இலூசியானா அடை வௌவால்மீன்

இலூசியானா அடை வௌவால்மீன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Lophiiformes
குடும்பம்:
Ogcocephalidae
பேரினம்:
இனம்:
H. intermedius
இருசொற் பெயரீடு
Halieutichthys intermedius
Ho, Chakrabarty & Sparks, 2010

இலூசியானா அடை வௌவால்மீன் (Louisiana Pancake Batfish, இலத்தீன்: Halieutichthys intermedius) என்பது மெக்சிகோ வளைகுடாவில் லூசியானா மாநிலப் பல்கலைக்கழகத்து அறிவியலாளர்களால் 2010-இல் கண்டுபிடிக்கப்பட்ட புதிய அடை வௌவால்மீன் இனமாகும். Halieutichthys aculeatus மற்றும் Halieutichthys bispinosus போன்ற வேறு அடை வௌவால்மீன் இனங்கள் அட்லாண்டிக் கரையில் லூசியானா தொடங்கி வட கரோலைனா வரை பரந்து உள்ளது, ஆனால் இலூசியானா அடை வௌவால்மீன் மெக்சிகோ வளைகுடாவில் மட்டுமே சுமார் 400 மீட்டர்கள் ஆழத்தில் வசிக்கின்றது என அறியப்பட்டுள்ளது.

இது ஒரு ஒளிந்து வாழும் விலங்காகும். மெக்சிகோ வளைகுடாவில் ஏற்பட்ட எண்ணெய்க்கசிவுச் சம்பவத்தின் போது வெளி உலகுக்குத் தென்பட்டது. அடை உணவு போன்று தட்டையாகக் காணப்படும் இவற்றின் இடுப்புத் துடுப்புகள் கால்கள் போன்று செயற்படுகின்றன, இவற்றின் கண்கள் வெளிப்பிதுங்கிக் காணப்படும். மாந்தரின் உள்ளங்கையில் அடங்கக்கூடியவாறு இதன் அளவு உள்ளது.

2011-ம் ஆண்டுக்கான பத்து சிறப்பு உயிரினங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

  1. Smith, Lewis (23 May 2011). "Deep sea fish named in world top ten new species". Fish2Fork. Retrieved 23 May 2011.
  2. Schenkman, Lauren (4 June 2010). "Not Just Pelicans in Peril, But Pancake Batfish, Too". Science. Retrieved 23 May 2011.
  3. Lynch, Kelly (16 June 2010). "Little-known pancake batfish could be one of oil spill's early victims". CNN. Retrieved 23 May 2011.
  4. Ho, H.-C., Chakrabarty, P. and Sparks, J. S. (2010). "Review of the Halieutichthys aculeatus species complex (Lophiiformes: Ogcocephalidae), with descriptions of two new species." Journal of Fish Biology 77(4):841–869. doi:10.1111/j.1095-8649.2010.02716.x.
  5. Milius, Susan (14 August 2010). "New 'walking' fishes discovered in Gulf oil-spill zone". Science News. Retrieved 23 May 2011.
  6. http://species.asu.edu/2011_species10 பரணிடப்பட்டது 2011-06-06 at the வந்தவழி இயந்திரம்