இரௌப் பந்தன்

அப்துல் ரௌப் பந்தன் (Abdool Raouf Bundhun) (பிறப்பு:1937 சனவரி 14 ) [1][2] இவர் மொரிசியசின் துணைத் தலைவராக 2002 முதல் 2007 வரை இருந்தார். மொரிசியசின் தேசிய சட்டமன்றத்தால் 2002 பிப்ரவரி 25 அன்று இவர் ஐந்து ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] பதவியேற்பதற்கு முன்பு இவர் பிரான்சில்மொரிசியசின் தூதராக இருந்தார். இவர் மொரிசியசின் தேசிய சட்டமன்ற உறுப்பினராக 1967 முதல் 1976 வரையிலும், 1995 முதல் 2000 வரையிலும் என இரண்டு முறை இருந்துள்ளார். 1969 முதல் 1975 வரை இவர் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சராக இருந்தார். மேலும் 1969 ஆம் ஆண்டில் சிவசாகர் ராம்கூலம் என்பவரால் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டார். 1976 இல் இவர் மொரிசியசின் எரிசக்தி அமைச்சரானார். இவர் அபிவிருத்தி பணிகள் கழகத்தின் தலைவராக உள்ளார்.[4]

இரௌப் பந்தன்
அப்துல் ரௌப் பந்தன்
இந்தியப் பெருங்கடலின் நட்சத்திரம்
2006இல் இரௌப் பந்தன்
மொரிசியசின் துணைக் குடியரசுத் தலைவர்
பதவியில்
25 பெப்ரவரி 2002 – 24 ஆகத்து 2007
குடியரசுத் தலைவர்கர்ல் ஆப்மென்
அனெரூட் ஜக்நாத்
முன்னையவர்அங்கிடி செட்டியார்
பின்னவர்அங்கிடி செட்டியார்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 சனவரி 1937 (1937-01-14) (அகவை 87)
அமௌரி, மொரிசியசு

குடும்பம்

தொகு
 
தனது தாத்தா குடியேறிய காசீப்பூருக்கு வந்தபோது ஊடகங்களில் உரையாற்றிய பந்தன்

1866 ஆம் ஆண்டில் இவரது தாத்தா பந்தனும், பாட்டி ராஜ்பாசியாவும் இந்தியாவின் காசீப்பூர் மாவட்டம், நௌலி கிராமத்திலிருந்து மொரிசியசுக்கு வந்து குடியேறினர். மார்ச் 2018 இன் போது, இவர் தனது பெரிய தாத்தாவின் கிராமத்தைப் பார்க்க இந்தியா வந்தார்.[4][5]

தொழில்

தொகு

முதலில் ஒரு பொது உதவி அதிகாரியாக அரசுப் பணியிலிருந்த இவர் அரசியலில் சேர பதவி விலகினார்.[6][7] பாரிஸ், இலண்டன், மொரிசுஅசில் கல்வியைப் பெற்றார். இவர் 1969 இல் போர்ட்-லூயிஸின் நகராட்சி உறுப்பினராகராகவும், குவாட்ரே-போர்ன்ஸ் நகரின் மேயராகவும் இருந்தார். 1971 முதல் 1976 வரை அதன் நிர்வாகக் குழுவின் உறுப்பினராக பிரெஞ்சு பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சட்டமன்றத்தில் பணியாற்றினார். 1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொதுநலவாய நாடுகளின் உறுப்பினர் நாடுகளின் சபையில் பங்கேற்ற மொரிசிய தூதுக்குழுவிற்கும், 1976 இல் ஆப்பிரிக்கா ஒற்றுமை அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற தூதுக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.[4] 2010 ஆம் ஆண்டில் பீஸ்மா தேவ் சீபாலக் எழுதிய ஆன் தி விங்ஸ் ஆஃப் டெஸ்டினி: ஏ. ரவுஃப் பந்தன் என்ற இவரது வாழ்க்கை வரலாறுவெளியிடப்பட்டது.[8]

பிரெஞ்சு அரசாங்கம் அவரை ஆபீசர் டி எல் ஆர்ட்ரே டு மெரைட் மற்றும் ஆபீசர் டி எல் ஆர்ட்ரே டி லா ஃபிராங்கோபோனி ஆகிய பட்டங்களுடன் அலங்கரித்தது.[4][8] இந்திய அரசு இவரை 2006 இல் பிரவாசி பாரதீய சம்மான் விருதுடன் கௌரவித்தது.[9]

நூலியல்

தொகு
  • Bhisma Dev Seebaluck (2010). On the Wings of Destiny: A. Raouf Bundhun. Océan Indien. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99903-0-621-7.

மேற்கோள்கள்

தொகு
  1. Profile of Abdool Raouf Bundhun
  2. https://defimedia.info/raouf-bundhun-advent-independence-people-my-generation-felt-lot-building-new-nation
  3. "Political system". Country Environmental Profile Information System. Archived from the original on 16 March 2008. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014.
  4. 4.0 4.1 4.2 4.3 Buglow, Yousuf (26 October 2012). "Raouf Bundhun : "The Pravasi Bharatiya Divas is open to all, regardless of religions and backgrounds"". Defimedia. Le Defi Media Group. Archived from the original on 30 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 23 July 2014.
  5. "Abdool Raouf Visited village of his great grandfather". பார்க்கப்பட்ட நாள் 7 April 2018.
  6. Sheela, Bhatt (10 March 2006). "'We have set an example for India'". ரெடிப்.காம். பார்க்கப்பட்ட நாள் 23 July 2014.
  7. "Muaritius- Raouf Bundhun". The Indian Ocean Newsletter. African Intelligence. 23 February 2002. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014.
  8. 8.0 8.1 "Book R Bundhun". Prime Minister's Office of Mauritius. pp. 2–4. Archived from the original (DOC) on 10 March 2014. பார்க்கப்பட்ட நாள் 25 July 2014.
  9. "Directos-NYLIM JACOB BALLAS". Archived from the original on 28 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 22 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரௌப்_பந்தன்&oldid=3927851" இலிருந்து மீள்விக்கப்பட்டது