இலங்கையின் நெடுஞ்சாலைகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இலங்கையின் நெடுஞ்சாலைகள் பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்தில் முக்கிய இடம் வக்கிக்கிறது. இது "ஏ","பி","சி" (A,B,C) என்ற மூன்று தரங்களாக வகைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படுகிறது. "ஏ" மற்றும் "பி" தரப் பாதைகளின் பராமரிப்பு இலங்கை வீதி அபிவிருத்தி அதிகார சபையாலும் "சி" தரப் பாதைகளின் பராமரிப்பு இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளாலும் மேற்கொள்ளப்படுகிறது. ஏ" மற்றும் "பி" தரப் பெருந்தெருக்கள் தேசிய பெருந்தெருக்கள் என அழைக்கப்படும். இலங்கை முழுவதும் 2004 ஆம் ஆண்டு கணகெடுப்பின் படி ஏ" மற்றும் "பி" தரப் பெருந்தெருக்கள் 11,716 கிலோ மீட்டரும் "சி" தரப் பெருந்தெருக்கள் 80,191 கிலோ மீட்டரும் காணப்படுகிறது. இலங்கையின் முதலாவது அதிவேக பெருந்தெரு தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஆகும். மேலும் பல புதிய அதிவேக பெருந்தேருக்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

வகைப்படுத்தல்

தொகு

பெருந்தெரு ஒன்று ஆங்கில முதல் எழுத்து ஒன்றாலும் (A,B,C மட்டும்), ஒரு இந்து-அராபிய தொடர் இலக்கம் ஒன்றாலும் குறிக்கப்படுகிறது. பெருந்தெருக்கள் அவற்றின் முக்கியத்துவத்துக்கு ஏற்றபடி "ஏ","பி","சி" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் முக்கியத்துவம் "ஏ" தொடங்கி குறைந்து கொண்டு செல்கிறது. "ஏ" வகை பெருந்தெருக்கள் இரண்டு மாகாணங்களை இணைக்கும் பெருந்தெருக்களாகும். "பி" தர பெருந்தெருக்கள் ஒன்று அல்லது இரண்டு பிரதான நகரங்களை "ஏ" தர பெருந்தெருவுடன் இணைக்கும் பெருந்தெருவாகும். இவற்றைத் தவிர முக்கியமானது என அடையாளம் காணப்பட்ட நுழைவு பெருந்தெருக்கள் "சி" தரத்தில் வகைப்படுத்த படுகிறது. பெருந்தெருவின் பெயரில் இரண்டாவது பகுதியான இந்து-அராபிய எண் வீதியின் முக்கியத்துவதை குறிக்க பயன்படாது. மாறாக அது ஒரு தொடர் இலக்கமாகவே பயன்படுத்தப்படுகிறது.

முகாமைத்துவம்

தொகு
காலப்பகுதி முகாமை
1970க்கு முன்னர் குடிசார் கட்டமைப்பு திணைக்களம்
1970–1976 பிரதேச குடிசார் பொறியியலாளர்
1977–1985 பெருந்தெருக்கள் திணைக்களம்
1986 முதல் வீதி அபிவிருத்தி அதிகார சபை

ஏ-தரப் பெருந்தெருக்களின் பட்டியல்

தொகு
 
இலங்கையின் ஏ தரப் பெருந்தெருக்கள்
பெருந்தெருக்கள் இல. வழி தூரம் (கி.மீ)
A0 கொள்ளுப்பிட்டி-சிறீ ஜெயவர்தனபுர கோட்டை 7.12
A1 கொழும்பு-கண்டி 115.85
A2 கொழும்பு-வெள்ளவாயா, மாத்தறை ஊடாக , அம்பாந்தோட்டை 317.78
A3 பேலியகொடை-புத்தளம், ஜா-எல ஊடாக, நீர்கொழும்பு, சிலாபம் 126.31
A4 கொழும்பு-மட்டக்களப்பு, இரத்தினபுரி ஊடாக, பேரகலை, வெள்ளவாயா 430.57
A5 பேராதனை-செங்கலடி 275.64
A6 அம்பேபுசை-திருக்கோணமலை 198.71
A7 அவிசாவளை-நுவரெலியா 118.7
A8 பாணந்துறை-இரத்தினபுரி 67.77
A9 கண்டி-யாழ்ப்பாணம் 321
A10 கட்டுகஸ்தோட்டை-புத்தளம் 124.58
A11 மரதங்கடவளை-திருக்கொண்டையாமடு 129.36
A12 புத்தளம்-திருக்கோணமலை 176.99
A13 கல்குளம்-அனுராதபுரம் 16.64
A14 மதவாச்சி-தலைமன்னார் 113.84
A15 மட்டக்களப்பு-திருக்கோணமலை 130.86
A16 பெரகலை-காலி எல்லை 40.39
A17 காலி-மாதம்பை 143.93
A18 நோனாகமை-பெல்மதுளை 87.69
A19 பொல்காவளை-கேகாலை 11.67
A20 அனுராதபுரம்-இறம்பாவை 14.48
A21 கேகாலை-கரவனல்லை 42.12
A22 பசறை-மொனராகலை 34.11
A23 வெல்லவாய-கும்பல்வெளை 30.57
A24 மாத்தறை-அக்குரஸ்சை 20.11
A25 சியம்பலாண்டுவை-அம்பாறை 57.12
A26 கண்டி-பதியத்தலாவை 105.23
A27 அம்பாறை-மகா ஓயா 57.92
A28 அனுராதபுரம்-பாதெனிய 80.52
A29 கொரவப்பொத்தானை-வவுனியா 46.02
A30 வவுனியா-பறையநாளன்குளம் 35.8
A31 அம்பாறை-காரைதீவு 24.14
A32 மன்னார்-நாவற்குழி 98.37
A33 ஜா-எல-யக்கலை 17.02
A34 மாங்குளம்-முல்லைத்தீவு 49.25
A35 பரந்தன்-முல்லைத்தீவு 52.13
மொத்த தூரம் 3720.31 கி.மீ[1]

உசாத்துணை

தொகு
  1. "National Highways in Sri Lanka (Class "A", "B" & "E" Roads)". பார்க்கப்பட்ட நாள் 25 திசம்பர் 2015.

வெளி இணைப்புக்கள்

தொகு