இலட்சுமி ரகுபதி

இந்திய அரசு அதிகாரி

இலட்சுமி ரகுபதி (Lakshmi Raghupati) (பிறப்பு: செப்டம்பர் 23, 1947 இந்தியாவின் திருவனந்தபுரம் ) ஓர் இந்திய அரசு ஊழியர் ஆவார். இவர் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகத்தின் இயக்குனராக பணியாற்றினார். இவர் 1987 முதல் 2007 வரை அமைச்சகத்தில் பணியாற்றினார். மேலும், கொள்கை மற்றும் மூலோபாய உருவாக்கத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உள்ளீடுகளை வழங்கினார்.[1]

கல்வி தொகு

1971 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில் பிலானியின் பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகத்திலிருந்து முறையே அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இரட்டை முதுகலைப் பெற்றார். 1985இல் இவர் தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியையும் முடித்தார்.

தொழில் தொகு

இவர் சூழல் தாக்க மதிப்பாய்வுத் திட்டத்தில் பணியாற்றினார். இதில் தொழில்துறை திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியும் சுற்றுச்சூழல் உணர்வுள்ள பகுதிகளைக் குறிப்பிடுவது ஆகியவையும் அடங்கும். ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலரான,[2] இவர், புதுதில்லியின் எரிசக்தி மற்றும் வள நிறுவனத்தில் வருகை தரும் ஆசிரியராக பணிபுரிகிறார்.[3] அபாயகரமான கழிவுகளின் எல்லைக் கட்டுப்பாடு மற்றும் அவற்றை அகற்றுவதற்கான ஐக்கிய நாடுகள் சூழல் திட்டத்தின் பேசல் மாநாட்டின் பேச்சுவார்த்தைகளில் இவர் இந்திய அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[4]

வகித்த பதவிகள் தொகு

இவர் 1993-97இல் தொழில்நுட்ப பணிக்குழுவின் தலைவராகவும் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] பேசல் மாநாட்டின் தொழில்நுட்ப மற்றும் சிறப்பு கூட்டங்களில் தொழில்நுட்ப நிபுணராக அழைக்கப்பட்டார். 2005-2007 காலப்பகுதியில், மாசுபட்ட தளங்களுக்கான தேசிய நிவாரணம்/மறுவாழ்வுத் திட்டத்தின் வளர்ச்சி மற்றும் செயல்படுத்தல் குறித்த தொழில்துறை மாசு மேலாண்மை திட்டத்திற்கான உலக வங்கி நிதியுதவி திறனை இவர் கையாண்டார்.

உலக வங்கி, டேனிஷ் சர்வதேச மேம்பாட்டு உதவி போன்ற சர்வதேச நிறுவனங்களின் உதவியுடன் திட்டங்களை இவர் ஒருங்கிணைத்தார். மருத்துவத் தாவர பாதுகாப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் தேசிய மைய இயக்குனராகவும் இருந்தார்.

இவர் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தின் பேசல் மாநாட்டைக் கையாண்டார். அதன் செயலகத்துடன் ஒருங்கிணைக்கப் பொறுப்பேற்றார். இவர் தொழில்நுட்ப பணிக்குழுவில் அமைச்சகத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். தொழில்நுட்ப பணிக்குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவராக இருந்தார். மேலும், கட்சிகளின் மாநாடு சந்திப்பு உட்பட பாசெல் மாநாட்டு கூட்டங்களில் தொழில்நுட்ப நிபுணராக பங்கேற்றார்.

இவர் இந்தியாவின் கழிவு மேலாண்மை கொள்கை மற்றும் அமைப்பின் ஒரு பகுதியாக இருந்தார். பேசல் மாநாட்டிற்காக இந்தியாவில் மின்னணுக் கழிவு மேலாண்மை பற்றிய ஆய்வுக்கு இவர் உதவினார். இந்த்திட்டத்துக்கு 2004 முதல் 2005 வரை சப்பான் அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டது. 2006 முதல் 2007 வரை இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய கழிவு மன்றம் மற்றும் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய கழிவுத் திட்டம் மூலம் இந்தியாவில் மின்னணு-கழிவு மேலாண்மைக்கான சாலை வரைபடத்தைத் தயாரித்தார்.

இவர் இந்தியத் தொழில்களுக்கான கூட்டமைப்பு போன்ற தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளில் ஆலோசகராகப் பணியாற்றத் தொடங்கினார்.[6] இவர் இந்திய -ஜெர்மன் சுற்றுச்சூழல் திட்டத்தில் 2007 முதல் 2015 வரை பணியாற்றினார். நகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் 2013-14 வரையிலும், வணிகம் மற்றும் தொழில்துறை மன்றத்தில் (அசோசெம்) 2007 முதல் 2009 வரை ரசாயனங்கள் மற்றும் கழிவு மேலாண்மையிலும், 2007 முதல் 2008 வரை புதுதில்லி இந்திய தொழில்களுக்கான கூட்டமைப்பின் அபாயகரமான கழிவுகள் திட்டம் போன்றவற்றில் பணியாறினார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Lakshmi Raghupathy". wrforum.org. Archived from the original on 17 செப்டம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Female; Gurgaon, N. C. R.; India. "Dr LAKSHMI RAGHUPATHY's Page". www.paryavaran.com. Archived from the original on 31 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "TERI School of Advanced Studies". www.terisas.ac.in. Archived from the original on 31 மார்ச் 2019. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "E-Waste Management in South Asia Scoping Exercise" (PDF). Archived from the original (PDF) on 2019-03-31. பார்க்கப்பட்ட நாள் 2021-10-18.
  5. "::--HEWMEP--::". www.bmwmindia.org. Archived from the original on 8 பிப்ரவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "CII". www.cii.in. Archived from the original on 17 செப்டம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமி_ரகுபதி&oldid=3927894" இலிருந்து மீள்விக்கப்பட்டது