ஈனயானம்
ஹீனயானம் என்பது பௌத்த சமயத்தின் பெரிய உட்பிரிவாகும். இதனை குறுகிய பாதை என்றும் கூறுவர்.[1] [2] மற்றொன்று மகாயானம். மாற்றம் மிகாத திரிபிடகத்தை பின்பற்றுவர்கள் ஈனயானர்கள். துவக்கத்தில் இவர்கள் பாளி மொழியில் தங்கள் சமய நூல்களை எழுதியவர்கள். ஈனயான பிரிவை பின்பற்றுபவர்கள் துறவறத்தை வாழ்க்கை நெறியாக கொண்டவர்கள்.
புத்தரால் அருளப்பட்ட நெறி முறைகளை அவ்வாறே ஏற்றுக்கொள்வது இவர்களது கொள்கை. இச்சமயத்தின்படி புத்தர் சாதாரண மனிதராக மதிக்கப்பட்டார். புத்தரின் நல்லொழுக்க நெறிகளை கடைப்பிடிப்பதன் மூலம் பரிநிர்வாணம் அடையலாம் என்பதை வலியுறுத்துவது ஹீனயான புத்த சமயமாகும். இப்பிரிவு அசோகர் காலத்தில் கிளைத்தது.
ஈனயான பௌத்த சமயத்தில் பின்னர் பல உட்பிரிவுகள் சௌத்திராந்திகம், வைபாடிகம் போன்ற பிரிவுகள் தோன்றியிருந்தாலும், தற்போது தேரவாதப் பிரிவே நிலைத்துள்ளது.