இரேனியம் எப்டாபுளோரைடு

இரேனியம் எப்டாபுளோரைடு (Rhenium heptafluoride) என்பது ReF7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறத்தில் குறைவான உருகுநிலை கொண்டதாக இச் சேர்மம் காணப்படுகிறது. வெப்பத்திலும் நிலைப்புத் தன்மை கொண்ட ஒரே உலோக எப்டாபுளோரைடு இரேனியம் எப்டாபுளோரைடு ஆகும்[1]. அயோடின் எப்டாபுளோரைடில் உள்ளது போலவே இச்சேர்மத்திலும் சிதைந்த ஐங்கோண இரட்டைப்பட்டைக் கூம்பு கட்டமைப்பு காணப்படுகிறது. 1.5 கெல்வின் வெப்பநிலையில் தோன்றும் நியூட்ரான் விளிம்பு இதை உறுதிப்படுத்துகிறது[2] . எலக்ட்ரான் விளிம்பு ஆய்வுகள் இக்கட்டமைப்பு திடமானதல்ல என்று தெரிவிக்கின்றன[3] 400 பாகை செல்சியசு வெப்ப நிலையில் இரேனியம் மற்றும் புளோரின் தனிமங்களை வினை புரியச்செய்து இரேனியம் எப்டாபுளோரைடு தயாரிக்கப்படுகிறது:[4]

இரேனியம் எப்டாபுளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரேனியம் எப்டாபுளோரைடு , எப்டாபுளோரிடோ இரேனியம், இரேணியம் எழுபுளோரைடு
இனங்காட்டிகள்
17029-21-9 Y
ChemSpider 26323924 N
InChI
  • InChI=1S/7FH.Re/h7*1H;/q;;;;;;;+7/p-7 N
    Key: HFHBKXWKPQUYIA-UHFFFAOYSA-G N
  • InChI=1/7FH.Re/h7*1H;/q;;;;;;;+7/p-7/rF7Re/c1-8(2,3,4,5,6)7
    Key: HFHBKXWKPQUYIA-KLJGHBABAK
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 123369
SMILES
  • F[Re](F)(F)(F)(F)(F)F
பண்புகள்
ReF7
வாய்ப்பாட்டு எடை 319.196 கிராம்/மோல்
தோற்றம் அடர் மஞ்சள் நிற படிகத் திண்மம்
அடர்த்தி 4.3 கிராம்/செ.மீ3
உருகுநிலை 48.3 °C (118.9 °F; 321.4 K)
கொதிநிலை 73.72 °C (164.70 °F; 346.87 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு முச்சரிவு aP16
புறவெளித் தொகுதி P-1, No. 2
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references
2Re + 7 F2 → 2 ReF7

CsF போன்ற புளோரைடு வழங்கிகளைப் போல இங்கும் ReF8ReF8 எதிர்மின் அயனி ) உருவாகிறது. இது சதுர எதிர் பட்டகக் கட்டமைப்பில் உள்ளது. [5] With ஆன்டிமணி பென்டாபுளோரைடு (SbF5) போன்ற புளோரைடு ஏற்பிகளுடன் ReF6+ நேர்மின் அயனி உருவாகிறது. [4]

மேற்கோள்கள் தொகு

  1. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. Vogt T.; Fitch A. N.; Cockcroft J. K. (1994). "Crystal and Molecular Structures of Rhenium Heptafluoride". Science 263 (5151): 1265–7. doi:10.1126/science.263.5151.1265. பப்மெட்:17817431. 
  3. Jacob, E. Jean; Bartell, L.S.J. (1970). "Electron Diffraction Study of Rhenium Fluorides. II. Structure, Pseudorotation, and Anharmonic Coupling of Modes in ReF7". The Journal of Chemical Physics 53 (6): 2235. doi:10.1063/1.1674318. 
  4. 4.0 4.1 A. F. Holleman; Wiberg, Egon; Wiberg, Nils (2001). Inorganic Chemistry. Boston: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
  5. Hwang, I; Seppelt, K. (2000). "The structures of ReF8 and UF82−". Journal of Fluorine Chemistry 102: 69. doi:10.1016/S0022-1139(99)00248-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேனியம்_எப்டாபுளோரைடு&oldid=2687942" இலிருந்து மீள்விக்கப்பட்டது