இளங்காகுறிச்சி
இளங்காகுறிச்சி (Elangakurichy) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது வையம்பட்டி, மணப்பாறை மற்றும் துவரங்குறிச்சிக்கு அருகில் அமைந்துள்ளது. இக்கிராமம் தேசிய நெடுஞ்சாலை 45 (NH 45) இல் திருச்சிராப்பள்ளிக்கு தென் மேற்கே 57 கிமீ தொலைவிலும், திண்டுக்கல்லிற்கு வட கிழக்கில் 53 கிமீ தொலைவிலும் உள்ளது. இக்கிராமம் சற்றேறக்குறைய தமிழ்நாட்டின் புவிமையத்தில் அமைந்துள்ளது.
இளங்காகுறிச்சி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 10°29′N 78°24′E / 10.48°N 78.4°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
ஏற்றம் | 179 m (587 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 4,214 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 621302 |
தொலைபேசி குறியீடு | +91 4332 |
வாகனப் பதிவு | TN 45 |
பாலின விகிதம் | 1009 இந்தியாவில் வசிக்காத ஆண்கள் ♂/♀ |
சொற்பிறப்பு
தொகுஒரு மலையுச்சியின் அழகைக் குறிக்கும் ஒரு தூய தமிழ் வார்த்தையை (இளங்காகுறிச்சி = இளங்கா + குறிச்சி) பெயரிட்டுள்ளதாக நம்பப்படுகிறது. முதல் சொல்லான இளங்கா என்பது அமைப்பு, பாணி, வடிவம், செயலுறு தன்மை ஆகியவற்றில் எளிமை, வளமை, இரசிக்கத்தக்க தன்மை என்று பொருள்படும். இரண்டாவது சொல்லான குறிஞ்சி (குறிச்சி) என்பது 'மலைப்பாங்கான பகுதி' என்று பொருள் தருகிறது.
புவியியல் அமைப்பு
தொகுஇளங்காகுறிச்சி 10°29'41"வடக்கு, 78°20'4" கிழக்கு என்ற ஆயத்தில் அமைந்துள்ளது. இது கடல்மட்டத்திலிருந்து சராசரியாக 179 மீட்டர் (564 அடி) ஏற்றத்தில் உள்ளது. இளங்காகுறிச்சி 3.2 சதுர மைல் (8.3 சதுர கிலோமீட்டர்) பரப்பளவினைக் கொண்டுள்ளது. இது புதூர் மலைக்கு அருகில் அதன் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. கிராமத்தின் வடக்குப் பகுதியில் ஆசாத் சாலை உள்ளது; கிழக்கு எல்லை காவல்காரப்பட்டி மற்றும் மேற்குப் பகுதி வையம்பட்டி ஆகும். இளங்காகுறிச்சி அயன்-ரெட்டியாபட்டி மற்றும் புதூருக்கு ஒரு தாய் கிராமம் ஆகும். இளங்காகுறிச்சியின் நகரமும் அல்லாத கிராமமும் அல்லாத அல்லது இவ்விரண்டு கலாச்சாரமும் கலந்த சூழலைக் கொண்டிருப்பினும், கிராமத்தின் பெரும்பகுதியானது பண்ணை, காடு ஒரு குளம் மற்றும் மலை ஆகியவற்றால் ஆதிக்கம் செய்யப்படுகிறது. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2017-07-12.