இலூயிசு பிரவுன்
இலூயிசு சாய் பிரவுன் (Louise Joy Brown)(பிறப்பு: ஜூலை 25, 1978) என்பவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆய்வுக் கூட கருத்தரித்தல் முறையில் பிறந்த முதல் மனிதர் ஆவார். இவரது பிறப்பு, பிரிட்டனில் முன்னோடியாக இருந்த நடைமுறையாகும். "20 ஆம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க மருத்துவ முன்னேற்றங்களில் ஒன்று" இந்த கருத்தரிப்பு முறை விவரிக்கப்படுகிறது.[1]
இலூயிசு சாய் பிரவுன் | |
---|---|
பிறப்பு | 25 சூலை 1978 ஓல்ட்ஹாம் பொது மருத்துவமனை, லேன்கஷீர், இங்கிலாந்து |
அறியப்படுவது | முதல் சோதனைக் குழாய் குழந்தை |
வாழ்க்கைத் துணை | வெசுலி முலிந்தெர் (2004–present) |
பிள்ளைகள் | 2 மகன்கள் |
பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை
தொகுஇலூயிசு சாய் பிரவுன் லேன்கஷீரில் உள்ள ஓல்ட்ஹாம் பொது மருத்துவமனையில் பதிவாளர் ஜான் வெப்ஸ்டரின் திட்டமிட்ட அறுவைச் சிகிச்சை மகப்பேறு முறையின் மூலம் பிறந்தார்.[2] பிரவுனின் பிறப்பு எடையானது 2.608 கிலோவாகும்.[3] இவரது பெற்றோர்களான லெஸ்லி மற்றும் ஜான் பிரவுன் ஆகியோர் ஒன்பது ஆண்டுகளாக இயற்கையாகவே கருத்தரிக்க முயன்றனர். ஆனால் லெஸ்லியின் பெலோபியன் குழாய்களின் இருந்த அடைப்புகள் காரணமாக அவர் கருத்தரிக்க இயலாமல் சிக்கல்களை எதிர்கொண்டார்..[3]
நவம்பர் 10, 1977 இல், லெஸ்லி பிரவுன் இந்த நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டார். பேட்ரிக் ஸ்டெப்டோ, ராபர்ட் எட்வர்ட்ஸ் மற்றும் ஜீன் பூர்டி ஆகியோரால் உருவாக்கப்பட்ட வெளிச் சோதனை முறை கருக்கட்டல் முறையில் கருவூட்டப்பட்டார். கருக்கட்டப்பட்ட கரு செல்கள் பிளவுபடுவதை முதலில் கண்டுபிடித்தார் பூர்டி.[4] இந்நுட்பத்திற்கா எட்வர்ட்சுக்கு 2010ஆம் ஆண்டில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. [5] ஊடகங்கள் பிரவுனை "சோதனைக் குழாய் குழந்தை" என்று குறிப்பிட்டிருந்தாலும், [6] இவரது கருக்கட்டல் உண்மையில் கண்ணாடி தட்டில் நடந்தது. இவரது தங்கை, நடாலி பிரவுனும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஐவிஎஃப் மூலம் கருத்தரிக்கப்பட்டார். மேலும் ஐவிஎஃப் கருத்தரித்த பிறகு உலகின் நாற்பதாவது குழந்தையாக ஆனார். மே 1999 இல், நடாலி இயற்கை முறையில் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்.[3]
தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை
தொகு2004 ஆம் ஆண்டில், பிரவுன் இரவு விடுதியில் பணியாற்றிய வெஸ்லி முல்லிண்டரை மணந்தார். மருத்துவர் எட்வர்ட்ஸ் அவர்களும் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்டார்.[3] இவர்களின் முதல் மகன், இயற்கையான கருத்தரிப்பு முறையில்[6] 2006ஆம் ஆண்டு டிசம்பர் 20ஆம் நாளன்று பிறந்தார்.[7]
பிரவுனின் தந்தை 2006 இல் இறந்தார்.[8] இவரது தாயார் 2012ஆம் ஆண்டு ஜூன் 6ல் பிரிஸ்டல் ராயல் இன்ஃபர்மரியில் 64 வயதில்<[9] பித்தப்பை நோய்த்தொற்றின் காரணமாக உயிரிழந்தார்.[8]
நெறிமுறை மற்றும் மத பிரச்சினைகள்
