இறைச்சித் தொழிற்றுறை

(இறைச்சி தயாரித்தல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இறைச்சித் தொழிற்துறை (ஆங்கிலம்: meat industry) என்பது நவீன தொழில்மயமாக்கப்பட்ட கால்நடை விவசாயத்தைக் கொண்டு இறைச்சியை உற்பத்தி செய்தல், பொட்டலம் கட்டுதல், பாதுகாத்தல், சந்தைப்படுத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள மக்களையும் நிறுவனங்களையும் கொண்ட தொகுப்பாகும். பால் பொருட்கள், கம்பளி உற்பத்தி போன்ற இறைச்சியை விடுத்த இன்ன பிற விலங்குப் பொருட்களின் உற்பத்தி இத்தொழிற்துறையில் அடங்காது. பொருளாதாரச் சிந்தனையில், இறைச்சித் தொழிற்துறை என்பது முதன்மை நிலை (விவசாயம்) மற்றும் இரண்டாம் நிலை (தொழிற்துறை) செயல்பாட்டின் இணைவு ஆகும். இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டும் கொண்டு இறைச்சித் தொழிற்துறையினை வரையறை செய்வது சற்றே கடினம். இறைச்சித் தொழிலின் பெரும்பகுதி இறைச்சிப் பொட்டலத் தொழிற்துறையால் ஆனதாகும். இறைச்சிப் பொட்டலத் தொழிற்துறை என்பது கோழி, கால்நடை, பன்றி, செம்மறியாடு உள்ளிட்ட பண்ணை விலங்குகளைக் கொன்று, பதப்படுத்தி, பொட்டலம் கட்டி, விநியோகம் செய்யும் ஒட்டுமொத்த செயற்பாடுகளைக் கையாளும் பிரிவினை உள்ளடக்கியதாகும்.

2013ல் இறைச்சித் தொழிற்றுறை

உணவுத் தொழிலில் தொடர்ச்சியாக வளர்ந்து வரும் கிளையான[1] இறைச்சித் தயாரிப்பின் பெரும்பகுதி தொழிற்துறை கால்நடை உற்பத்தியை உள்ளடக்கியது. தீவிர விலங்கு வளர்ப்பு என்றும் அழைக்கப்படும் தொழிற்துறை கால்நடை உற்பத்தியில் கால்நடைகள் முழுக்க முழுக்க மூடிய அறைகளுக்குள் வைக்கப்பட்டோ[2] அல்லது வேலியிட்ட திறந்த வெளிக் கூடு உள்ளிட்ட கட்டுப்படுத்தப்பட்ட வெளிப்புற அமைப்புகளிலோ வைக்கப்பட்டோ வளர்க்கப்படுகின்றன. இறைச்சிக்கான விலங்கு வளர்ப்பில் பல அம்சங்கள் இன்று தொழிற்மயமாகிவிட்டன. இதில் பல நடைமுறைகள் சிறிய அளவிலான குடும்பப் பண்ணைகளுடன் தொடர்புடையவை (எ.கா. ஃபோய் கிரா எனப்படும் வாத்துக் கல்லீரல் இறைச்சி உள்ளிட்ட சுவைசார் உணவுகள்[3][4]). நவீன யுகத்தில் கால்நடைகளின் உற்பத்தி என்பது செங்குத்தாக ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாகும், அஃதாவது இதில் பெரும்பாலான விநியோகச் சங்கிலி நிலைகள் ஒருங்கிணைக்கப்பட்டும் ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்குச் சொந்தமானவையாகவும் உள்ளன.

