இலந்தனம் பாசுபைடு

வேதிச் சேர்மம்

இலந்தனம் பாசுபைடு (Lanthanum phosphide) என்பது LaP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. இலந்தனமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. இலந்தனத்தின் பாசுபைடு சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும்.[1][2][3]

இலந்தனம் பாசுபைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பாசுபேனைலிடின் இலந்தனம்
இனங்காட்டிகள்
25275-74-5
EC number 246-782-9
InChI
  • InChI=1S/La.P
    Key: GZHCNRONBGZNAH-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 91371
  • P#[La]
பண்புகள்
LaP
வாய்ப்பாட்டு எடை 169.88
தோற்றம் கருப்பு நிறப் படிகங்கள்
அடர்த்தி 5.2 கி/செ.மீ3
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

இலந்தனம் உலோகத்தை மிகையளவு பாசுபரசுடன் சேர்த்து வெற்றிடத்தில் வினைபுரியச் செய்தால் இலந்தனம் பாசுபைடு உருவாகிறது:[4]

 

இயற்பியல் பண்புகள்

தொகு

கனசதுர திட்டத்தில் Fm3m என்ற இடக்குழுவில் a = 0.601 நானோமீட்டர், Z = 4 என்ற அலகு அடையாளக்கூறுகளில் இலந்தனம் பாசுபைடு கருப்பு நிற படிகங்களாக உருவாகிறது.

நிலைப்புத்தன்மையற்ற இப்படிகங்கள் காற்றில் சிதைவடைகின்றன.

வேதிப் பண்புகள்

தொகு

இலந்தனம் பாசுபைடு தண்ணீருடன் வினைபுரிந்து உயர் நச்சாகக் கருதப்படும் பாசுபீன் வாயுவை வெளியிடுகிறது.

 

பயன்கள்

தொகு

உயர் ஆற்றல் நிலை, உயர் அலைவரிசை பயன்பாடுகள், சீரொளி மற்றும் இதர ஒளியியல் இருமுனையங்களில் இட்டெர்பியம் பாசுபைடு ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.[1][5][6]

இலந்தனம் பல்பாசுப்பேட்டு

தொகு

இலந்தனம் பாசுபைடுடன் கூடுதலாக இலந்தனம் மிகையளவு பாசுபரசுடன் வினைபுரிந்து LaP5[7] மற்றும் LaP7 போன்ற சேர்மங்களையும் கொடுக்கிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Lanthanum Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
  2. NBS Monograph (in ஆங்கிலம்). National Bureau of Standards. 1959. p. 189. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
  3. Standard X-ray Diffraction Powder Patterns (in ஆங்கிலம்). U.S. Department of Commerce, National Bureau of Standards. 1953. p. 69. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
  4. Journal of General Chemistry of the U.S.S.R. in English Translation (in ஆங்கிலம்). Consultants Bureau. 1963. p. 2729. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
  5. Lewis, Robert A. (30 March 2016). Hawley's Condensed Chemical Dictionary (in ஆங்கிலம்). John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-119-19372-2. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
  6. O'Bannon, Loran (6 December 2012). Dictionary of Ceramic Science and Engineering (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 151. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4613-2655-7. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
  7. Wichelhaus, W.; Schnering, H. (1976). "Zur Chemie und Strukturchemie der Phosphide und Polyphosphide. 12. Die Pentaphosphide des Lanthans und Neodyms, LaP5 und NdP5". எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/ZAAC.19764190113. பார்க்கப்பட்ட நாள் 21 December 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலந்தனம்_பாசுபைடு&oldid=3369696" இலிருந்து மீள்விக்கப்பட்டது