இலந்தனம்(III) அயோடைடு
இலந்தனம்(III) அயோடைடு (Lanthanum(III) iodide) LaI என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலந்தனமும் அயோடினும் சேர்ந்து இந்த சேர்மம் உருவாகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இலந்தனம் மூவயோடைடு
| |
இனங்காட்டிகள் | |
13813-22-4 | |
EC number | 237-465-6 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24870325 |
| |
பண்புகள் | |
LaI 3 | |
வாய்ப்பாட்டு எடை | 519.62 |
அடர்த்தி | 25 °செல்சியசில் 5.63 கி/மில்லி |
உருகுநிலை | 772 °C (1,422 °F; 1,045 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇலந்தனம் உலோகத்துடன் பாதரச(II) அயோடைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இலந்தனம்(III) அயோடைடு உருவாகும்.:[2][3]
- 2 La + 3 HgI2 → 2 LaI3 + 3 Hg
உலோக இலந்தனமும் அயோடினும் சேர்ந்து வினை புரிந்தாலும் இலந்தனம்(III) அயோடைடு உருவாகும்.:[2]
- 2 La + 3 I2 → 2 LaI3
இலந்தனம்(III) அயோடைடு கரைசல்களை இலந்தனம் ஆக்சைடை ஐதரயோடிகு அமிலத்தில் கரைப்பதன் மூலம் உருவாக்க முடியும். விளைபொருள் நீராற்பகுப்பு அடைந்து பல்லுருவ ஐதராக்சி இனங்களை உருவாக்கும்.:[4]
- La2O3 + 6 HI → 2 LaI3 + 3 H2O → இதர வினைகள் தொடரும்
இயற்பியல் பண்புகள்
தொகுஇலந்தனம்(III) அயோடைடு புளூட்டோனியம்(III) புரோமைடு சேர்மம் போன்ற 8-ஒருங்கிணைந்த உலோக மையங்கள் அடுக்குகளில் அமைக்கப்பட்ட அதே படிக அமைப்பை ஏற்றுக்கொள்கிறது.[4][5] இந்த செஞ்சாய்சதுர அமைப்பு இலகுவான இலந்தனைடுகளின் (La-Nd) மூவயோடைடுகளுக்குப் பொதுவானதாகும். அதேசமயம் கனமான இலந்தனைடுகள் அறுகோண பிசுமத்(III) அயோடைடு கட்டமைப்பைப் பின்பற்ற முனைகின்றன.[3]
வினைத்திறன்
தொகுஇலந்தனம்(III) அயோடைடு நீரில் மிகவும் கரையக்கூடியதாகும். நீர்த்துப்போகும் தன்மையும் கொண்டுள்ளது.[4] நீரற்ற இலந்தனம்(III) அயோடைடு டெட்ரா ஐதரோ பியூரானுடன் வினைபுரிந்து ஓர் ஒளிமின்னழுத்த அணைவுச் சேர்மத்தை உருவாக்குகிறது, LaI3(THF)4 இதில் சராசரி La-I பிணைப்பு நீளம் 3.16 Å ஆகும்.[6][7] இந்த அணைவுச் சேர்மம் இலந்தனத்தின் அமைடு மற்றும் வளையபெண்டாடையீனைல் அணைவுச் சேர்மங்கள் தயாரிப்பதற்கான தொடக்கப் பொருளாகும்.[6][8]
தொடர்புடைய சேர்மங்கள்
தொகுஇலந்தனம்(III) அயோடைடு ஓர் ஈரயோடைடையும் (LaI2) உருவாக்குகிறது. இதுவோர் அயனிச் சேர்மமுமாகும். கடத்தல் பட்டையில் எலக்ட்ரான் உள்ளடங்காப் பிணைப்பாக்கப்பட்டு {LaIII,2I−,e-} என சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. CeI2, PrI2 மற்றும் GdI2 உட்பட பல இலந்தனைடுகள் இதே போன்ற சேர்மங்களை உருவாக்குகின்றன.[9] இலந்தனம் ஈரயோடைடு PrI2 போன்ற அதே நாற்கோணப் படிக அமைப்பை ஏற்றுக்கொள்கிறது.[10]
இலந்தனம்(III) அயோடைடு ஆர்கான் வளிமண்டலத்தின் கீழ் இலந்தனம் உலோகத்துடன் 1225 கெல்வின் வெப்பநிலையில் தாண்டலம் குழாயில் வினைபுரிந்து La2I5 என்ற கலப்பு இணைதிற சேர்மத்தை உருவாக்குகிறது.[11]
550 °செல்சியசு வெப்பநிலையில் ஆர்கான் வளிமண்டல சூழலில் உலோக சோடியத்துடன் LaI2 அல்லது LaI3 சேர்மத்தை குறைப்பதால் அறுகோண படிக அமைப்பைக் கொண்ட இலந்தனம் மோனோ அயோடைடு ( LaI) உருவாகிறது.[12]
மேற்கோள்கள்
தொகு- ↑ Taylor, Moddie D. (1962). "Preparation of Anhydrous Lanthanon Halides". Chem. Rev. 62 (6): 503–511. doi:10.1021/cr60220a001.
