இறகுசேரி மும்முடிநாதர் கோயில்
இறகுசேரி மும்முடிநாதர் கோயில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
தஞ்சை மாவட்டதில் இப்பெயருடைய தலம் ஒன்று உள்ளது. இவை இரண்டுமே தேவார வைப்புத்தலமாகக் கொள்ளப்படுகின்றன.[2]
அமைவிடம்
தொகுசிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைக்கு ஒரு கி.மீ தொலைவில் உள்ளது. இறையான்சேரி என்பது மருவி மக்கள் வழக்கில் இறகுசேரி, இரவுசேரி என்று அழைக்கப்படுகிறது.
இறைவன்,இறைவி
தொகுஇங்குள்ள இறைவன் மும்முடிநாதர் ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார். [1]
அமைப்பு
தொகுசெம்பராங்கல்லால் ஆன பழமையான கோயிலை, 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் விரிவு படுத்தி, கற்றளி கோயிலாக எழுப்பி, 05.06.1922இல் குடமுழுக்கு செய்துள்ளனர்.[3]
ஏழுநிலை ராஜகோபுரம், நடராஜ சபை, இறைவன்-இறைவி சன்னதி, நால்வர், சூரியன் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். [1]