உத்தமராவ் ஜாங்கர்
உத்தமராவ் சிவ்தாசு ஜாங்கர் (Uttamrao Jankar)(பிறப்பு 1966) என்பவர் இந்தியாவின் மகாராட்டிராவினைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.[1] இவர் மகாராட்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டியல் சாதி சமூகத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள மால்சிராசு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். ஜாங்கர் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மகாராட்டிரச் சட்டமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரசு கட்சியை (சரத்சந்திர பவார்) பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றார்.[2][3]
உத்தமராவ் ஜாங்கர் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 | |
முன்னையவர் | இராம் சத்புத்தே |
தொகுதி | மல்சிராசு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சோலாப்பூர், மகாராட்டிரம், இந்தியா |
அரசியல் கட்சி | தேசியவாத காங்கிரசு கட்சி (சரத்சந்திர பவார்) |
வேலை | அரசியல்வாதி |
இளமை
தொகுஜாங்கர் மகாராட்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள மால்சிராசைச் சேர்ந்தவர். இவர் ஜாங்கர் சிவதாசு சங்கரின் மகன் ஆவார். கோலாப்பூரில் உள்ள சிவாஜி பல்கலைக்கழகத்துடன் இணைந்த மாலேவாடி அக்லுஜ் சங்கரராவ் மோகித் பாட்டீல் கல்லூரியில் 1988ஆம் ஆண்டில் இளங்கலைச் சட்டப் பட்டம் பெற்றார்.[1]
அரசியல்
தொகு2024 மகாராட்டிரச் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரசு கட்சியின் (சப) சார்பில் மால்சிராசு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு ஜாங்கர் வெற்றி பெற்றார். இவர் 121,713 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான பாரதிய ஜனதா கட்சியின் இராம் வித்தல் சத்புதேவை 13,147 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Uttamrao Shivdas Jankar(Nationalist Congress Party(NCP)):Constituency- MALSHIRAS (SC)(SOLAPUR) - Affidavit Information of Candidate:". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2024-11-30.
- ↑ "Malshiras, Maharashtra Election Results 2024 Highlights: Malshiras निर्वाचन क्षेत्र में Uttamrao Shivdas Jankar ने 13147 वोटों से दर्ज की जीत". आज तक (in இந்தி). 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-11-30.
- ↑ "Uttamrao Shivdas Jankar , NCPSP Election Results LIVE: Latest Updates On Uttamrao Shivdas Jankar , Assembly Election Constituency Seat". ndtv.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-30.
- ↑ "Malshiras Election Result 2024 LIVE: Uttamrao Shivdas Jankar of NCPSP Wins". News18 (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-11-30.
- ↑ "Malshiras, Maharashtra Assembly Election Results 2024 Highlights: NCP (SP)'s Uttamrao Shivdas Jankar defeats BJP's Ram Vitthal Satpute with 13147 votes". India Today (in ஆங்கிலம்). 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-11-30.