இளங்கடை என்பது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தின், நாகர்கோயில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியாகும். முன்னர் இது சிற்றூராக இருந்தது. பின்னர் நாகர்கோயில் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இது நாகர்கோவிலிலிருந்து 3 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. கன்னியாகுமரி கடற்கரையிலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது. இளங்கடையிலிருந்து 5 கி. மீ. தொலைவில் சொத்தவிளை கடற்கரையும், 10 கி. மீ. தொலைவில் சங்குதுறை கடற்கரையும் உள்ளது. இங்குள்ள பெருவாரியான குழந்தைகள் நாகர்கோவிலுக்கு சென்று கல்வி கற்கின்றனர். இளங்கடைக்கு மிக அருகில் சதாவதானி செய்குதம்பி பாவலர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.[2]

இளங்கடை
Elankadai
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
629002[1]
தொலைபேசி குறியீடு04652
வாகனப் பதிவுTN 74
அருகிலுள்ள நகரம்நாகர்கோவில்
மக்களவைத் தொகுதிகன்னியாகுமரி
மாநிலச் சட்டப் பேரவைநாகர்கோவில்

மேற்கோள்கள்

தொகு
  1. "Elankadai Nagercoil Pin Code: Elankadai Nagercoil, Agastheeswaram, Kanniyakumari, Kanyakumari Post Office Code & Address with Map". codepin.in. பார்க்கப்பட்ட நாள் 2023-05-04.
  2. "Elankadai Locality". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இளங்கடை&oldid=3720381" இலிருந்து மீள்விக்கப்பட்டது