இறைவனுக்கான மரியாதை முறை
இறைவனுக்கான மரியாதை முறைகள் என்பது இந்து சமயத்தில் உபசாரங்கள் என அழைக்கப்படுகிறது. இந்த உபசார முறைகள் அரசர்களின் வருகையின் பொழுது கைடைபிடிக்கப்பட்டு வந்த காலத்தில் இறைவனுக்கு உகந்த முறையில் மாற்றம் செய்து கோயில்களில் கடைபிடிக்கப்பட்டன.
இந்த மரியாதை முறைகள் கடைபிடிக்கப்படுகின்ற எண்ணிக்கையின் அடிப்படையில் சமஸ்கிருத மொழியில் பெயரிடப்படுள்ளன.
- பஞ்சோபச்சாரம் - ஐந்து
- ஷடோபச்சாரம் - ஆறு
- தாசோபச்சாராம் - பத்து
- துவாதசபச்சாரம் - பன்னிரண்டு
- ஷோடோசுபச்சாரம்-பதினாறு
- அஷ்டத்ரிம்சத்பசாரம் - முப்பத்து எட்டு
- சதுஷ்ஷஸ்திபச்சாரம் -அறுபத்து நான்கு
பஞ்சோபச்சாரம்
தொகுமனிதன் வாழ்விற்கு அடிப்படை ஆதாரங்களாக விளங்கும் நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் எனும் ஐந்து வசதிகளை வழங்கிய கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வழிபாட்டில் தாங்கள் வணங்கும் கடவுளுக்கு ஐந்து விதமான செயல்களைச் செய்கின்றனர். இது பஞ்சோபசாரம் எனப்படுகிறது. [1]
அவை
- சுவாமி சிலை அல்லது படத்துக்கு சந்தனமிடுதல்
- பூக்கள் கொண்டு பூசித்தல்
- தீபமேற்றிக் காட்டுதல்
- தூபம் போடுதல்
- நைவேத்தியம் (உணவு) படைத்தல்
-இவற்றில் சந்தனமிடுதல் நிலத்தையும் (பிருதிவி தத்துவம்) , பூக்கள் போட்டு அர்ச்சனை செய்வது ஆகாயத்தையும், தீபம் காட்டுதல் நெருப்பையும், தூபமிடுதல் வாயுவையும், உணவு படைத்தல் நீரையும் குறிக்கிறது.
தசோபசாரம்
தொகுதசோபசாரம் என்பது இந்து மதத்தில் இறைவனுக்கு செய்யப்படும் பத்துவகையான உபசார முறைகளாகும். வடமொழியில் தசம் என்பது பத்து என்ற எண்ணிக்கையை குறிக்கின்றது. உபசாரங்களை கிரியைகள் எனவும் கூறுவர், எனவே தசகிரியைகள் என்று மறுபெயரிட்டும் இது அழைக்கப்படுகிறது. [2]
துவாதச உபசாரங்கள்
தொகுதுவாதச உபசாரங்கள் என்பவை இந்துக் கடவுள்களுக்கு செய்யப்படும் பன்னிரெண்டு வகையான உபசாரங்களைக் குறிப்பதாகும். இவை பதினாறு வகையான உபசாரமுறையான சோடச உபசாரத்திலிருந்து ஆஸனம் (இ௫க்கை) ஸ்வாகதம் (வரவேற்றல்) வஸ்த்ரம் (ஆடை) பூஷா (அணிகள்) ஆகியவை நீங்களாக உள்ள பன்னிரு உபசாரங்களாகும். [3] இவ்வுபசார முறையானது த்வாதச உபசாரா எனவும் அழைக்கப்படுகிறது.
சோடச உபசாரம்
தொகுசோடச உபசாரம் என்பது இந்து கோவில்களில் இறைவனுக்கு நைவேத்யத்தினை தொடர்ந்து செய்யப்படும் பதினாறு வகையான உபசாரங்களாகும். இதனை சோடச உபசார பூஜை, சோடச தீபாராதனை, சோடச தீபாராதனை உபசாரம் எனவும் அழைப்பர். தஞ்சை நால்வரில் ஒருவரான சிவானந்தம் என்பவர் இப்பூஜைக்கு நிருத்ய நியதிகளையும் முறைகளையும் உருவாக்கியவராக அறியப்பெறுகிறார்[4].
இந்த உபசார முறைகள் பண்டைய இந்தியாவில் அரசர்களுக்கு செய்யப்பட்டவையாகும். பின்பு அவைகள் இறைவனுக்கு செய்யப்படுபவைகளாக மாற்றப்பட்டன[5].
அஷ்ட த்ரிம்சத் உபசாரங்கள்
தொகுஅஷ்ட த்ரிம்சத் உபசாரங்கள் என்பவை இந்து சமயக் கடவுளுக்கு செய்யப்படும் முப்பத்து எட்டு உபசார முறைகளைக் குறிப்பதாகும். இவ்வுபசார முறையானது அஷ்ட த்ரிம்சத் உபசாரா என்றும் அழைக்கப்படுகிறது.[6]
சதுஷ்டி உபசாரங்கள்
தொகுசதுஷ்டி உபசாரங்கள் என்பது இந்துக் கடவுள்களுக்கு செய்யப்படும் அறுபத்து நான்கு உபசாரங்களை குறிப்பதாகும்.[7] இது சதுஷ்-சஷ்டி உபசார பூஜை எனவும் அழைக்கப்படுகிறது. இப்பூசை முறையானது சக்தி வழிபாட்டிற்கு மட்டும் உரியதாகும். [8]
இவற்றையும் காண்க
தொகுஆதாரங்கள்
தொகு- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=16034
- ↑ சைவ சமய சிந்தாமணி நூல் - சைவப்புலவர் கா அருணாசல தேசிகமணி பக்கம் 82
- ↑ http://kalyaanam.co.in/stotra.html த்வாதச உபசாரா
- ↑ http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20303021&format=print&edition_id=20030302 பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம் பரத நாட்டியம் - சில குறிப்புகள் - வைஷாலி
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-05-10.
- ↑ http://kalyaanam.co.in/stotra.html அஷ்ட த்ரிம்சத் உபசாரா
- ↑ http://mytamilmagazine.net/Read_Magazine.php?magazine_id=57[தொடர்பிழந்த இணைப்பு] அம்பிகையின் சக்ரபூசை சிறப்பு
- ↑ http://kalyaanam.co.in/stotra.html சது ஷஷ்டி உபசாரா