உச்சலதேவன்

காஷ்மீரின் மன்னன்

உச்சலன் (Uchchala) அல்லது உச்சல தேவன் (Uchchala Deva) ( உக்கலன் என்றும் உச்சரிக்கப்படுகிறது) பொ.ச.1101-1111 வரை 10 ஆண்டுகள் காஷ்மீரை ஆட்சி செய்த அரசர் ஆவார்.[1][2] இவர் காஷ்மீர் ஆட்சியாளர்களின் இந்து இராச்சியமான உத்பால வம்சத்தைச் சேர்ந்தவர். மேலும், "இரண்டாம் இலோகரா வம்சத்தின்" நிறுவனரும் ஆவார். இவர் ஹர்ஷனின் நெருங்கிய உறவினரும் சுசலனின் சகோதரரும் ஆவார்.[3]

உச்சலன்
ஆட்சிக்காலம்1101-1111 பொ.ச.
இறப்பு1111 பொ.ச.
பனிஹால், காஷ்மீர்
துணைவர்ஜெயமதி
மரபுஉத்பால வம்சம், இரண்டாவது லோகார வம்சம்
தந்தைமல்லன்
மதம்இந்து

வெற்றிகள்

தொகு

உச்சலன், தனது சகோதரன் சுசலனுடன் சேர்ந்து, லாகூர் வழியாக பள்ளத்தாக்கிற்குள் நுழைந்தார். மேலும் அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட கீழ்நிலை பதவிகளில் ஆட்சி செய்யும் அரச குடும்பத்தின் இராணுவத்தில் சேர்ந்தனர். இராணுவம் ஹர்ஷனின் கட்டுப்பாட்டில் இருந்தது. உச்சலன் மன்னனுக்கு தைரியமாகவும் விசுவாசமாகவும் இருப்பது போல நடித்தார். இதன் விளைவாக, இவர் அரசசவையின் சிறப்புரிமை பெற்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1099 இல் இராச்சியம் வறட்சி-நெருக்கடியில் இருந்தபோது, மன்னன் மக்கள் மீது கடுமையான வரிகளை விதித்தார். மன்னன் விதித்த வரிகளால் உச்சலன் ஏமாற்றமடைந்தார். இவர் சிறீநகரை விட்டு வெளியேறினார். தன் மீது துணிச்சலையும் விசுவாசத்தையும் காட்டினாலும், மன்னன் அரியணையைப் பெறுவதற்கான உயர் லட்சியங்களைக் கொண்ட இருவரையும் சந்தேகிக்கத் இராச்சியத்திற்கான நேரடி அச்சுறுத்தலாகவும், தனது மகன் "போஜனுக்குப்" போட்டியாளர்களாகவும் கருதினார். சிறீநகரில் இருந்து விலகி இருந்த சிறுது காலம் கழித்து, சகோதரர்கள் இருவரும் லாகூர் வழியாக இராணுவத்துடன் திரும்பினர். அபோது தர்மாஸ் என்ற நிலப்பிரபு இவர்கள் இருவரையும் ஆதரித்தான். இவர்கள் அரசனைத் தாக்கி தலைநகரை கைப்பற்றினர். இந்த போரின் போது, மன்னரின் மகன் "போஜன்" கொல்லப்பட்டான். உச்சலன் பின்னர் அரியணை ஏறினார். மேலும் "இரண்டாம் லோகரா வம்சத்தின்" நிறுவனராகவும் கருதப்பட்டார். இவர் மதக் கட்டிடங்களை மீட்டெடுத்தார். மேலும் பல புதிய கோயில்களையும் கட்டினார்.[4]

வரலாற்றாளர் கல்கணர் 12 ஆம் நூற்றாண்டில் எழுதிய காஷ்மீரின் முழு வரலாற்றையும் உள்ளடக்கியதாக நம்பப்படும் இராஜதரங்கிணி என்ற புத்தகத்தில் "சுசலன்" தனது சகோதரர் உச்சலனின் ஆதரவுடன் லாகூரை ஆண்டதாக எழுதுகிறார். இவரது ஆதரவை நீட்டித்த போதிலும், அரியணையை லட்சியமாகக் கொண்டிருந்த மற்ற ஆட்சியாளர்களில் சுசலனும் ஒருவர். தனது சகோதரரால் அடையாளம் காணப்பட்ட எந்தவொரு விரும்பத்தகாத நடவடிக்கையையும் தவிர்க்கும் பொருட்டு, உச்சலன் இராச்சியத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்தார். இது சுசலனை லாகூர் அரியணையில் அமர்த்தியது.[4]

சொந்த வாழ்க்கை

தொகு

தனது பெற்றோரின் மூத்த மகனான உச்சலன், "ஜெயமதி" என்பவரை மணந்தார். அவர் ஒரு அழகான ராணியும் பாடுவதில் விருப்பமுள்ளவருமாவார்.[5]

படுகொலை

தொகு

உச்சலன் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீரை ஆட்சி செய்தார். இதற்கிடையில் இவரது ஆட்சியின் போது, பொ.ச. 1111 இல் "பனிஹால்" (இப்போது பனிஹால் ) என்ற இடத்தில் நடந்த போரில் தனது எதிரி "ரத்தா"வால் படுகொலை செய்யப்பட்டார்.[6][7][8]

சான்றுகள்

தொகு
  1. "General Report Jammu & Kashmir" (PDF). Census of India. 1971. பார்க்கப்பட்ட நாள் 9 February 2020.
  2. shop, VCoins, the online coin. "INDIA, KASHMIR: Uchchala Deva AE stater. UNLISTED and CHOICE". www.vcoins.com.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Middle Age's Chronologie". ducalucifero.altervista.org. Archived from the original on 2011-11-13. பார்க்கப்பட்ட நாள் 2022-02-23.
  4. 4.0 4.1 Kainikara, Sanu (1 December 2016). Only From Indus to Independence: A Trek Through Indian History (Vol IV The Onslaught of Islam). Vij Books India Pvt Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789385563874 – via Google Books.
  5. Bhatt, Saligram; Kaula, Jānakīnātha (1 December 1995). Kashmiri Pandits, a cultural heritage. Lancer Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170950530 – via Google Books.
  6. Bakshi, S. R. (8 February 1997). Kashmir: History and People. Sarup & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185431963 – via Google Books.
  7. Rickmers, Christian Mabel Duff (8 February 1972). "The Chronology of Indian History, from the Earliest Times to the Beginning of the Sixteenth Century". Cosmo Publications – via Google Books.
  8. Kumar, Raj (8 February 2008). History Of The Chamar Dynasty : (From 6Th Century A.D. To 12Th Century A.D.). Gyan Publishing House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788178356358 – via Google Books.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உச்சலதேவன்&oldid=3593647" இலிருந்து மீள்விக்கப்பட்டது