- ↑ 2.0 2.1 Corbett, John D. & Simon, Arndt (1984). "Chapter 6: Lanthanum Triiodide (and Other Rare Earth Metal Triiodides)". In Holt Jr., Smith L. (ed.). Inorg. Synth. Vol. 22. pp. 11–16. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470132531.ch6.
- ↑ 3.0 3.1 Asprey, L. B.; Keenan, T. K.; Kruse, F. H. (1964). "Preparation and Crystal Data for Lanthanide and Actinide Triiodides". Inorg. Chem. 3 (8): 1137–1141. doi:10.1021/ic50018a015. https://digital.library.unt.edu/ark:/67531/metadc867868/.
- ↑ 4.0 4.1 4.2 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 949–950. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ Wells, A. F. (1984). Structural Inorganic Chemistry (5th ed.). Oxford University Press. p. 420. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-965763-6.
- ↑ 6.0 6.1 Ortu, Fabrizio (2022). "Rare Earth Starting Materials and Methodologies for Synthetic Chemistry". Chem. Rev. 122 (6): 6040–6116. doi:10.1021/acs.chemrev.1c00842. பப்மெட்:35099940.
- ↑ Li, Yangjuan; Chen, Xiuting; Gong, Yu (2021). "Photoluminescence of LaI3 switched on and off by association and dissociation of non-luminescent tetrahydrofuran". Dalton Trans. 50 (11): 3797–3800. doi:10.1039/D1DT00162K. பப்மெட்:33720234.
- ↑ Windorff, Cory J.; Dumas, Megan T.; Ziller, Joseph W.; Gaunt, Andrew J.; Kozimor, Stosh A.; Evans, William J. (2017). "Small-Scale Metal-Based Syntheses of Lanthanide Iodide, Amide, and Cyclopentadienyl Complexes as Analogues for Transuranic Reactions". Inorg. Chem. 56 (19): 11981–11989. doi:10.1021/acs.inorgchem.7b01968. பப்மெட்:28915015.
- ↑ Wells, A. F. (1984). Structural Inorganic Chemistry (5th ed.). Oxford University Press. p. 1250. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-965763-6.
- ↑ Burrow, J. H.; Maule, C. H.; Strange, P.; Tothill, J. N.; Wilson, J. A. (1987). "The electronic conditions in the 5d1 layer-metal LaI2 making comparison with the iso-electronic tantalum dichalcogenides, with the other RE di-iodides, and with the RE monochalcogenides". J. Phys. C: Solid State Phys. 20 (26): 4115–4133. doi:10.1088/0022-3719/20/26/014. Bibcode: 1987JPhC...20.4115B.
- ↑ Mattausch, Hj.; Oeckler, O.; Simon, A. (2003). "Crystal structure of dilanthanum pentaiodide, La2I5". Z. Kristallogr. NCS 218 (3): 281. doi:10.1524/ncrs.2003.218.3.281.
- ↑ Ryazanov, Mikhail; Kienle, Lorenz; Simon, Arndt; Mattausch, Hansjürgen (2006). "New Synthesis Route to and Physical Properties of Lanthanum Monoiodide". Inorg. Chem. 45 (5): 2068–2074. doi:10.1021/ic051834r. பப்மெட்:16499368.