இலங்கையின் நீண்ட வால் மூஞ்சுறு
இலங்கையின் நீண்ட வால் மூஞ்சுறு (Sri Lankan long-tailed shrew)(குரோசிடுரா மையா) என்பது சொரிசிடே குடும்பத்தில் உள்ள பாலூட்டி சிற்றினமாகும். இது இலங்கையில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இலங்கையில் சிங்கள மொழியில் ශ්රී ලංකා කුනු හික් මීයා என அறியப்படுகிறது. வாழிட இழப்பு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இலங்கையின் நீண்ட வால் மூஞ்சுறு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபொடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | குரோசிடுரா
|
இனம்: | C. miya
|
இருசொற் பெயரீடு | |
Crocidura miya பிலீப்சு, 1939 | |
இலங்கையின் நீண்ட வால் மூஞ்சூறு பரம்பல் |
விளக்கம்
தொகுதலை மற்றும் உடல் நீளம் 7 முதல் 8.5 செ. மீ. வரையும், வாலின் நீளம் 9 முதல் 10 செ. மீ. வரையும் இருக்கும். முடியின் அடிப்பகுதி சாம்பல் நிறத்துடன் மேலே பழுப்பு நிறமாகவும், கீழே சற்று இலகுவாகவும் இருக்கும். வால் பழுப்பு நிறமானது, உடலை விட நீளமானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Dando, T.; Kennerley, R. (2019). "Crocidura miya". IUCN Red List of Threatened Species 2019: e.T5608A22298694. doi:10.2305/IUCN.UK.2019-3.RLTS.T5608A22298694.en. https://www.iucnredlist.org/species/5608/22298694. பார்த்த நாள்: 17 November 2021.