உத்யோக் ஆதார்
உத்யோக் ஆதார் (Udyog Aadhar) என்பது இந்திய அரசினால் வழங்கப்பட்ட 12 இலக்கங்கள் கொண்ட தனித்துவ அடையாள எண் ஆகும். இதனை இந்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர முனைவக அமைச்சகமானது இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர முனைவகத்திற்காக வழங்கியுள்ளது.[2] மேலும் இது வணிகத்திற்கான ஆதார் எனவும் அழைக்கப்படுகிறது.[3] சூலை, 2018 அன்றைய நிலவரப்படி 48 இலட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு மற்று நடுத்தர முனைவகங்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.[1][4]
உத்யோக் ஆதார் | |
---|---|
நாடு | இந்தியா |
Ministry | இந்திய சிறு, குறு மற்று நடுத்தர முனைவக அமைச்சகம் |
Key people | கிரிராஜ் சிங் |
துவங்கியது | செப்டம்பர் 2015 |
தற்போதைய நிலை | சூலை, 2018 அன்றைய நிலவரப்படி 48 இலட்சத்திற்கும் அதிகமான சிறு, குறு மற்று நடுத்தர முனைவகங்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன[1] |
இணையத்தளம் | udyogaadhaar |
செப்டம்பர், 2015 இல் இந்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர முனைவக அமைச்சகமானது சிறு, குறு மற்றும் நடுத்தர முனைவக அமைச்சக முன்னேற்றச் சட்டம் 2006 இன் கீழ் இந்த உத்யோக் ஆதார் திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. உத்யோக் ஆதார் திட்டத்தில் பதிவு செய்வது இலவசமாகும்.[5][6]
- வரி விலக்கு
- நேரடி வரி சட்டங்களின் கீழ் விலக்கு
- காப்புரிமைகள் மற்றும் வர்த்தக முத்திரைகள் பதிவு செய்வதற்கான கட்டணம் 50% குறைப்பு
- கடன் உத்தரவாத திட்டம்
- தாமதமாக செலுத்துவதிலிருந்து பாதுகாப்பு
- குறைந்த வட்டி விகிதம் மற்றும் பொறுப்புறுதி இல்லாமல் கடன் வழங்குவது
- அந்நிய நாடுகளில்நடக்கும் வணிக கண்காட்சிகளில் கலந்துகொள்வதற்காக இந்திய அரசிடமிருந்து நிதி உதவி
- நிறுவனத்தின் வருவாயை அதிகரிக்க மானியங்கள் வழங்கப்பட்டன
- மின்சார கட்டணத்தில் சலுகை
- அரசாங்கம் ஒப்பந்தப்புள்ளிகளுக்காக விண்ணப்பிக்கும் போது விலக்கு வழங்கப்படும்
- சுங்கவரி பயன்கள்
தகுதி
தொகுஇந்த அட்டை பெறுவதற்கான தகுதிகள்.[8][9]
- உரிமையாளர்
- ஒரு நபர் நிறுவனம்
- கூட்டு நிறுவனம்
- தனியார் நிறுவனம்
- கூட்டுறவு சங்கங்கள்
வகை | உற்பத்தித் துறை | சேவை துறை |
---|---|---|
சிறு நிறுவனம் | 25 லட்சம் வரை | 10 லட்சம் வரை |
குறு நிறுவனம் | 25 லட்சம் முதல் 5 கோடி வரை | 10 லட்சம் முதல் 2 கோடி வரை |
நடுத்தர நிறுவனம் | 5 கோடிக்கு மேல் 10 கோடி வரை | 2 கோடிக்கு மேல் 5 கோடி வரை |
இவற்றையும் காண்க
தொகு
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "48 lakh MSMEs registered on Udyog Aadhaar portal". The Hindu Business Line. July 18, 2018. https://www.thehindubusinessline.com/news/48-lakh-msmes-registered-on-udyog-aadhaar-portal/article24454473.ece.
- ↑ "Govt to ask Micro Small Medium Enterprises to obtain Udyog Aadhaar". இந்தியன் எக்சுபிரசு. July 22, 2018. https://indianexpress.com/article/india/govt-to-ask-micro-small-medium-enterprises-to-obtain-udyog-aadhaar-5269891/.
- ↑ Pai, T.V. Mohandas; Pai, Siddharth (February 6, 2018). "Budget 2018 analysis: muted ecstasy and tempered agony". தி இந்து. https://www.thehindu.com/business/budget/budget-2018-analysis-muted-ecstasy-and-tempered-agony/article22669913.ece.
- ↑ "Govt to ask MSMEs under GSTN to obtain Udyog Aadhaar to avail benefits of various schemes". Press Trust of India . Firstpost. July 22, 2018. https://www.firstpost.com/business/govt-to-ask-msmes-under-gstn-to-obtain-udyog-aadhaar-to-avail-benefits-of-various-schemes-4793531.html.
- ↑ "No registration fee for Udyog Aadhar: Government clarifies". தி எகனாமிக் டைம்ஸ். June 20, 2016. https://economictimes.indiatimes.com/small-biz/policy-trends/no-registration-fee-for-udyog-aadhar-government-clarifies/articleshow/52830751.cms.
- ↑ "Aadhaar-like ID number for businesses in the works t". தி எகனாமிக் டைம்ஸ். February 2, 2018. https://economictimes.indiatimes.com/small-biz/startups/newsbuzz/aadhaar-like-id-number-for-businesses-in-the-works/articleshow/62750605.cms.
- ↑ "How Udyog Aadhar Benefits to Small Business in India". Theindianwire. August 28, 2018. https://www.theindianwire.com/business/udyog-aadhar-benefits-small-business-india-54299/.
- ↑ "Udyog Aadhar Online Registration / MSME Registration Process". etaxadvisor.com. பார்க்கப்பட்ட நாள் 15 June 2020.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ "Frequently Asked Questions and Answers". udyogaadhaar.gov.in. Archived from the original on 15 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 15 June 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளியிணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ வலைத்தளம்
- உத்யோக் ஆதார் துண்டு வெளியீடு பரணிடப்பட்டது 2020-03-27 at the வந்தவழி இயந்திரம்
- உத்யோக் ஆதார் விகாஸ்பீடியாவில்