உதல்குரி
உதல்குரி, வடகிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் வடக்கில் போடோலாந்து பிரதேசத்தில் உள்ள உதல்குரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது கடல்மட்டத்திலிருந்து 180 மீட்டர் உயரத்தில் உள்ளது. உதல்குரி நகரம் குவகாத்திக்கு வடக்கே 107.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
உதல்குரி | |
---|---|
நகரம் | |
அசாம் மாநிலத்தில் உதல்குரி நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 26°44′43″N 92°05′46″E / 26.7452°N 92.0962°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
பிரதேசம் | போடோலாந்து |
மாவட்டம் | உதல்குரி |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | உதல்குரி நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 4.69 km2 (1.81 sq mi) |
ஏற்றம் | 180 m (590 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 15,279 |
• அடர்த்தி | 3,300/km2 (8,400/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 784509 |
இடக் குறியீடு | 03711 XXXXXX |
வாகனப் பதிவு | AS-27 |
இணையதளம் | udalguri |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 6 வார்டுகளும், 3,354 வீடுகளும் கொண்ட நகரத்தின் மக்கள் தொகை 15,279 ஆகும். அதில் ஆண்கள் 7,712 மற்றும் பெண்கள் 7,567 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 981 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9.63% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 88.33% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 88.88%, இசுலாமியர் 1.67%, கிறித்தவர்கள் 9.27% மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர்.[1]
போக்குவரத்து
தொகுஉதல்குரி இரயில் நிலையம் [2]கவுகாத்தியில் உள்ள ரங்கியா நிலையம் மற்றும் அருனாச்சலப் பிரதேசத்தின் முர்கோங்செலக் இருப்புப் பாதையில் உள்ளது.