இலந்தனம்(III) சல்பைடு
இலந்தனம்(III) சல்பைடு (Lanthanum(III) sulfide) என்பது La2S3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலந்தனமும் கந்தகமும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[2][3][4]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இலந்தனம்(3+);முச்சல்பைடு
| |
வேறு பெயர்கள்
இரு இலந்தனம் முச்சல்பைடு, இலந்தனம் செசுக்கியுசல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
12031-49-1 | |
ChemSpider | 145449 |
EC number | 235-592-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 165996 |
| |
பண்புகள் | |
La2S3 | |
வாய்ப்பாட்டு எடை | 373.99 g·mol−1 |
தோற்றம் | செம்மஞ்சள் படிகங்கள் |
அடர்த்தி | 4.9 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 2,100 °C (3,810 °F; 2,370 K) |
தண்ணீருடன் வினை புரியும் | |
தீங்குகள் | |
GHS pictograms | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய நேர் மின்அயனிகள் | சீரியம்(III) சல்பைடு, புரோமித்தியம்(III) சல்பைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஉலோக இலந்தனத்தின் மீது கந்தக ஆவியைச் செலுத்தி இலந்தனம்(III) சல்பைடு தயாரிக்கப்படுகிறது.
- 2 La + 3 S -> La2S3
இலந்தத்தின் மீது ஐதரசன் சல்பைடு வாயுவைச் செலுத்தியும் இதை தயாரிக்கலாம்.
- 2 La + 3H2S → La2S3 + 3 H2
ஒடுக்கும் முகவர்கள் முன்னிலையில் இலந்தனம் ஆக்சைடு மீது ஐதரசன் சல்பைடு வாயுவைச் செலுத்துவதாலும் இலந்தனம்(III) சல்பைடு உருவாகிறது.
- La2O3 + 3 H2S + 3 C → La2S3 + 3 CO2 + 3 H2
இயற்பியல் பண்புகள்
தொகுஇரு இலந்தனம் முச்சல்பைடு கனசதுரப் படிக அமைப்பில் இடக்குழு I43d மற்றும் a = 0.8706 நானோமீட்டர் என்ற அலகு செல் அளவுருவுடன் செம்-மஞ்சள் நிறப் படிகங்களாக இலந்தனம்(III) சல்பைடு உருவாகிறது.[5] குளிர்ந்த நீரில் இது கரையாது.
வேதிப்பண்புகள்
தொகு- தண்ணீருடன் இலந்தனம்(III) சல்பைடு வினைபுரிந்து இலந்தனம் ஐதராக்சைடை கொடுக்கிறது:
- La2S3 + 6 H2O -> 2 La(OH)3 + 3 HS
- அமிலங்களுடன் வினைபுரிந்து தொடர்புடைய உப்புகளை உருவாக்குகிறது:
- La2S3 + 3 HCl -> 2 LaCl3 + 3 H2S
- வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிசனுடன் வினைபுரிகிறது:
- 2 La2S3 + 9 O2 -> 2 La2O3 + 6 SO2
பயன்கள்
தொகுஇலந்தனம்(III) சல்பைடு அணைவுச் சேர்மங்களைத் தயாரிப்பதற்கு முன்னோடியாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கண்ணாடி உற்பத்தி மற்றும் கண்ணாடி இழை உற்பத்தியிலும் பயன்படுத்தப்படுகிறது.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lanthanum Sulfide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 27 July 2024.
- ↑ "Lanthanum (III) Sulfide (La2S3) Powder (CAS 12031-49-1)" (in ஆங்கிலம்). samaterials.com. பார்க்கப்பட்ட நாள் 27 July 2024.
- ↑ "Lanthanum(III) sulfide | CAS 12031-49-1 | SCBT - Santa Cruz Biotechnology" (in ஆங்கிலம்). scbt.com. பார்க்கப்பட்ட நாள் 27 July 2024.
- ↑ Bouroushian, Mirtat (23 April 2010). Electrochemistry of Metal Chalcogenides (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 32. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-642-03967-6. பார்க்கப்பட்ட நாள் 27 July 2024.
- ↑ Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. p. 3548. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-412-30120-9. பார்க்கப்பட்ட நாள் 27 July 2024.
- ↑ "Lanthanum(III) sulfide, 99% (REO), Thermo Scientific Chemicals | Fisher Scientific" (in ஆங்கிலம்). Fisher Scientific. பார்க்கப்பட்ட நாள் 27 July 2024.