உன்னிச்சைக் குளம்
உன்னிச்சைக் குளம் (Unnichchai Tank) என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள உன்னிச்சை என்ற ஊரில் அமைந்துள்ள நீர்த்தேக்கம் ஆகும்.
உன்னிச்சை குளம் | |
---|---|
உன்னிச்சை குளம் | |
அமைவிடம் | உன்னிச்சை |
ஆள்கூறுகள் | 7°36′17″N 81°31′58″E / 7.60472°N 81.53278°E |
வகை | Reservoir |
மேலாண்மை முகமை | Department of Irrigation |
கட்டியது | 1919 |
நீர்க் கனவளவு | 61,000 acre⋅ft (75,242,392 m3) |
1919 ஆம் ஆண்டில் மகிழவட்டுவான் ஆற்றை மறித்துக் கட்டப்பட்ட இக்குளமானது மட்டக்களப்பில் உள்ள மிகப் பெரிய குளமாக விளங்குகின்றது. 61,000 ஏக்கர் பரப்புள்ள இக்குளத்தில் சிறுபோக மற்றும் பெரும்போக விளைச்சலுக்கு அவசியமாகத் தேவைப்படுகின்ற நீர் பெற்றுக் கொள்ளப்படுகிறது.
இக்குளமானது குடிநீருக்காகவும் மீன்பிடிக்காகவும் பாவிக்கப்படுகிறது. 550 மில்லியன்[1] (இலங்கை) ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள உன்னிச்சை ஒருங்கிணைக்கப்பட்ட நீர்வழங்கல் திட்டம் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் 7 பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 106 கிராமசேவகர் பிரிவுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கப்படவுள்ளது.
படங்கள்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ "RAISING OF UNNICHCHAI TANK BUND". பார்க்கப்பட்ட நாள் 27 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)