இலித்தியம் ஐப்போகுளோரைட்டு
இலித்தியம் ஐப்போகுளோரைட்டு (Lithium hypochlorite) என்பது LiClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஐப்போ குளோரசு அமிலத்தின் இலித்தியம் உப்பாக உருவாகும் இச்சேர்மம் நிறமற்றும் படிக வடிவத்திலும் காணப்படுகிறது. நீச்சல் குளங்களுக்கான கிருமி நாசினியாகவும், சில வேதியியல் வினைகளுக்கு வினைப்பொருளாகவும் இலித்தியம் ஐப்போ குளோரைட்டு பயன்படுத்தப்படுகிறது.
| |||
இனங்காட்டிகள் | |||
---|---|---|---|
13840-33-0 | |||
ChemSpider | 55593 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 23665767 | ||
வே.ந.வி.ப எண் | NH3486000 | ||
| |||
பண்புகள் | |||
LiClO | |||
வாய்ப்பாட்டு எடை | 58.39 கி/மோல் | ||
தோற்றம் | வெண் திண்மம் | ||
மணம் | குளோரின்-போன்ற மணம் | ||
அடர்த்தி | 0.531 கி/செ.மீ3 (20 °செ) | ||
உருகுநிலை | 135 °C (275 °F; 408 K) | ||
கொதிநிலை | 1,336 °C (2,437 °F; 1,609 K) | ||
கரையும் | |||
தீங்குகள் | |||
Autoignition
temperature |
> 180 °C (356 °F; 453 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
500 மி.கி/கி.கி மருந்தளவு எலிகளுக்கு கொடுக்கப்படும் பொழுது அவை இறப்பதற்கான அறிகுறிகள் தோன்றுகின்றன[1] . குளோரினை அடிப்படையாகக் கொண்ட கிருமிநாசினிகளை குளங்களில் அதிகமாக பயன்படுத்துவதில் சில கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. சிறிய அளவில் குளோரோபார்ம் போன்ற தீங்கு விளைவிக்கும் உடன் விளைபொருள்கள் விளைவது ஆரோக்கியமானதல்ல. அதேவேளையில் இலித்தியம் ஐப்போகுளோரைட்டு பயன்படுத்தப்பட்ட குளத்தை உபயோகிப்பவர்களிடம் மிகச்சிறிதளவு இலித்தியமும் உட்சென்றதாக அறியப்படவில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ Hoberman A. M.; Deprospo J. R.; Lochry E. A.; Christian M. S. (1990). "Developmental toxicity study of orally administered lithium hypochlorite in rats". Journal of the American College of Toxicology 9 (3): 367–379. doi:10.3109/10915819009078746.
- ↑ McCarty J. D.; Carter S. P.; Fletcher M. J.; Reape M. J. (1994). "Study of lithium absorption by users of spas treated with lithium ion". Hum Exp Toxicol 13 (5): 315–9. doi:10.1177/096032719401300506. பப்மெட்:8043312. https://archive.org/details/sim_human-and-experimental-toxicology_1994-05_13_5/page/315.