இலட்சுமிகாந்தன் கோயில், கலாலே.

இலட்சுமிகாந்தன் கோயில், (Lakshmikanta Temple, Kalale) ஒரு இந்து மத (வைணவ) கோயிலாகும். இது, இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள மைசூர் மாவட்டத்தில், நஞ்சன்கூடு தாலுகாவைச் சேர்ந்த கலாலே கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த கோயில் குறைந்தது 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், வழக்கமான திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது என அறியப்படுகிறது. இந்த கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வின் கர்நாடக மாநில பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக உள்ளது.[1]

இலட்சுமிகாந்தன் கோயில்
Hindu temple
திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ள இலட்சுமிகாந்தன் கோயில்
திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ள இலட்சுமிகாந்தன் கோயில்
இலட்சுமிகாந்தன் கோயில் is located in கருநாடகம்
இலட்சுமிகாந்தன் கோயில்
இலட்சுமிகாந்தன் கோயில்
Location in Karnataka, India
ஆள்கூறுகள்: 12°05′0″N 76°40′0″E / 12.08333°N 76.66667°E / 12.08333; 76.66667
Countryஇந்தியா
StateKarnataka
DistrictMysore
TalukasNanjangud
Languages
 • OfficialKannada
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

வரலாறு தொகு

இலட்சுமிகாந்தன் கோயில் மைசூர் இராச்சியத்தின் சில மன்னர்களின் ஆதரவில் இருந்தது. இக் கோயிலுக்கு மைசூர் வோடியார் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் தொட்ட கிருட்டிணராசாவால் பகட்டான மானியங்கள் c.1732 க்கு முன்பு வழங்கப்பட்டன.[2] 18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், சக்திவாய்ந்த கலாலே குடும்பத்தைச் சேர்ந்த தலவோய் (நிலப்பிரபுக்கள்) தேவராஜியா தனது கடைசி ஆண்டுகளில் இந்து கடவுளான ராமரின் உலோக உருவத்தை இக் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கினார்.[3] ஹபீப் ஹசன் மற்றும் சம்பத் போன்றோரின் கூற்றுப்படி, 1791 ஆம் ஆண்டில், மைசூரின் ஆட்சியாளராக இருந்த, திப்பு சுல்தான், வெள்ளியினால் செய்யப்பட்ட, நான்கு கோப்பைகள், ஒரு தட்டு மேலும் ஒரு எச்சிற் படிகம் (துப்புத்தொட்டி) போன்றவற்றை கோயிலுக்கு பரிசுகளாக வழங்கினார். பரிசுகளில் உள்ள கல்வெட்டுகள் "திப்பு சுல்தான் பாஷா" என்பவரால் செய்யப்பட்டன என்பதற்கான சான்றுகளை ஹபீப் மற்றும் ஹசன் கூறுகின்றனர்.[4][5][6]

படத்தொகுப்பு தொகு

குறிப்புகள் தொகு

  1. "Protected Monuments in Karnataka". Archaeological Survey of India, Government of India. Indira Gandhi National Center for the Arts. பார்க்கப்பட்ட நாள் 10 August 2012.
  2. Sampath, Vikram, (2008), Splendours of Royal Mysore, Chapter: The Dalavoy Regime AD 1704-1734, Section:Decline of the Wodeayrs, Rupa Publications,
  3. Conjeeveram Hayavadana Rao (Rao Sahib), Benjamin Lewis Rice (1930), p328, Historical, Government Press, Mysore
  4. Sampath, Vikram, (2008), Splendours of Royal Mysore, Chapter: The Sword of Tipu Sultan AD 1791-1799, Section:The Controversial Sultan, Rupa Publications,
  5. Habib, Irfan (2002), p118, Confronting Colonialism: Resistance and Modernization Under Haidar Ali & Tipu Sultan, Anthem Press, London, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-84331-024-4
  6. Hasan, Mohibbul (1951), p360, History of Tipu Sultan, Aakar Books, Delhi, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-87879-57-2

வெளி இணைப்புகள் தொகு