைமொமொழிகள் வேறுபடுகின்றன. அவர்களது செயல்கள் வேறுபடுகின்றன. பாடிய புலவர்களிலும் வேறுபாடு காணப்படுகிறது. இனவே சேரர் வரலாற்றில் இவர்களது வரலாறுகளைத் தனித்தனியே கொள்ளவேண்டும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பொறை&oldid=3294210" இருந்து மீள்விக்கப்பட்டது