இல்லுமினாட்டி

இரகசிய சமூகங்கள்

இல்லுமினாட்டி (Illuminati) என்பது வரலாறு சார்ந்த உண்மையான மற்றும் கற்பனையான குழுக்களை குறிப்பிடும் பெயர் ஆகும். வரலாற்று ரீதியாக, இந்த பெயர் பொதுவாக பவேரிய இல்லுமினாட்டிகளைக் குழுவை குறிக்க பயன்படுகிறது. இது மே 1, 1776 அன்று கண்டறியப்பட்ட தெளிவடைந்த கால இரகசிய சமூகம் ஆகும். தற்போது இது வெளிப்படையாகக் கலகம் செய்யக்கூடிய அமைப்பைக் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மூடநம்பிக்கை, தெளிவற்ற தன்மை, பொது வாழ்க்கையில் மத செல்வாக்கு மற்றும் அரசு அதிகார துஷ்பிரயோகங்களை எதிர்ப்பதே சமூகத்தின் கூறப்பட்ட குறிக்கோள்களாக இருந்தன. "அநீதியை பரப்புவோரின் சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதும், அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் அவர்களைக் கட்டுப்படுத்துவதும் தான்" என்று அவர்கள் தங்கள் பொதுவான சட்டங்களில் எழுதினர்.[1]

இல்லுமினாட்டியின் நிறுவனர்ஆடம் வெய்சாப்ட் (1748-1830).

பெயர்க் காரணம்

தொகு

"இல்லுமினாட்டி" என்ற பெயர் இலத்தீன் வார்த்தையான "இல்லுமினாட்டஸ்" என்பதிலிருந்து வந்தது. அதன் பொருள் "அறிவொளி பெற்றவர்கள்" அல்லது "அறிவுள்ளவர்கள்".

இரகசிய இயக்கம்

தொகு

இல்லுமினாட்டி-விடுதலைக் கட்டுநர் மற்றும் பிற இரகசிய சங்கங்களுடன் சேர்ந்து-1784,1785,1787 மற்றும் 1790 ஆம் ஆண்டுகளில் கத்தோலிக்க திருச்சபையின் ஆதரவுடன் பவேரியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்லஸ் தியோடரின் ஆணை மூலம் சட்டவிரோதமாக்கப்பட்டது.[2] அடுத்தடுத்த ஆண்டுகளில், இல்லுமினாட்டிகள் இரகசியகமாக செயல்பட்டதாகவும், பிரெஞ்சு புரட்சிக்குக் காரணமானவர்கள் என்றும் கூறி பழமைவாத மற்றும் மத விமர்சகர்களால் இழிவுபடுத்தப்பட்டது.

இக்குழுவின் செயல்பாடுகள் யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா மற்றும் யொகான் கோட்ஃபிரைட் ஹெர்டர் போன்ற இலக்கியம் சார்ந்த நபர்களிடமும் அதன் ஈர்ப்பைக் கொண்டிருந்தது. மேலும் கோதா மற்றும் வெய்மர் ஆகியவற்றை ஆண்டு வந்த கோமகன்களிடம் கூட ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது.[3]

