இலலித் விஜய் சிங்

இந்திய அரசியல்வாதி

இலலித் விஜய் சிங் (Lalit Vijay Singh) (16 செப்டம்பர் 1931 – 8 நவம்பர்r 1998) என்பவர் ஜனதா தளம் கட்சியின் இந்திய அரசியல்வாதிகளில் ஒருவராவார். இவர் 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல்களில் பீகாரின் பேகூசாராய் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்தியாவின் 6 ஆவது மக்கள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 21 நவம்பர் 1989 முதல் 25 ஏப்ரல் 1990 வரை பிரதமர் சந்திரசேகரின் அமைச்சரவையில் இந்திய ஒன்றியத்தின் பாதுகாப்புத் துறை இணை அமைச்சராக இருந்தார். 1956 ஆம் ஆண்டில் இவர் இந்திய காவல் பணியில் பணிக்குச் சேர்ந்தார். 1989 ஆம் ஆண்டில் இவர் தன் விருப்பார்ந்த ஓய்வினைப் பெற்றார். தன் விருப்பார்ந்த ஓய்விற்குப் பிறகு இவர் 1989 ஆம் ஆண்டில் ஜனதா தளத்தில் சேர்ந்தார். இவர் பாட்னா உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். [1][2][3][4]

இலலித் விஜய் சிங்
பாராளுமன்றத்தின் உறுப்பினர்
பதவியில்
1989–1991
முன்னையவர்கிருஷ்ண சாஹி
பின்னவர்கிருஷ்ண சாஹி
தொகுதிபேகூசராய்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1931-09-16)16 செப்டம்பர் 1931
இறப்பு8 நவம்பர் 1998(1998-11-08) (அகவை 67)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சிசமாஜ்வாடி ஜனதா கட்சி (ராஷ்டிரிய)
பிற அரசியல்
தொடர்புகள்
ஜனதா தளம்
துணைவர்ஆசா சிங்
பிள்ளைகள்1 மகன் 2 மகள்கள்
வாழிடம்(s)லீலா வர்தா, பி.பி. காலனி, பட்னா, பீகார்
முன்னாள் கல்லூரிபாட்னா சட்டக் கல்லூரி
தொழில்காவலர், சமூக சேவகர், வழக்கறிஞர்
மூலம்: [1]

சிங் 8 நவம்பர் 1998 அன்று தனது [5] 67-ஆவது வயதில் புது தில்லியில் காலமானார்.

மேற்கோள்கள் தொகு

  1. "9th Lok Sabha Members Bioprofile". http://loksabhaph.nic.in/writereaddata/biodata_1_12/3423.htm. பார்த்த நாள்: 8 September 2020. 
  2. "Begusarai Parliamentary Constituencies". http://www.elections.in/bihar/parliamentary-constituencies/begusarai.html. பார்த்த நாள்: 8 September 2020. 
  3. "RAJYA SABHA STATISTICAL INFORMATION (1952-2013)" (PDF). Rajya Sabha Secretariat, New Delhi. 2014. p. 12. பார்க்கப்பட்ட நாள் 4 September 2020.
  4. "Bihar's official crossover continues, IGP takes VRS for political innings". http://archive.indianexpress.com/news/bihar-s-official-crossover-continues-igp-takes-vrs-for-political-innings/433393/. பார்த்த நாள்: 8 September 2020. 
  5. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1998. பக். 13. https://books.google.com/books?id=-LxXAAAAMAAJ&q=%22L+V+Singh%22+obituary. பார்த்த நாள்: 25 April 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலலித்_விஜய்_சிங்&oldid=3800788" இலிருந்து மீள்விக்கப்பட்டது