உட்பட்டி பிடுகு

'''உட்பட்டி பிடுகு''' என்பது பண்டைய இந்திய கல்வெட்டுகளில் காணப்படும் ஒரு பெயர். பல வரலாற்றாசிரியர்கள், இந்த கல்வெட்டுகளை கவனத்தில் கொண்டு, அவற்றை விரிவாக எழுதியுள்ளனர். இந்த சொற்றொடரின் பொருள் 'இடி மின்னல்.' இது ஆந்திராவில் செயல்பட்ட ஒரு கலைஞர் சங்கத்தின் (Artist Guild) பெயராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. [1] கல்வெட்டு தெலுங்கு கன்னட எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. [2] [3]

ஸ்ரீ உட்பட்டி பிடுகுவின் சின்னங்கள், மேல் குகை அக்கண்ணா-மாதன்னா குகை வளாகம், விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம், படிம உதவி - ஸ்ரீ உட்பட்டிபிடுகு, நிருக்தாவின் சிறப்புத் தொகுதி, கலை வரலாறு மற்றும் அழகியல் துறை, பரோடா, 2005.

கே.வி.சௌந்தரராஜன் கல்வெட்டை உட்பட்டிபிடுகு என்று படித்து, இதை யாத்திரை முத்திரை என்று விளக்கியுள்ளார். [4] தீபக் கண்ணால் மற்றும் ஜெயராம் பொடுவால் [5] ஆகியோர் 'ஸ்ரீ உட்பட்டிபிடுகு', நிருக்தா, 2005 என்ற தலைப்பில் ஒரு சிறப்புத் தொகுப்பில் பணியாற்றினர். ஒரு புதிய இயக்கத்தை உருவாக்கி அரசியல் செல்வாக்கைப் பெற முடிந்த ஒரு மதத் தலைவரின் பெயர் உட்பட்டி பிடுகு என்று தீபக் கண்ணால் நம்புகிறார்.

இந்தத் தலைப்பு இடம்பெறும் தளங்களின் பட்டியல்

தொகு

தளங்களின் பட்டியல்: [6]

குகைக் கோயில்கள்

தொகு

கட்டமைப்பு கோவில்கள்

தொகு
  • ஆலம்பூர்
  • சத்யவோலு
  • மகாநந்தியில் உள்ள மகாநந்தீஸ்வரர் கோவில் - இங்குள்ள கல்வெட்டான, "வஞ்சித ஸ்ரீ உத்பட்டிபிடுகு கொலுவு க்கமிய பிரிதிவி பீ(மா) வ்ரசே, தீபக் கண்ணால், கிருஷ்ண சாஸ்திரி உதவியுடன், "வஞ்சித ஸ்ரீ உட்பட்டிபிடுகு கொலுவு காமிய பிரிதிவ்பீமா" என்று படித்துள்ளார். விரசே...". அதாவது ஸ்ரீ உட்பட்டிபிடுகுவின் விருப்பப்படி உருவாக்கப்பட்டது. காமியா ப்ருத்விபீமாவின் சேவையில் எழுதப்பட்டது. இது 'ஸ்ரீ உட்பட்டிபிடுகு', நிருக்தா, [9] கலை வரலாறு மற்றும் அழகியல் இதழ், பரோடா, MS பல்கலைக்கழகம், 2005 (ஆங்கிலம்: Journal of Art History and Aesthetics, Baroda, MS University, 2005) என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தின் சதானிகோட்டாவில் அமைந்துள்ள ஒரு மணற்கல் குவாரியின் பாறைகளில் கீழ்கண்ட கல்வெட்டுகள் கண்டறியப்பட்டதாக பி.ராஜேந்திர பிரசாத் [10] கூறியுள்ளார். கல்வெட்டு பாடம் இதுவாகும்: "ஸ்ரீ உட்பட்டி பிடுகு, ஸ்ரீ அத்தும்னன், ஏகாந்தனிவாசி லோக சில பீமா. . . [11] " இந்த களத்திலிருந்து பல செதுக்கப்பட்ட கற்களும் தூண்களும் கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Archaeology of Andhra Pradesh: Victoria Jubilee Museum, Vijayawada, Centenary, 1887-1987 : a Souvenir (in ஆங்கிலம்). Director of Archaeology and Museums, Government of A.P. 1987.
  2. Indian Archaeology (in ஆங்கிலம்). Department of Archaeology, Government of India. 1959.
  3. Archaeology of Andhra Pradesh: Victoria Jubilee Museum, Vijayawada, Centenary, 1887-1987 : a Souvenir (in ஆங்கிலம்). Director of Archaeology and Museums, Government of A.P. 1987.
  4. Soundara Rajan, K. v (1981). Architectural Survey Of Temples No.3 Cave Temples Of The Deccan.
  5. Poduval, Jayaram. CASTE SEGREGATION IN KERALA TEMPLES - A CASE STUDY OF NAMASKARA MANDAPA.
  6. "Utpattipidugu and unread histories: part II". Utpattipidugu and unread histories. பார்க்கப்பட்ட நாள் 2020-07-29.
  7. Archaeology, Andhra Pradesh (India) Department of (1962). Andhra Pradesh Government Archaeological Series (in ஆங்கிலம்). Government of Andhra Pradesh.
  8. Khedkar, Snehal Tambulwadikar- (in en). Sri Utpattipidugu – unread histories. https://www.academia.edu/4785777. 
  9. "Baroda Patronage: Sayajirao Gaekwad III as Patron of Art". Sahapedia (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-29.
  10. Prasad, B. Rajendra (1983). Chalukyan Temples of Andhradesa (in ஆங்கிலம்). Abhinav Publications.
  11. The Quarterly Journal of the Mythic Society (in ஆங்கிலம்). Mythic Society. 1992.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உட்பட்டி_பிடுகு&oldid=3417485" இலிருந்து மீள்விக்கப்பட்டது