இலித்தியம் பெர்மாங்கனேட்டு

வேதிச் சேர்மம்

இலித்தியம் பெர்மாங்கனேட்டு (Lithium permanganate) என்பது LiMnO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இலித்தியம் சல்பேட்டு மற்றும் பேரியம் பெர்மாங்கனேட்டு ஆகிய சேர்மங்கள் சேர்ந்து வினைபுரிந்தால் இலித்தியம் பெர்மாங்கனேட்டு உருவாகிறது. வினையில் உருவாகும் கரைசலில் இருந்து இலித்தியம் முந்நீரேற்றை (LiMnO4·3H2O) படிகமாக்க இயலும். 199 பாகை செல்சியசு வெப்பநிலையில் இலித்தியம் பெர்மாங்கனேட்டு கடுமையாக சிதைவடைகிறது.:[2]

இலித்தியம் பெர்மாங்கனேட்டு
lithium permanganate
இனங்காட்டிகள்
13453-79-7 Y
ChemSpider 11195420
InChI
  • InChI=1S/Li.Mn.4O/q+1;;;;;-1
    Key: MOAIUDFKHZGSPK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23709765
  • [Li+].O=[Mn](=O)(=O)[O-]
பண்புகள்
LiMnO4
வாய்ப்பாட்டு எடை 125.87 g·mol−1
தோற்றம் ஊதா[1]
கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

2 LiMnO4 → Li2O + 2MnO2 + ³/₂ O2

இருப்பினும், இலித்தியம் பெர்மாங்கனேட்டின் வெப்பச் சிதைவுப் பொருட்கள் மிகவும் சிக்கலானவை, Li2MnO3 மற்றும் LiMn2O4 போன்ற பொருட்கள் உருவாக்கப்படுகின்றன என்று பின்னர் ஆராய்ச்சி கண்டறிந்தது.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Pierre Villars; Karin Cenzual; Roman Gladyshevskii (24 July 2017). Handbook. Walter de Gruyter GmbH & Co KG. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-043655-6.
  2. "Zhurnal Neorganicheskoi Khimii (Inorganic Chemistry) is 50". Russian Journal of Inorganic Chemistry 51 (5): 844–845. May 2006. doi:10.1134/s0036023606050287. பன்னாட்டுத் தர தொடர் எண்:0036-0236. http://dx.doi.org/10.1134/s0036023606050287. 
  3. Alexander A. Andriiko, Arseniy Ye. Shpak, Yuriy O. Andriyko, José R. García, Sergei A. Khainakov, Nataliya Ye. Vlasenko (May 2012). "Formation of spinel structured compounds in the lithium permanganate thermal decomposition" (in en). Journal of Solid State Electrochemistry 16 (5): 1993–1998. doi:10.1007/s10008-011-1603-5. பன்னாட்டுத் தர தொடர் எண்:1432-8488. http://link.springer.com/10.1007/s10008-011-1603-5. பார்த்த நாள்: 2020-06-21.