இ. அ. சிதம்பரம் பிள்ளை
இந்திய அரசியல்வாதி
இ. அ. சிதம்பரம் பிள்ளை (I. A. C. Pillai)(பிறப்பு 23 மே 2010) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இலஞ்சி, செங்கோட்டை ஆகிய இடங்களில் பள்ளிக் கல்வியினை முடித்த பிள்ளை, திருநெல்வேலி ம. தி. தா. இந்துக் கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். இவர் தமிழ்நாடு சட்ட மேலவையில் 1960 முதல் 1966 வரை உறுப்பினராக இருந்துள்ளார்.[1] பிள்ளை 1967ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தென்காசி சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]