இலெவி ரோசுமன்

இலெவி ரோசுமன் (ஆங்கில மொழி : Levy Rozman, பிறப்பு டிசம்பர் 5, 1995) ஒரு சதுரங்க சர்வதேச மாஸ்டர்[1] மற்றும் வர்ணனையாளர் ஆவார். இவர் இணையத்தில் கோதம்செஸ் என்று அழைக்கப்படுகிறார். இவர் டுவிட்ச் மற்றும் யூடியூப் இணைய தளங்களில் சதுரங்க காணொளிகளை உருவாக்குகிறார்.

இலெவி ரோசுமன்
2019இல் இலெவி ரோசுமன்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
பிறப்புதிசம்பர் 5, 1995 (1995-12-05) (அகவை 29)
புரூக்ளின், நியூயோர்க்
பட்டம்சர்வதேச மாஸ்டர்
பிடே தரவுகோள்2362 (அக்டோபர் 2021)
உச்சத் தரவுகோள்2421 (ஆகஸ்ட் 2018)
யூடியூப் தகவல்
ஒளிவழித்தடங்கள்
செயலில் இருந்த ஆண்டுகள்2018–தற்போது வரை
காணொளி வகை(கள்)இணைய சதுரங்கம்
சந்தாதாரர்கள்1.23 மில்லியன் (காத்தம்செஸ்)
88.5 ஆயிரம் (காத்தம் சிட்டி)
மொத்தப் பார்வைகள்261.1 மில்லியன் (காத்தம்செஸ்)
13.2 மில்லியன் (காத்தம் சிட்டி)
இனைந்து பணியாற்றியோர்ஹிகாரு நகமுரா, அன்னா ருடால்ப் , எரிக் ரோசன், அகத்மாத்தோர், அலெக்ஸாண்ட்ரா போடேஸ்
100,000 சந்தாதாரர்கள் 2020
1,000,000 சந்தாதாரர்கள் 2021

நவம்பர் 8, 2021 அன்று தகவமைக்கப்பட்டது
டுவிட்ச் தகவல்
ஓடை(கள்)
செயலில் இருந்த ஆண்டுகள்2018–தற்போதுவரை
பின்தொடர்பவர்கள்5.05 லட்சம்
மொத்தப் பார்வைகள்3.82 கோடி
நவம்பர் 12, 2021 அன்று தகவமைக்கப் பட்டது.

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ரோசுமன் டிசம்பர் 5, 1995 அன்று நியூயார்க்கின் புரூக்ளினில் பிறந்தார். மேலும் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி ஆகிய இரண்டு நகரங்களிலும் வளர்ந்தார். [2] [3] இவர் 6 வயதில் ஒரு பாடநெறி நடவடிக்கையாக சதுரங்கம் விளையாடத் தொடங்கினார். 7 வயதில் தனது முதல் சதுரங்க போட்டியில் கலந்துகொண்டார் . [4][5] ரோசுமன் 2011 ஆம் ஆண்டில் அமெரிக்க சதுரங்க கூட்டமைப்பு வழங்கும் தேசிய மாஸ்டர் பட்டத்தை பெற்றார். 2016 இல் பிடே மாஸ்டர் மற்றும் 2018 இல் சர்வதேச மாஸ்டர் ஆகிய பட்டங்களை பெற்றார். [6] [7] ரோசுமன் 2014 இல் ஒரு சதுரங்க பயிற்சியாளராகத் பணியாற்றத் தொடங்கினார். [8]

இணைய வாழ்க்கை

தொகு

ரோசுமன் ஒரு டுவிச் ஓடையாளர் மற்றும் யூடியூபர் ஆவார் . இவரது யூடுப் ஓடையான கோதம்செஸ் , 1.23 மில்லியன் சந்தாதாரர்களுடன்(நவம்பர் 8, 2021 நிலவரப்படி) யூடியூபில் மிக அதிக சந்தாதாரர்கள் கொண்ட சதுரங்க ஓடையாகும். [9] ரோஸ்மேன் செஸ்.காம் உடன் இனைந்து பணியாற்றி இருக்கிறார். 2017 முதல் அவர்களின் சுடூரீமிங் கூட்டாண்மையின் ஒரு பகுதியாக இருந்தார். [10] ரோசுமன் அவர்களுக்கு ஒரு வர்ணனையாளரராக செயல்பட்டார். போக்சாம்ப்ஸ் மற்றும் 2020 சதுரங்க வேட்பாளர்கள் போட்டி போன்ற போட்டிகளை பகுப்பாய்வுசெய்துள்ளார். [11]

நன்கொடை

தொகு

2021 அக்டோபர் 14 அன்று, ரோசுமன் இலெவி ரோசுமன் ஸ்காலர்ஷிப் நிதியை அறிவித்தார். இதன் மூலம் இவர் ஆரம்ப, நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளி சதுரங்கத் திட்டங்களுக்கு $ 100,000 நன்கொடையாக வழங்கினார். இந்த நிதி செஸ்.காம் இன் துணை நிறுவனமான 'செஸ்கிட்' ஆல் நிர்வகிக்கப்படுகிறது. மேலும், இதன் மூலம் பயிற்சி, போட்டி கட்டணம் மற்றும் பயண செலவுகளுக்கு பள்ளிகளுக்கு $ 5,000 முதல் $ 15,000 வரை வழங்கப்படுகிறது . [12]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rozman, Levy". ratings.fide.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-20.
  2. "Levy Rozman | Chess Celebrities". Chess.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-20.
  3. Alostatz, Steve (30 January 2020). "International chess master coming to campus". The Lantern. பார்க்கப்பட்ட நாள் February 11, 2021.
  4. "This chess teacher quit his full-time job to become a streamer: 'It's become [the primary source of income]'". www.yahoo.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-20.
  5. Stevens, Ashlie D. (13 November 2020). "How "The Queen's Gambit" is inspiring a wave of new chess fans, especially women". Salon (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் February 11, 2021.
  6. "12879834: Levy Rozman". US Chess Federaton. பார்க்கப்பட்ட நாள் February 11, 2021.
  7. "Rozman, Levy". ratings.fide.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-26.
  8. About page, gothamchess.com
  9. Greenwald, Morgan. "This chess teacher quit his full-time job to become a streamer: 'It's become [the primary source of income]'". Yahoo! Entertainment. பார்க்கப்பட்ட நாள் February 11, 2021.
  10. "Chess Streamers Directory". Chess.com. பார்க்கப்பட்ட நாள் February 11, 2021.
  11. "Levy Rozman". Chess.com. பார்க்கப்பட்ட நாள் February 11, 2021.
  12. "IM Levy Rozman Announces Chess Scholarship Fund". ChessKid. October 14, 2021. பார்க்கப்பட்ட நாள் October 14, 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலெவி_ரோசுமன்&oldid=3316205" இலிருந்து மீள்விக்கப்பட்டது