அமைப்பு

தொகு

அசல் பவேரியன் இல்லுமினாட்டியின் தொடர்ச்சியாக செயல்படுவதாகக் கூறப்படும் பல்வேறு நிறுவனங்களைக் குறிப்பிடும் போது "இல்லுமினாட்டி" என்ற சொல் பயன்படுத்தப்பட்டது (இருப்பினும் அவர்களுக்குள் இருக்கும் தொடர்புகள் நிரூபிக்கப்படவில்லை). இல்லுமினாட்டியின் உறுப்பினர்கள் அவர்களின் மேல்நிலையில் உள்ளோர்களுக்கு பற்றுறுதியுடன் பணிந்து நடப்பர். மேலும் அவை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிரிவும் பல்வேறு பட்டத்துடன் கூடியவை. இந்த அமைப்பு ஐரோப்பிய கண்டத்தின் பல நாடுகளில் அதன் கிளைகளைக் கொண்டிருந்தது. இது பத்தாண்டுகளில் ஏறத்தாழ 2,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்ததாக வதந்தி நிலவியது. அரசியல் அதிகாரம், செல்வாக்கு மற்றும் ஒரு புதிய உலக ஒழுங்கை நிறுவுவதற்காக, உலக விவகாரங்களைக் கட்டுப்படுத்த சதி செய்ததாக இந்த அமைப்புகள் மீது அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மிகவும் பரவலாக அறியப்பட்ட மற்றும் விரிவான சதி கோட்பாடுகளின் மையமாக, இல்லுமினாட்டி மறைவாக பதுங்கியிருப்பதாகவும், அதிகாரத்தின் சரங்கள் மற்றும் நெம்புகோல்களை இயக்குவதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. இல்லுமினாட்டி பிரபல கலாச்சாரத்தில் அடிக்கடி நிகழ்கிற கருப்பொருளாக இருக்கிறது. பிரபலமான கலாச்சாரத்தில் நுழைந்து, பல புதினங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வரைகதை, காணொளி விளையாட்டுகள் மற்றும் இசைத் தொகுப்புகளில் தோன்றியுள்ளது.

நவீன இல்லுமினாட்டி

தொகு

மார்க் டையசு, டேவிட் இக்கி, இரியான் பர்கே, ஜூரி லினா மற்றும் மோர்கன் கிரைகர் போன்ற எழுத்தாளர்கள் தற்போதும் பவேரிய இல்லுமினாட்டிகள் நீடித்திருப்பதற்கான வாய்ப்புள்ளதாக வாதிடுகின்றனர். பெரும்பாலான இதன் கோட்பாடுகள், உலக நிகழ்வுகள் இல்லுமினாட்டி என்று தங்களுக்குள் அழைத்துக்கொண்ட இரகசிய சமூகத்தின் மூலமாக கட்டுப்படுத்தப்படுகின்றன மற்றும் கையாளப்படுகின்றன என முன்மொழிந்தன. நிழலான மற்றும் இரகசிய அமைப்புக்களுக்குக் கூடுதலாக பல்வேறு நவீன உடன்பிறந்த குழுக்கள் பவரியன் இல்லுமினாட்டியின் "வாரிசுகளாக" உரிமை கோருகின்றன. மேலும் அவர்களாகவே உரிமைகள் எடுத்துக்கொண்டு வெளிப்படையாக "இல்லுமினாட்டி" என்ற பெயரைப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற பல குழுக்கள் "இல்லுமினாட்டி வரிசையில்" சில மாறுபாடுகளுடன் அவர்களுடைய அமைப்பின் பெயரில் நேரடியாகப் பெயரைப் பயன்படுத்தித் தங்களை அழைத்துக் கொள்கின்றனர். அதே சமயம் ஆர்டோ டெம்ப்லி ஓரியண்டிஸ் போன்ற மற்றவர்கள் அவர்களது அமைப்புடன் துவக்கத்தின் தரமாகப் பெயரைப் பயன்படுத்துகின்றனர்.[4] இருப்பினும், இந்த இன்றைய குழுக்களுக்கு வரலாற்று ஒழுங்குடன் உண்மையான தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அவர்கள் குறிப்பிடத்தக்க அரசியல் அதிகாரத்தையோ செல்வாக்கையோ பெற்றிக்கவில்லை. பெரும்பாலானவர்கள், இரகசியமாக இருக்க முயற்சிப்பதை விட, உறுப்பினர்களை ஈர்க்கும் வழிமுறையாக பவேரிய இல்லுமினாட்டியுடன் ஆதாரமற்ற தொடர்புகளை ஊக்குவிக்கின்றனர்.[5] சதித்திட்டத் தத்துவ அறிஞர்கள், வின்ஸ்டன் சர்ச்சில், புஷ் குடும்பம், பராக் ஒபாமா, ரோத்ஸில்ட் குடும்பம், டேவிட் ஜான் டி. ராக்பெல்லர் மற்றும் பிக்னியூ பிரெசின்ஸ்கி உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க மக்கள் இல்லுமினாட்டியின் உறுப்பினர்களாக இருந்தனர் அல்லது இருக்கின்றனர் என வாதிடுகின்றனர்.

