ஈரயோடின் ஆறாக்சைடு
ஈரயோடின் ஆறாக்சைடு (Diiodine hexaoxide) என்பது I2O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டை அயோடின் எக்சா ஆக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. அயோடினும் ஆக்சிசனும் சேர்ந்து ஈரயோடின் ஆறாக்சைடு உருவாகிறது. அயோடின் ஆக்சைடுகளின் வகுப்பைச் சேர்ந்த இச்சேர்மம், அயோடின்(V) மற்றும் அயோடின்(VII) ஆக்சிசனேற்ற நிலைகளைக் கொண்ட ஒரு கலப்பு ஆக்சைடு ஆகும்.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
அயோடின் மூவாக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
65355-99-9 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
I2O6 | |
வாய்ப்பாட்டு எடை | 349.80 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறப் படிகங்கள் |
அடர்த்தி | 4.53 கி/செ.மீ3[1] |
உருகுநிலை | 150 °C (302 °F; 423 K) (சிதையும்.) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுகந்தக அமிலத்திலுள்ள அயோடிக் அமிலத்துடன் பெர் அயோடிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஈரயோடின் ஆறாக்சைடு உருவாகும்.[2]
- HIO3 + H5IO6 -> I2O6 + 3H2O
வெற்றிடத்தில் உள்ள மெட்டா-பெர் அயோடிக் அமிலத்தின் வெப்பச் சிதைவும் ஈரயோடின் ஆறாக்சைடு உருவாவதற்கு வழிவகுக்கிறது.[2]
வேதிப் பண்புகள்
தொகு100 பாகை செல்சியசு வெப்பநிலைக்குக் கீழே, ஈரப்பதம் இல்லாத நிலையில், ஈரயோடின் ஆறாக்சைடு சேர்மத்தை நிலையாகச் சேமிக்க முடியும். தண்ணீரில் கரைக்கும்போது, அயோடின் மற்றும் பெர் அயோடிக் அமிலத்தை உருவாக்குவதற்கு ஒரு வெப்ப உமிழ்வினை நிகழ்கிறது. 150 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடாக்கும்போது, இது ஈரயோடின் ஐந்தாக்சைடாக சிதைவதைக் காணலாம்:
- 2 I2O6 -> 2 I2O5 + O2
அயோடின் அணுக்களின் வெவ்வேறு ஆக்சிசனேற்ற எண்களுக்குக் காரணமாகக் கூறப்படும் இச்சேர்மம் டயாகாந்தப்பண்பு கொண்டதாகும். கட்டமைப்பு ரீதியாக, இச்சேர்மம் அயோடைல் பெர் அயோடேட்டு ஆகும். அயோடின்(V,VII) ஆக்சைடின் தோராயமாக IO2+IO4−. எனக் கருதப்படுகிறது. [2] ஒரு திடப்பொருளாக, P1 (இடக்குழு எண். 2) என்ற இடக்குழுவில் அணிக்கோவை மாறிலிகள் a = 500.6 பைக்கோமீட்டர், b = 674.1 பைக்கோமீட்டர், c = 679.5 பைக்கோமீட்டர், α = 97.1°, β = 96.43°, γ =105.36° என்ற அளவுருக்களுடன் ஓர் அலகு செல்லுக்கு ஒரு வாய்ப்பாட்டு அலகுடன் இச்சேர்மம் படிகமாகிறது.[1]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Kraft, Thorsten; Jansen, Martin (1995). "Synthesis and Crystal Structure of Diiodine(V/VII) Hexaoxide: An Intermediate between a Molecular and a Polymer Solid". Journal of the American Chemical Society 117 (25): 6795–6796. doi:10.1021/ja00130a026.
- ↑ 2.0 2.1 2.2 Siebert, Hans; Weise, Manfred; Woerner, Ursula (1977). "Über das Jod(V, VII)-oxid J2O6". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 432: 136–140. doi:10.1002/zaac.19774320117.
- David R. Lide (Hrsg.): CRC Handbook of Chemistry and Physics 96. Auflage. CRC Press / Taylor and Francis, Boca Raton FL, Properties of the Elements and Inorganic Compounds, S. 4-67.
- A. F. Holleman, N. Wiberg (2016). Anorganische Chemie. Grundlagen und Hauptgruppenelemente. Vol. 1. Berlin / Boston: Walter de Gruyter. p. 543. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-11-049585-0.