இ-03 அதிவேக நெடுஞ்சாலை (இலங்கை)

கொழும்பு - கட்டுநாயக்கா - நீர்கொழும்பு அதிவேக நெடுஞ்சாலை (Colombo - Katunayake - Negombo Expressway, E03) என்பது இலங்கையின் இரண்டாவது அதிவேக நெடுஞ்சாலை (E வகை) ஆகும்.[1] 25.8 கிமீ (16 மைல்) நீளமுள்ள இந்த நெடுஞ்சாலை இலங்கையின் தலைநகர் கொழும்பு நகரையும், கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையம்,[2] நீர்கொழும்பு நகரம் ஆகியவற்றையும் இணைக்கிறது. இதன் கட்டுமானப் பணிகள் 2009 அக்டோபரில் ஆரம்பமாயின. 2013 அக்டோபர் 27 இல் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது.[3]

 E03 
கொழும்பு-கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலை
Colombo–Katunayake Expressway
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபை
நீளம்:25.8 km[1] (16.0 mi)
பயன்பாட்டு
காலம்:
அக்டோபர் 27, 2013 (2013-10-27)
வரலாறு:திறப்பு: 27 அக்டோபர் 2013
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:கட்டுநாயக்கா, நீர்கொழும்பு நகரம்
 வாயில் 1 → ஜா-எல
வாயில் 2 → கெரவலப்பிட்டி (திறக்கப்படவில்லை) -  E02  கொழும்பு வெளிவட்ட அதிவேகநெடுஞ்சாலை
வாயில் 3 → பேலியகொடை
தெற்கு முடிவு:புதிய களனிப் பாலம், கொழும்பு நகரம்
நெடுஞ்சாலை அமைப்பு
இலங்கையின் நெடுஞ்சாலைகள்

இந்நெடுஞ்சாலையில் கொழும்பில் இருந்து பேலியகொடை வரை இரு திசைகளிலும் மூன்று வழித்தடங்களும், பேலியகொடை முதல் கட்டுநாயக்கா வரை இரு வழித்தடங்களும் 226 முதல் 33.5 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட்டுள்ளன.[4]

இத்திட்டத்தின் முழுச்செலவும் $292 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதில் 248.2 மில். டாலர்களை சீனாவின் எக்சிம் வங்கி கடனாக வழங்கியுள்ளது. இலங்கை அரசு 45 மில். டாலர்களைச் செலவழித்துள்ளது.[5]

இந்நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் வாகனங்கள் முதல் 8 கிமீகளுக்கு அதிகூடியது 80 கிமீ/மணி வேகத்திலும், மீதமான தூரத்தை 100 கிமீ/மணி வேகத்திலும் செல்லலாம்.[1] இந்த அதிவேக நெடுஞ்சாலையின் வழியே 42 பாலங்களும், 88 மதகுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் உணுப்பிட்டியில் 480 மீட்டர் நீளப் பாலமும், கட்டுநாயக்காவில் 800 மீட்டர் நீளப் பாலமும் உள்ளடங்குகின்றன.[6]

கொழும்பில் இருந்து கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்திற்கு செல்வதற்கு இந்நெடுஞ்சாலை வழியே செல்லுவதற்கு ஆகக்கூடியது 15 நிமிடங்களும், நீர்கொழும்பு செல்வதற்கு 20 நிமிடங்களும் எடுக்கிறது. இலங்கைப் போக்குவரத்து சபை சொகுசு பயணிகள் பேருந்து சேவையை இச்சாலை வழியே நடத்துகிறது.

வாயில்கள்

தொகு
  1. கட்டுநாயக்கா வாயில்[1]
  2. ஜா-எலை வாயில்
  3. கெரவலப்பிட்டி வாயில் (திறக்கப்படவில்லை) (இது E02 அதிவேக நெடுஞ்சாலையை இணைக்கிறது)
  4. பேலியகொடை வாயில்
  5. புதிய களனிப் பால வாயில்

கட்டணம்

தொகு

புதிய களனிப் பால வாயிலில் இருந்து பேலியகொடை வரை கட்டணம் இல்லை. பேலியகொடையில் இருந்து கட்டணம் அறவிடப்படுகிறது.

இவற்றையும் பார்க்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "The Salient Features of Colombo-Katunayake Expressway". வீதி அபிவிருத்தி அதிகார சபை. Archived from the original on 2009-04-17. பார்க்கப்பட்ட நாள் 2013-10-21.
  2. "VIDEO: President inspects Colombo-Katunayake expressway". Adaderana.lk. 2012-08-16. பார்க்கப்பட்ட நாள் 2012-10-22.
  3. "Colombo-Katunayake Expressway declared open". Ministry of Defence and Urban Development. 2013-10-27. Archived from the original on 2014-11-09. பார்க்கப்பட்ட நாள் 2013-10-27.
  4. "Features | Sundayobserver.lk - Sri Lanka". Sundayobserver.lk. 2012-06-24. Archived from the original on 2012-06-30. பார்க்கப்பட்ட நாள் 2012-10-22.
  5. "Sri Lanka News | Online edition of Daily News - Lakehouse Newspapers". Dailynews.lk. 2012-07-11. Archived from the original on 2012-07-15. பார்க்கப்பட்ட நாள் 2012-10-22.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-03-18. பார்க்கப்பட்ட நாள் 2013-11-08.