இலட்சுமி என். மேனன்

மலையாள எழுத்தாளர்

லட்சுமி என். மேனன் (Lakshmi N. Menon) (பிறப்பு: 1899 மார்ச் 27 [1] - இறப்பு: 1994 நவம்பர் 30 [2] ) இவர் ஓர் இந்திய சுதந்திர போராட்ட வீரரும் [3] ஆசிரியரும், வழக்கறிஞரும், சமூக ஆர்வலரும் மற்றும் அரசியல்வாதியுமாவார். இவர் 1962 முதல் 1966 வரை மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார்.[4] இந்திய அரசியலமைப்பின் ஆவணத்தில் கையொப்பமிட்டவர்களில் லட்சுமி மேனன் ஒருவர் என்று கூறப்படுகிறது.[5]

மேனன் (முன் வரிசை, இடது) வெள்ளை மாளிகையில் ஒரு விருந்தில் கலந்து கொண்டார். 1963 சூன் 3.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

பிரபல சீர்திருத்தவாதியும், கல்வியாளருமான இராம வர்மா தம்பன் மற்றும் மாதவிக்குட்டி அம்மா ஆகியோருக்கு மகளாக திருவனந்தபுரத்தில் பிறந்தார். சிறுமியாக தனது 6 வயதிலேயே தாயை இழந்து தனது பாட்டி இலட்சுமிகுட்டி அம்மாவால் வளர்க்கப்பட்டார். 1930 ஆம் ஆண்டில், பேராசிரியர் வி. கே. நந்தன் மேனன் என்பவரை மணந்தார். பின்னர் திருவிதாங்கூர் பல்கலைக்கழகம் (1950-1951) [6] மற்றும் பாட்னா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் இயக்குநராகவும் ஆனார் .

இலட்சுமி திருவனந்தபுரத்தில் உள்ள மகாராஜாவின் பள்ளியில் பயின்றார், 1920 இல் மகாராஜா கலைக் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை பட்டம் பெற்றார். (ஆங்கிலத்தில் புலமைக்கான பல்கலைக்கழக பதக்கத்துடன்). பின்னர் இவர் மகாராஜா உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு கற்பித்தார். 1922இல் பொருளாதாரம் மற்றும் சமூக அறிவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பின்னர் இவர் சென்னை மற்றும் லேடி வில்லிங்டன் பயிற்சி கல்லூரிக்கு சென்றார். ஒரு கல்வியாளராக உயர் தகுதிகளைப் பெற இலண்டனின் மரியா கிரே பயிற்சி கல்லூரிக்கு கடல்களைக் கடந்து பயணம் செய்தார். 1920கள் மற்றும் 1930களில், அன்னி பெசண்ட், மார்கரெட் கசின்சு மற்றும் சரோஜினி நாயுடு போன்றவர்கள் இவரது சிந்தனையை பாதித்தனர். ‘மதர் இந்தியா’ என்ற புத்தகம் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டபோது இவர் இலண்டனில் இருந்தார்.[5]

தொழில்

தொகு

இவர் 1952 முதல் 1966 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.[1] இவர் 1952 முதல் 1957 வரை வெளிவிவகார அமைச்சகத்தில் நாடாளுமன்ற செயலாளராகவும், 1957 முதல் 1962 வரை துணை அமைச்சராகவும், 1966 வரை மாநில அமைச்சராகவும் பணியாற்றினார்.[4] 1967 ஆம் ஆண்டில் அரசியல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர், சமூகப் பணிகளுக்கும், ஆக்சுபோர்டு பல்கலைக் கழக அச்சகம் வெளியிட்ட ஆக்சுபோர்டு துண்டுப்பிரசுரங்களுக்கான இந்திய விவகாரத் தொடரில் இந்தியப் பெண்களைப் பற்றி மற்றவர்களுடன் இணைந்து ஒரு புத்தகத்தையும் எழுதினார். இந்தியாவில் பல்கலைக்கழக பெண்கள் கூட்டமைப்பை அமைக்க இவர் உதவினார். இவரது சேவைகளை அங்கீகரிக்கும் விதமாக, இவருக்கு 1957 இல் பத்ம பூசண் வழங்கப்பட்டது.[7]

மேனன் தனது வாழ்க்கையை அரசியலுக்குப் பிறகு தேசத்திற்காக அர்ப்பணித்தார். அகில இந்திய மகளிர் மாநாட்டிற்கு பல ஆண்டுகளாக தலைவராகவும் புரவலராகவும் பணியாற்றினார். மொரார்ஜி தேசாயுடன் அகில இந்திய தடை அமைப்பின் துணைத் தலைவராக இருந்துள்ளார். 1988 ஆம் ஆண்டில், ஏ. பி. உதயபானு மற்றும் ஜான்சன் ஜே எடயரன்முலா ஆகியோருடன் மது மற்றும் மருந்து தகவல் மையத்தை (ஏடிஐசி) -இந்தியா என்பதை நிறுவி, அவர் இறக்கும் வரை அதன் தலைவராக பணியாற்றினார். பெண்கள் மத்தியில் கல்வியறிவை ஒழிப்பதற்கான அகில இந்தியக் குழுவின் தலைவராகவும், 1972 முதல் 1985 வரை கஸ்தூர்பா காந்தி தேசிய நினைவு அறக்கட்டளையின் தலைவராகவும் பணியாற்றினார்..[8]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 Rajya Sabha members biographical sketches 1952 - 2003. rajyasabha.nic.in.
  2. IASSI Quarterly, Volume 15. Indian Association of Social Science Institutions, 1996.
  3. Lakshmi, C.S. (2 March 2000). "Strong voice, solid ideas". தி இந்து. http://www.thehindu.com/2000/04/02/stories/13020615.htm. பார்த்த நாள்: 5 March 2016. 
  4. 4.0 4.1 Women Members of the Rajya Sabha. Rajya Sabha Secretariat. New Delhi, 2003.
  5. 5.0 5.1 https://maddy06.blogspot.com/2016/01/remembering-lakshmi-n-menon-lady.html
  6. "University of Kerala, Thiruvananthapuram". way2universities.com. Archived from the original on 6 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 March 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015. {{cite web}}: Unknown parameter |= ignored (help); Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)
  8. Annual Report 2014-15. Kasturba Gandhi National Memorial Trust.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lakshmi N. Menon
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமி_என்._மேனன்&oldid=3593549" இலிருந்து மீள்விக்கப்பட்டது