உதயபானு சிங்

உதய்பானு சிங் (Udaybhanu Singh) (1893 பிப்ரவரி 12 - 1954 அக்டோபர் 22) இவர் 1911-1949 வரை தோல்பூர் மாநிலத்தின் ஆட்சியாளராக இருந்தார்.[1] [2] அதன் பிறகு மாநிலம் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. இவர் பம்ராலியா வம்சத்தைச் சேர்ந்த ஜாட் இனத்தைச் சேர்ந்தவராவார். இவர் தனது சகோதரர் இராணா ராம் சிங்கிற்குப் பிறகு 1911 இல் பதவிக்கு வந்து வாரிசு இல்லாமல் இறந்தார். இவர் 1913 அக்டோபர் 9 அன்று முழு ஆளும் உரிமைகளைப் பெற்றார்.  

உதயபானு சிங்
தோல்பூரின் மகாராஜா
ஆட்சிக்காலம்1911-1949
முன்னையவர்இராம் சிங்
பின்னையவர்ஹேமந்த் நிங்
துணைவர்மல்வேந்தர் கௌர்
குழந்தைகளின்
பெயர்கள்
ஊர்மிளா குமாரி
மரபுபம்ராலியா வம்சம்
தந்தைராணா நிகல் நிங்
மதம்இந்து
தோல்பூரில் மகாராஜா இராணா உதய்பானு சிங்கின் நினைவிடம்

அஜ்மீரில் உள்ள மயோ கல்லூரியில் கல்வி கற்ற இவர் பின்னர் தேராதூனிலுள்ள பேரரசின் இராணுவப் பள்ளியில் சேர்ந்தார்.

தோல்பூரின் கடைசி ஆட்சியாளர்

தொகு

இவர் தோல்பூர் மாநிலத்தின் கடைசி ஆட்சியாளராக இருந்தார். மேலும் 1931 இல் வட்ட மேசை மாநாட்டில் பிரதிநிதியாக பணியாற்றினார். 1947 இல் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, தோல்பூரை ஏப்ரல் 7, 1949 அன்று இந்திய ஒன்றியத்தில் இணைத்தார். தோல்பூர் மூன்று அண்டை மாநிலங்களுடன் ஒன்றிணைந்து இந்திய தொழிற்சங்கத்திற்குள் மத்சய ஒன்றியத்தை உருவாக்கியது. [3] அதில் இவர் அரசப்பிரநிதியாக நியமனம் செய்யப்பட்டார். ஆனால் பின்னர் ஒன்றியம் இதுபோன்ற பல ஒன்றியங்கங்களுடன் இணைக்கப்பட்டு இன்றைய ராஜஸ்தான் மாநிலத்தை உருவாக்கியது.

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

1911 ஏப்ரலில் இவர் என்பவரை, ஜிந்த் மாநிலத்தின் தலைவர் சம்சர் சிங்கின் மகளான மால்வேந்தர் கவுர் என்பவரை மணந்தார். தம்பதியருக்கு ஒரே மகள் இருந்தாள்

இறப்பு

தொகு

இவர் 43 ஆண்டு ஆட்சிக்குப் பிறகு 1954 அக்டோபர் 22 அன்று 61 வயதில் இறந்தார்.

குறிப்புகள்

தொகு
  1. ""Dholpur: History and Places"".
  2. ""Dholpur online"".
  3. "Dholpur Princely State (15 gun salute)". Archived from the original on 2015-01-14. பார்க்கப்பட்ட நாள் 2020-08-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயபானு_சிங்&oldid=3545041" இலிருந்து மீள்விக்கப்பட்டது