இரேனியம் பெண்டாபுளோரைடு
இரேனியம் பெண்டாபுளோரைடு (Rhenium pentafluoride) ReF5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இரேனியமும் புளோரினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. ஐதரோபுளோரிக் அமிலத்தின் இரேனிய உப்பு என்று இது வகைப்படுத்தப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இரேனியம்(V) புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
30937-52-1 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 15796911 |
| |
பண்புகள் | |
F5Re | |
வாய்ப்பாட்டு எடை | 281.20 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் பச்சை நிறப் படிகங்கள் |
அடர்த்தி | கி/செ.மீ3 |
உருகுநிலை | 48 °C (118 °F; 321 K) |
கொதிநிலை | 221.3 °C (430.3 °F; 494.4 K) |
தண்ணீருடன் வினை புரியும் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | நேர்சாய்சதுரம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇரேனியம் அறுபுளோரைடு சேர்மத்துடன் ஐதரசன், இரேனியம், அல்லது தங்குதனைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் இரேனியம் பெண்டாபுளோரைடு உருவாகிறது:
- 2ReF6 + H2 → 2ReF5 + 2HF
- 5ReF6 + Re → 6ReF5
- 6ReF6 + W → 6ReF5 + WF6
இயற்பியல் பண்புகள்
தொகுஇரேனியம் பெண்டாபுளோரைடு நேர்சாய்சதுர படிக அமைப்பில் a = 0.57 நானோமீட்டர், b = 1.723 நானோமீட்டர், c = 0.767 நானோமீட்டர் என்ற செல் அளவுருக்களுடன் மஞ்சள்-பச்சை நிறப் படிகங்களாக உருவாகிறது.[1]
இரேனியம் பெண்டாபுளோரைடு தண்ணீருடன் வினைபுரியும்.
இரேனியம் பெண்டாபுளோரைடு எளிதில் ஆவியாகும். Re2F10 இருபடிகளால் இரேனியம் பெண்டாபுளோரைடு ஆக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Colton, Ray (1965). The Chemistry of Rhenium and Technetium (in ஆங்கிலம்). Interscience Publishers. p. 59. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-16650-5. பார்க்கப்பட்ட நாள் 6 April 2023.