சதிக் கோட்பாடு

தொகு
 
$1 அமெரிக்க டாலரில் காணப்படும் அனைத்தையும் பார்க்கும் கண் என்ற சின்னம் இல்லுமினாட்டியின் சதிதிட்டமாக இருக்கும் என சிலர் கருதுகின்றனர்.[6] : 47–49 :47–49

சதி கோட்பாட்டாளர்கள் மற்றும் மார்க் டையசு போன்ற எழுத்தாளர்கள் இல்லுமினாட்டிகள் இன்றுவரை உயிர் பிழைத்திருப்பதாக வாதிடுகின்றனர்.[7]

உலக நிகழ்வுகள் இல்லுமினாட்டி என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒரு இரகசிய சமூகத்தால் கட்டுப்படுத்தப்பட்டு கையாளப்படுகின்றன என்று பல சதி கோட்பாடுகள் முன்மொழியப்படுகின்றன.[8] சதி கோட்பாட்டாளர்கள் பல குறிப்பிடத்தக்க நபர்கள் இல்லுமினாட்டியின் உறுப்பினர்களாக இருந்ததாக அல்லது இருப்பதாக கூறியுள்ளனர். இத்தகைய கூற்றுகளுக்கு அமெரிக்காவின் அதிபர்கள் ஒரு பொதுவான இலக்காக உள்ளனர். .[9][10]

பிற கோட்பாட்டாளர்கள், பிரெஞ்சுப் புரட்சி, வாட்டர்லூ போர் மற்றும் அமெரிக்க அரசுத் தலைவர் ஜான் எஃப் கென்னடி படுகொலை செய்யப்பட்டதில் இருந்து ஹாலிவுட் திரைப்படத் துறையில் ஊடுருவி "புதிய உலக ஒழுங்கை" விரைவுபடுத்துவதற்கான ஒரு பொதுவுடைமை சதி வரை பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் இல்லுமினாட்டியால் திட்டமிடப்பட்டதாக வாதிடுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Richard van Dülmen, The Society of Enlightenment (Polity Press 1992) p. 110
  2. René le Forestier, Les Illuminés de Bavière et la franc-maçonnerie allemande, Paris, 1914, pp. 453, 468–469, 507–508, 614–615
  3. Schüttler, Hermann (1991). Die Mitglieder des Illuminatenordens, 1776–1787/93. Munich: Ars Una. pp. 48–49, 62–63, 71, 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-89391-018-2.
  4. Weishaupt, Adam. The Illuminati Series. Hyperreality Books, 2011. 6 vols.
  5. McKeown, Trevor W. (16 February 2009). "A Bavarian Illuminati Primer". Grand Lodge of British Columbia and Yukon A.F. & A.M. Archived from the original on 1 January 2011. பார்க்கப்பட்ட நாள் 27 January 2011.
  6. Issitt, Micah; Main, Carlyn (2014). Hidden Religion: The Greatest Mysteries and Symbols of the World's Religious Beliefs. ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61069-478-0.
  7. Sykes, Leslie (17 May 2009). "Angels & Demons Causing Serious Controversy". KFSN-TV/ABC News. Archived from the original on 4 June 2011. பார்க்கப்பட்ட நாள் 27 January 2011.
  8. Barkun, Michael (2003). A Culture of Conspiracy: Apocalyptic Visions in Contemporary America. Comparative Studies in Religion and Society. Berkeley: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-23805-3.
  9. Howard, Robert (28 September 2001). "United States Presidents and The Illuminati / Masonic Power Structure". Hard Truth/Wake Up America. Archived from the original on 13 January 2011. பார்க்கப்பட்ட நாள் 28 January 2011.
  10. "The Barack Obama Illuminati Connection". The Best of Rush Limbaugh Featured Sites. 1 August 2009. Archived from the original on 2 February 2011. பார்க்கப்பட்ட நாள் 28 January 2011.

மேற்கோள் காட்டப்பட்ட படைப்புகள்

தொகு

மேலும் வாசிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=இல்லுமினாட்டி&oldid=4168608" இலிருந்து மீள்விக்கப்பட்டது