தொகுஇந்த செயல்முறையானது சோதனைக்குரியது என்று பிரவுன்னுக்குத் தெரிந்திருந்தாலும், இதுவரை இந்நுட்பத்தின் மூலம் குழந்தை ஒன்று கூட பிறக்கவில்லை என மருத்துவர்கள் அவர்களிடம் சொல்லவில்லை. இது தகவலறிந்த சம்மதத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.[10]
1978ஆம் ஆண்டில், பிரவுனின் பிறப்பு குறித்துக் கேட்கப்பட்டபோது வெனிஸின் தேசபக்தர் கார்டினல் அல்பினோ லூசியானி (பின்னர் போப் ஜான் பால் I), செயற்கை கருவூட்டல் பெண்களை "குழந்தை தொழிற்சாலைகளாக" பயன்படுத்த வழிவகுக்கும் சாத்தியம் குறித்துக் கவலை தெரிவித்தார். ஆனால் குழந்தையின் பெற்றோரைக் கண்டிக்க மறுத்துவிட்டார்.[11] அவர்கள் குழந்தை ஒன்றைப் பெறுவதை விரும்புவதாகக் குறிப்பிட்டனர்.[12]
குறிப்புகள்
தொகு- ↑ Walsh, Fergus (14 July 2008). "30th birthday for first IVF baby". BBC News. http://news.bbc.co.uk/1/hi/health/7505635.stm.
- ↑ Hutchinson, Martin (24 July 2003). "I helped deliver Louise". BBC News. http://news.bbc.co.uk/1/hi/health/3077913.stm. பார்த்த நாள்: 9 August 2020.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "World's first IVF baby marks 30th birthday", பரணிடப்பட்டது 26 சூலை 2008 at the வந்தவழி இயந்திரம் Agence France-Presse, 23 July 2008. Retrieved 24 July 2008.
- ↑ Weule, Genelle (25 July 2018). "The first IVF baby was born 40 years ago today" (in en-AU). ABC News. http://www.abc.net.au/news/science/2018-07-25/first-ivf-baby-louise-joy-brown-turns-40/10017032. பார்த்த நாள்: 25 July 2018.
- ↑ Wade, Nicholas (4 October 2010). "Pioneer of in Vitro Fertilisation Wins Nobel Prize". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2010/10/05/health/research/05nobel.html. பார்த்த நாள்: 5 October 2010.
- ↑ 6.0 6.1 Hall, Sarah (11 July 2006). "Louise Brown, first test tube baby, is pregnant". தி கார்டியன் (London). https://www.theguardian.com/medicine/story/0,,1817639,00.html. பார்த்த நாள்: 9 August 2020.
- ↑ "Baby son joy for test-tube mother". BBC News. 14 January 2007. http://news.bbc.co.uk/1/hi/uk/6260171.stm.
- ↑ 8.0 8.1 Grady, Denise (23 June 2012). "Lesley Brown, Mother of World’s First ‘Test-Tube Baby,’ Dies at 64", த நியூயார்க் டைம்ஸ். Retrieved 8 August 2020.
- ↑ "First test tube baby mother Lesley Brown dies". BBC News. 20 June 2012. https://www.bbc.co.uk/news/uk-england-bristol-18524232. பார்த்த நாள்: 20 June 2012.
- ↑ Marantz Henig, Robin. Pandora's Baby, Houghton Mifflin, 2004, p 134
- ↑ Prospettive nel Mondo,1 August 1978; Luciani, Opera Omnia, vol. 8, pp. 571-72.
- ↑ Eley, Adam (23 July 2015). "How has IVF developed since the first 'test-tube baby'?". BBC News. https://www.bbc.co.uk/news/health-33599353. பார்த்த நாள்: 9 August 2020.