உட்செலுத்தலுக்கான நீர்

உட்செலுத்தலுக்கான நீர் (Water for injection, WFI) என்பது மாசு இல்லாத கூடுதல் உயர் தரமான நீர் ஆகும்.[1] ஊசி மூலம் வழங்கப்படும் கரைசல்களை உருவாக்க ஒரு நுண்ணுயிரற்ற வடிவம் பயன்படுத்தப்படுகிறது.[2] இத்தகைய பயன்பாட்டிற்கு முன், ஐசோடோனிக் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ள கரைசல்களை செய்ய மற்ற பொருட்களை பொதுவாக சேர்க்க வேண்டும்.[3] இது ஊசி மூலம் ஒரு நரம்பு, தசை அல்லது தோலின் கீழ் கொடுக்கப்படலாம்.[4] நுண்ணுயிர்களுடன் கூடிய நீரானது உற்பத்தி செயற்பாட்டின் பொழுது பின்னர் நிகழும் கிருமியழித்தல் மூலம் உற்பத்தியில் பயன்படுத்தப்படலாம்.[5]

Sterile water for injection
மருத்துவத் தரவு
AHFS/திரக்ஃசு.காம் FDA Professional Drug Information
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 7732-18-5
ATC குறியீடு V07AB
ChemSpider 937
வேதியியல் தரவு
வாய்பாடு H2O

அதிகமாகவோ அல்லது குறைவாகவோ ஐசோடோனிக் செய்யாமலுள்ள கரைசலை ஊசி மூலம் ஒரு நரம்புக்குள் செலுத்தப்படுவதால், இது சிவப்பு இரத்த அணுக்களில் முறிவினை ஏற்படுத்தலாம்.[3] இது சிறுநீரக பிரச்சினைகளை ஏற்படுத்தும் .[3] அதிகப்படியான அளவு திரவ சுமையை ஏற்படத்தக்கூடும்.[4] உட்செலுத்தலுக்கான நீர் பொதுவாக வடிகட்டுதல் அல்லது தலைகீழ் சவ்வூடுபரவல் மூலம் தயாரிக்கப்படுகிறது.[5] இது 100மில்லி தண்ணீரில் ஒரு மி.கி.க்கு குறைவான தனிமங்களை கொண்டிருக்க வேண்டும்.[5] பாக்டீரியா வளர்ச்சியை நிறுத்தும் காரகிகளுடான வடிவங்களும் கிடைக்கின்றன.[5]

இது உலக சுகாதார அமைப்பின் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் உள்ளது, இது ஒரு சுகாதார அமைப்பில் தேவைப்படும் மிகவும் பயனுள்ள மற்றும் பாதுகாப்பான மருந்து ஆகும்.[6] உட்செலுத்தலுக்கான நீர் நேரடியாகவே கடைகளில் மருந்து சீட்டு இன்றி கிடைக்கிறது.[3] வளரும் நாடுகளில் 10மில்லி குப்பிக்கான மொத்த விலை 0.03–0.15 அமெரிக்க டாலர்கள் ஆகும்.[7] ஐக்கிய இராச்சியத்தில் தே.ம.சே., நிலையத்தில் இந்த தொகை 0.25 முதல் 1.40 பவுண்டுகள் வரை செலவாகும்.[8]

மற்ற பெயர்கள்

தொகு

Aqua ad iniectabilia or aqua ad injectionem

குறிப்புகள்

தொகு
  1. "<1232> Water for Pharmaceutical Purposes" (PDF). Archived from the original (PDF) on 11 March 2015. பார்க்கப்பட்ட நாள் 14 January 2017. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. WHO Model Formulary 2008 (PDF). p. 493. Archived from the original (PDF) on 13 December 2016. பார்க்கப்பட்ட நாள் 8 January 2017.
  3. 3.0 3.1 3.2 3.3 "Sterile Water for Injection - FDA prescribing information, side effects and uses". Archived from the original on 18 January 2017. பார்க்கப்பட்ட நாள் 14 January 2017.
  4. 4.0 4.1 "Water for Injection - FDA prescribing information, side effects and uses". Archived from the original on 16 ஜூலை 2017. பார்க்கப்பட்ட நாள் 14 January 2017. {{cite web}}: Check date values in: |archivedate= (help)CS1 maint: unfit URL (link)
  5. 5.0 5.1 5.2 5.3 Theory and Practice of Contemporary Pharmaceutics. p. 396. Archived from the original on 2017-01-16.
  6. "WHO Model List of Essential Medicines (19th List)" (PDF). World Health Organization. April 2015. Archived from the original (PDF) on 13 December 2016. பார்க்கப்பட்ட நாள் 8 December 2016.
  7. "Water for Injection". International Drug Price Indicator Guide. பார்க்கப்பட்ட நாள் 8 December 2016.
  8. British national formulary : BNF 69. 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உட்செலுத்தலுக்கான_நீர்&oldid=3534726" இலிருந்து மீள்விக்கப்பட்டது