உப்புளூரி கணபதி சாஸ்திரி

உப்புளூரி கணபதி சாஸ்திரி (Uppuluri Ganapathi Sastry 1888-1989) என்பவா் இந்தியாவைச் சேர்ந்த சமசுகிருத அறிஞரும், எழுத்தாளரும், ஆன்மீக ஆசிரியருமாவார். வேதங்களில் புலமைப்பரிசில் பெற்ற இவர் வேதங்கள் பற்றிய வேத சார ரத்னாவலி என்ற நூலை எழுதியுள்ளார்.

உப்புளூரி கணபதி சாஸ்திரி
பிறப்பு(1888-12-16)16 திசம்பர் 1888
காக்கிநாடா, ஆந்திர பிரதேசம், இந்தியா
இறப்பு17 சூலை 1989(1989-07-17) (அகவை 100)
ஹைதராபாத், ஆந்திர பிரதேசம், இந்தியா
பணிஅறிஞர், எழுத்தாளர், சமய போதனையாளர்
அறியப்படுவதுவேத பாடங்கள்
விருதுகள்1985 பத்ம பூசண்

கணபதி சாஸ்திரி தென்னிந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் காக்கிநாடாவில் 1888 திசம்பர் 16 அன்று பிறந்தார்.[1] ஆந்திரப் பிரதேச அரசின் அறநிலையத் துறைக்காக வேதங்கள் குறித்த வேத சார ரத்னாவலி என்ற இரு-பகுதி உரை நூலினை எழுதியுள்ளார். [2][3] 1985 ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு பத்ம பூசண் என்ற நாட்டின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை விருதை வழங்கி சிறப்பித்துள்ளது.[4] சாஸ்திரி 1989 சூலை 17 அன்று இறந்தார்.[1] இவரது நினைவாக வேதங்களைப் பரப்புவதற்காக நிறுவப்பட்ட அரசு சாரா அமைப்பிற்கு சிறீ உப்புளூரி கணபதி சாஸ்திரி வேத சாஸ்திர பரிசத் என பெயரிடப்பட்டது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Welcome to SRIVGVP". www.srivgvp.org. பார்க்கப்பட்ட நாள் 2018-06-02.
  2. Uppuluri Ganapathi Sastri (2018-06-02). "Vedasaara RatnavaliPart II" (in Sanskrit). பார்க்கப்பட்ட நாள் 2018-06-02.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Publications". www.srivgvp.org. 2018-06-02. பார்க்கப்பட்ட நாள் 2018-06-02.
  4. "Padma Awards". Padma Awards. Government of India. 2018-05-17. பார்க்கப்பட்ட நாள் 2018-05-17.
  5. "Overview". www.srivgvp.org. 2018-06-02. பார்க்கப்பட்ட நாள் 2018-06-02.

வெளி இணைப்புகள்

தொகு