இலாரன்சு ஆகுபென்
இலாரன்சு ஆக்பென் (Lawrence Hogben, 14 ஏப்பிரல் 1916 – 20 சனவரி 2015) என்பவர் நியூசிலாந்திற் பிறந்த அரச கடற்படை அலுவலரும் வானிலையியலாளரும் ஆவார். இவர் 1944இல் இரண்டாம் உலகப் போர் நட்புநாடுகளுக்காக நார்மண்டியில் தரையிறங்கலுக்காகத் தேவையான வானிலையியல் தரவுகளை முன்கணித்தவர்.[1] இவர் 1941ஆம் ஆண்டின் கிரீக்சுகடற்படைப் போரிலும் ஈடுபட்டுள்ளார். இதில் பிசுமார்க் போர்க்கப்பலைத் தேடி வேட்டையாடினார். மேலும் இவர் பேரண்டுக் கடற்போரிலும் 1942இல் கலந்துகொண்டார். எனவே போர்ச்சேவைகளுக்காக இவருக்கு பிரித்தானிய ஒன்றிய அரசின் தகவுறு சிலுவைச் சேவை விருது, அமெரிக்காவின் மணிவெண்கல நாண்மீன் பதக்கம் ஆகியன தரப்பட்டன.[1] இரண்டாம் உலகப் போர் முடிந்ததும் குடிநல வானிலையாளராகப் பணிபுரிந்தார். பின்னர் ஐரோப்பா முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் இம்பீரியல் வேதியியல் தொழிலகத்துக்காகப் பணிபுரிந்தார்.[1] வாழ்க்கையின் பிற்பகுதியில் தென்பிரான்சில் ஓய்வு பெற்றார். இவர் பன்னாட்டு ரோட்டரி சங்கத்தின் முனைவான உறுப்பினராக இருந்தார்.[1]
இலாரன்சு ஆகுபென் Lawrence Hogben | |
---|---|
பிறப்பு | ஜார்ஜ் லாரன்சு ஆகுபென் 14 ஏப்ரல் 1916 ஓக்லாந்து, நியூசிலாந்து |
இறப்பு | 20 சனவரி 2015 கிறெஸ்ட், பிரான்சு | (அகவை 98)
படித்த கல்வி நிறுவனங்கள் |
|
பணி | அரச கடற்படை அதிகாரி வானிலையியலாளர் |
விருதுகள் | தகவுறு சேவைச் சிலுவை (1942) மணிவெண்கல நாண்மீன் பதக்கம் (1944) |
இளமையும் கல்வியும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Lawrence Hogben, D-Day meteorologist – obituary". த டெயிலி டெலிகிராப். 4 March 2015. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- "Lawrence Hogben obituary". தி டைம்ஸ். 28 January 2015.
{{cite web}}
: Unknown parameter|subscription=
ignored (help) - "Bad weather nearly brought down D-Day". த டெயிலி டெலிகிராப். 5 June 2004.