ஈடன் பூங்கா

(ஈடன் பார்க் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஈடன் பூங்கா (Eden Park), நியுசிலாந்தின் பெரிய நகரமான ஆக்லன்ட் நகரின் மத்தியில் அமைந்துள்ள நாட்டின் மிகப்பெரும் விளையாட்டரங்கமாகும்.[2] ஆக்லன்டின் மத்திய வணிக மாவட்டத்திலிருந்து தென்மேற்கே மூன்று கிமீ தொலைவில் ஈடன் குன்று, கிங்சுலாந்து புறநகர்ப்பகுதிகளின் எல்லைகளுக்கிடையே அமைந்துள்ளது. குளிர்காலத்தில் இரக்பி ஆட்டங்களுக்கும், கோடைக்காலத்தில் துடுப்பாட்டங்களுக்கும் முதன்மையாக பயன்படுத்தப்பட்டாலும், இங்கு சங்கக் கால்பந்து ஆட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டில் நடந்த இரக்பி உலகக் கோப்பை போட்டிகளின் போது குழு நிலை ஆட்டங்களும், இரண்டு காலிறுதிகளும், இரு அரையிறுதிகளும், இறுதி ஆட்டமும் இங்கே நடத்தப்பட்டது. முன்னதாக 1987ஆம் ஆண்டு இரக்பி உலகக்கோப்பையிலும் இறுதி ஆட்டம் இங்கு நடந்துள்ளது; இதனால் உலகில் இரு இரக்பி உலகக்கோப்பை இறுதியாட்டங்ள் நடைபெற்ற ஒரே விளையாட்டரங்கம் என்ற பெருமை பெற்றது. ஆத்திரேலியாவும் நியூசிலாந்தும் இணைந்து நடத்தும் 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியின் நிகழிடங்களில் ஒன்றாக விளங்குகின்றது.

ஈடன் பூங்கா
ஈடனின் தோட்டம்[1]

மீள்கட்டமைப்பு முன்னதாக ஈடன் குன்றிலிருந்து ஈடன் பூங்காவின் தோற்றம்
இடம் கிங்சுலாந்து, ஆக்லன்ட், நியூசிலாந்து
அமைவு 36°52′30″S 174°44′41″E / 36.87500°S 174.74472°E / -36.87500; 174.74472
திறவு 1900
உரிமையாளர் ஈடன் பூங்கா அறக்கட்டளை வாரியம்
ஆளுனர் ஈடன் பூங்கா அறக்கட்டளை வாரியம்
தரை புற்றரை
கட்டிடக்கலைஞர் பாப்புலசு (மீள்கட்டுமானம்)
குத்தகை அணி(கள்) ஆக்லாந்து புளூசு (சூப்பர் இரக்பி)
ஆக்லாந்து இரக்பி காற்பந்தாட்டச் சங்கம் (ஐடிஎம் கோப்பை)
ஆக்லாந்து ஏசசு (புளுங்கட் கேடயம்)
அமரக்கூடிய பேர் 50,000

மேற்சான்றுகள்

தொகு
  1. "Garden of Eden to make us proud". Rugby Heaven. 6 April 2008. http://www.stuff.co.nz/sport/rugby/news/349584. பார்த்த நாள்: 7 November 2011. 
  2. "Iconic New Zealand rugby grounds". பார்க்கப்பட்ட நாள் 23 August 2014.

வெளியிணைப்புக்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஈடன் பூங்கா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈடன்_பூங்கா&oldid=3235053" இலிருந்து மீள்விக்கப்பட்டது