தமிழ் மரபு அறக்கட்டளை

(இ-சுவடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation) ஓர் இலாப நோக்கற்ற அமைப்பாகும். தமிழ் பண்பாட்டு பாரம்பரியத்தின் ஆவணங்களை சேகரிக்கவும், பாதுகாக்கவும் மற்றும் எண்ணிம மயமாக்கவும் பிரித்தானிய நூலகத்துடன் சேர்ந்து தமிழ் மரபு அறக்கட்டளை ஒத்துழைக்கிறது. உலகெங்கிலும் இவ்வமைப்பின் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. முதன்மையாக இந்தியா, ஐக்கிய இராச்சியம், செருமனி, சுவிட்சர்லாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளில் திட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும் மையங்கள் உள்ளன.[1][4]

தமிழ் மரபு அறக்கட்டளை
Tamil Heritage Foundation International (THFi)
புனைப்பெயர்டி.எச்.எப்.ஐ
நிறுவப்பட்டது2001
வகைதமிழ் பண்பாட்டு பாரம்பரியத்தின் ஆவணங்களை சேகரிக்கவும், பாதுகாக்கவும் மற்றும் எண்ணிம மயமாக்கவும் ஒத்துழைத்தல்.
நோக்கம்தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு மரபுகளை சேகரித்தல்ம் பாதுகாத்தல், எண்ணிமமாக்குதல்
தலைமையகம்செருமனி
தலைமையகம்
தலைவர்
முனைவர் சுபாசினி கனகசுந்தரம்
வலைத்தளம்Tamil Heritage Foundation
THF Executive Council
[1][2][3]
தமிழ் மரபு அறக்கட்டளையின் சின்னம்

நோக்கம்

தொகு

பிரித்தானிய காலனி ஆட்சியின் போது சேகரிக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் 100 ஆண்டுகளுக்கும் மேலான எண்ணிம ஆவணங்களை இணையதளத்தை அணுகுவதன் மூலம் கிடைக்கச் செய்வது தமிழ் மரபு அறக்கட்டளையின் உலகளாவிய நோக்கமாகும்.[2] "உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழுக்கும் தமிழர்களுக்கும் சேவை செய்ய வேண்டும்" என்பதே அறக்கட்டளையின் முழக்கமாகும். வானியல், கணிதம், மருத்துவம், வேதியியல் மற்றும் பொறியியல் ஆகிய அறிவியல் துறைகளைப் பற்றிய பண்டைய ஞானத்தை அறிந்து கொள்ள நவீன வாசகருக்கு உதவுவதையும் இந்த அறக்கட்டளை அனுமதிக்கிறது. கலை, இசை மற்றும் இலக்கியம் பற்றிய கையெழுத்துப் பிரதிகளில் பண்பாட்டு வாழ்க்கை கூறப்பட்டுள்ளது.[3]

முன்னோடித் திட்டம்

தொகு

பல்லாயிரமாண்டு தொன்மையுள்ள தமிழ் மரபுச் செல்வம் தமிழ் மொழியாகவும், இலக்கியமாகவும், கலைகளாகவும் பல்வேறு வடிவங்களில் பரிணமித்து உலகம் முழுவதும் சிதறிக் கிடக்கின்றன. தமிழ் கூறும் நல்லுகங்களான தமிழ் நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆத்திரேலியா கண்டங்களில் காணக் கிடைக்கின்றன. ஆனால் பழங்கால, அரிய புத்தகங்கள் மற்றும் பனை ஓலை கையெழுத்துப் பிரதிகளின் வரையறுக்கப்பட்ட சில சேகரிப்புகள் மட்டுமே எண்ணிம முறையில் இணையத்தில் அல்லது குறுவட்டுகளில் பொதுமக்களுக்கு இலவசமாகக் கிடைக்கின்றன.[1][2][3] ஓலைசுவடிகளில் பதிவுற்ற இலக்கியமும் மற்ற பிற கலை வளங்களும், நாட்டிய கர்நாடக இசை வடிவங்களும் காலத்தால் அழிவுற்ற நிலையில் காக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன.

 
தமிழ் பனை ஓலைச்சுவடி

இத்தகைய தமிழ் மரபுச் சின்னங்கள் காலத்தை வென்று நிற்கக்கூடிய வாய்ப்பைச் கணினி சார்ந்த தொழில்நுட்பத் திறன் அளித்துள்ளது. ஒலி, ஒளி மற்றும் வரி வடிவங்களை இலக்கப்பதிவாக்கி வைய விரிவு வலை மற்றும் மின்காந்த இலத்திரன் வடிவாக நிரந்தரப் படுத்த முடியும். நவீன இத்தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு படைப்புகளின் வகைகளான கலை, மொழி, வரலாறு மற்றும் அறிவியல் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய பல ஆயிரம் தமிழ் நூல்களை எண்ணிம முறையில் இலவசமாகக் கிடைக்க, திட்டத்தை விரிவுபடுத்த தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

திட்டத்தின் இயக்குனர் முனைவர் நாராயணன் கண்ணன்[4] தென் கொரியா, சுவிட்சர்லாந்து மற்றும் செருமனியில் உள்ள முனைவர் குப்புசாமி கல்யாணசுந்தரம் மற்றும் சுபாசினி கனகசுந்தரம் ஆகியோருடன் இணைந்து நிறுவன உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Tamil Heritage Foundation THF website. Retrieved 17 January 2012.
  2. 2.0 2.1 2.2 British Library Tamil Collection. Tamil Heritage Foundation. Retrieved 17 January 2012.
  3. 3.0 3.1 3.2 3.3 Interview: Digitalizing heritage for the coming generation. Bhasha India. Microsoft. Retrieved 17 January 2012.
  4. 4.0 4.1 Kesavapany, A. Mani; Palanisamy, Ramasamy (2008). Rising India and indian communities in East Asia. Singapore: ISEAS Publishing. PR 20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-230-799-6..

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தமிழ்_மரபு_அறக்கட்டளை&oldid=3867185" இலிருந்து மீள்விக்கப்பட்டது