செயல்திற பரிசீலனைகள்

தொகு

கால்நடைத் வளர்ப்பு மற்ற எந்த மனித நடவடிக்கைகளையும் விட அதிக நிலத்தைப் பயன்படுத்துகிறது. அதோடு மட்டுமல்லாது, இது நீர் மாசுபாட்டிற்கு மிகப்பெரிய பங்காற்றுபவைகளில் ஒன்றாகவும் பைங்குடில் வளிம வெளியேற்றத்தின் மிகப்பெரிய மூலமாகவும் திகழ்கிறது. இந்த வகையில், உருவாக்கப்பட்டு வளர்க்கப்படும் விலங்கினத்தின் தீவன மாற்றுத் திறன் இதற்கு பொருத்தமான ஒரு காரணியாக அமைகிறது. கூடுதலாக ஆற்றல், பூச்சிக்கொல்லிகள், நிலம், புதுப்பிக்க முடியாத வளங்களைப் பயன்படுத்துதல் ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி வகைகள், எருமை இறைச்சி போன்றவற்றின் தயாரிப்பு சிவப்பிறைச்சி வகையில் மிக மோசமான செயல்திறனைக் காட்டுகிறது; கோழியிறைச்சியும் முட்டை உற்பத்தியும் இவற்றோடு ஒப்பிடுகையில் சிறந்து விளங்குவனவாகும்.[5]

இறைச்சி மூலங்கள்

தொகு
கணிக்கப்பட்ட உலக கால்நடை எண்ணிக்கை (மில்லியன்)[6]
வகை 1999 2000 2012 % மாற்றம் 1990–2012
கால்நடைகள், எருமைகள் 1445 1465 1684 16.5
பன்றிகள் 849 856 966 13.8
கோழி வகைப் பறவைகள் 11788 16077 24075 104.2
ஆடு வகைகள் 1795 1811 2165 20.6

உலக அளவிலான இறைச்சிப் பொருட்களின் உற்பத்தி

தொகு
 
உலக இறைச்சித் தொழிற்றுறையின் முதல் பத்து நிறுவனங்கள்

நிறுவனங்கள்

தொகு

உலக அளவிலான மிகப் பெரிய இறைச்சி உற்பத்தியாளர்கள்:

  • ஜே.பி.எஸ் எஸ்.ஏ. (JBS S.A.)
  • டைசன் ஃபுட்ஸ் (Tyson Foods)
  • டபுள்யு.எச். குழுமம் (WH Group)

உலக மாட்டிறைச்சி உற்பத்தி

தொகு
உலகம் 66.25 மில்லியன் டன்கள் (2017)[7][8]
நாடு மில்லியன் டன்கள் (2017) உலக அளவில் %
ஐக்கிய அமெரிக்கா 11.91
பிரேசில் 9.55
சீனா 6.90
அர்ஜென்டினா 2.84
ஆஸ்திரேலியா 2.05
மெக்சிகோ 1.93
ரஷ்யா 1.61
பிரான்சு 1.42
ஜெர்மனி 1.14
தென் ஆப்பிரிக்கா 1.01
துருக்கி 0.99

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Global Meat Production and Consumption Continue to Rise". Worldwatch Institute. Archived from the original on 24 January 2013. பார்க்கப்பட்ட நாள் 30 June 2015.
  2. Paul Ebner. "Modern Livestock Facilities". Purdue University. Archived from the original on 22 May 2018. பார்க்கப்பட்ட நாள் 1 March 2016.
  3. "Foie Gras: Cruelty to Ducks and Geese | Ducks and Geese Used for Food | Factory Farming: Misery for Animals | The Issues". PETA. 21 June 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-01-16.
  4. "An Animal Equality investigation". Foie Gras farms. பார்க்கப்பட்ட நாள் 2017-01-16.
  5. Nina Rastogi (28 April 2009). "The Kindest Cut - Which meat harms our planet the least?". Slate.com. பார்க்கப்பட்ட நாள் 2017-01-16.
  6. "FAO's Animal Production and Health Division: Meat & Meat Products". Fao.org. பார்க்கப்பட்ட நாள் 2017-01-16.
  7. "FAOSTAT". www.fao.org. பார்க்கப்பட்ட நாள் 2019-10-18.
  8. "World Beef Production: Ranking Of Countries". Beef2live.com. 2016-12-30. பார்க்கப்பட்ட நாள் 2017-01-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறைச்சித்_தொழிற்றுறை&oldid=3744869" இலிருந்து மீள்விக்கப்பட்டது