இரெ. இளம்வழுதி

இந்திய அரசியல்வாதி

இரெ. இளம்வழுதி (Ere. Elamvazhuthi) (பிறப்பு: 5 செப்டம்பர் 1925) என்பவர் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆவார்.

இரெ. இளம்வழுதி
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
4 மார்ச்சு 1967 – 22 அக்டோபர் 1970
முன்னையவர்பி. ஆர். சீனிவாசன்
பின்னவர்ஆர். கோவிந்தராஜன்
தொகுதிகடலூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இரெ. தண்டபாணி

5 செப்டம்பர் 1925
சங்கிலிகுப்பம்,
தென் ஆற்காடு மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு22 அக்டோபர் 1970(1970-10-22) (அகவை 45)
கடலூர், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்விசாலாட்சி (இறப்பு) அண்ணப்பூரணி
உறவுகள்வெற்றிமாறன்
(மகள்வழிப் பேரன்)
பிள்ளைகள்மேகலா
இ. புகழேந்தி
உதயராணி
கலையரசி
மாலதி
பன்னீர்செல்வம்
பெற்றோர்செளந்தரம் (தாய்) இரெங்கசாமி (தந்தை)
கல்வி
வேலைஅரசியலர், வழக்கறிஞர்

தொடக்க வாழ்க்கை

தொகு

கடலூருக்கு அருகிலுள்ள சங்கிலிகுப்பம் என்ற சிற்றூரில் இரெங்கசாமி மற்றும் செளந்தரம் இணையரின் மகனாகப் பிறந்தார்.

கல்வி

தொகு

இவர் தனது பள்ளிப்படிப்பை கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் (ஒரு பள்ளிக்கூடம் என்றாலும், கல்லூரி என்று அழைக்கப்பட்டது) கற்றார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்களைப் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.

தொழில்

தொகு

தமிழ், ஆங்கில மொழிகளில் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் சிறந்த பேச்சாளராகவும் இருந்தார்.

அரசியல்

தொகு

இளம்வழுதி 1967 முதல் 1970 வரை தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் கடலூர் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வெற்றிபெற்றவர்.[1] பெரியார் ஈ.வி.ராமசாமி மற்றும் கா. நா. அண்ணாதுரை ஆகியோருடன் நெருக்கமாக இருந்தார். திராவிடக் கொள்கையில் கொண்டிருந்த இடைவிடாத நம்பிக்கையும் ஆதரவும் காரணமாகத் தனது பெற்றோர் வைத்த தண்டபாணி என்ற பெயரினை இளம்வழுதி என மாற்றிக்கொண்டார்.

தனி வாழ்க்கை

தொகு

இவர் விசாலாட்சியை மணந்தார். விசாலாட்சி ஒரு விபத்தில் மரணமடைந்ததையடுத்து அன்னபூரணி என்பவரை மணந்தார்.

தமிழ்ப் பற்றின் காரணமாக தன் குழந்தைகளுக்கு மேகலா, புகழேந்தி, உதயராணி, கலையரசி, மாலதி மற்றும் பன்னீர் செல்வம் என தனித் தமிழில் பெயரிட்டார்.

இவர்களுள் மேகலாவின் மகன் வெற்றிமாறன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார்.[2]

மறைவு

தொகு

இளம்வழுதி 22 அக்டோபர் 1970 அன்று மாரடைப்பால் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.
  2. "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - மேகலா சித்ரவேல்". www.tamilonline.com. பார்க்கப்பட்ட நாள் 2024-09-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரெ._இளம்வழுதி&oldid=4085871" இலிருந்து மீள்விக்கப்பட்டது