உமா குமரன்
உமா குமரன் (Uma Kumaran) என்பவர் பிரித்தானிய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். தொழிற் கட்சி உறுப்பினரான இவர் இசுட்ராட்ஃபோர்டு-போ தொகுதியை சூலை 2024 முதல் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
உமா குமரன் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 5 சூலை 2024 | |
தொகுதி | இசுட்ராட்ஃபோர்டு-போ |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | உமா குமரன் இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
அரசியல் கட்சி | தொழிற் கட்சி |
முன்னாள் கல்லூரி | இலண்டன் குயீன் மேரி பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | www |
தொடக்க வாழ்க்கை
தொகுஉமா குமரன் இலங்கைத் தமிழ் பெற்றோருக்கு கிழக்கு இலண்டனில் பிறந்தார்.[1][2] இலங்கை உள்நாட்டுப் போரில் புலம் பெயர்ந்து இலண்டன் வந்து சேர்ந்த இவரது பெற்றோருக்கு, அவர்களது குடியேற்ற வழக்கில் தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் செரமி கோர்பின் உதவி செய்தார்.[3] இவரது குடும்பம் பின்னர் ஹரோ நகருக்கு இடம்பெயர்ந்தது, அங்கு உமா பென்ட்லி வுட் உயர் பாடசாலையிலும், செயிண்ட் டொமினிக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.[4][5] பின்னர் அவர் இலண்டன் குயீன் மேரி பல்கலைக்கழகத்தில் அரசியலில் இளங்கலைப் பட்டத்தையும், முதுகலைப் பட்டத்தையும் பெற்றார்.[3][6]
பணி
தொகுஉமா குமரன் மார்ச் 2009 முதல் ஆகத்து 2010 வரை தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டான் பட்லரின் நாடாளுமன்ற ஆய்வாளராகவும், வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.[5][7][8] செப்டம்பர் 2010 முதல் திசம்பர் 2014 வரை இசுலிங்டன் நகரசபையில் தொழிற்கட்சிக் குழுவில் பணியாற்றினார்.[5][9] அவர் சாதிக் கானின் மூத்த பரப்புரை ஆலோசகராகவும் (மே 2015 முதல் அக்டோபர் 2015 வரை), உள்ளூராட்சி சங்கத்தில் (அக்டோபர் 2015 முதல் நவம்பர் 2017 வரை) அரசியல் ஆலோசகராகவும் இருந்தார்.[6][10] பின்னர் நவம்பர் 2017 முதல் ஆகத்து 2020 வரை லண்டன் நகர முதல்வர் சாதிக் கானின் மூத்த ஆலோசகராகப் பணியாற்றினார்.[6][11] செப்டம்பர் 2020 முதல் மார்ச் 2022 வரை தொழிற்கட்சித் தலைவர் கீர் இசுட்டார்மரின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துணை இயக்குநராகப் பணியாற்றினார்.[6][12] ஏப்ரல் 2022 முதல் மே 2024 வரை சி40 நகரங்களின் காலநிலைத் தலைமைக் குழுவிற்கான வெளியுறவு மற்றும் பன்னாட்டு உறவுகளின் இயக்குநராக இருந்தார்.[6][13][14]
அரசியலில்
தொகுஉமா குமரன் 2010 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல்களில் லண்டன் பரோ ஆஃப் ஹாரோ தொகுதியில் தொழிற் கட்சி கட்சி வேட்பாளர்களில் ஒருவராகப் போட்டியிட்டார், ஆனால் தேர்ந்தெடுக்கப்படவில்லை.[15] நவம்பர் 2013 இல், ஹாரோ கிழக்கில் அதன் வேட்பாளராக தொழிற் கட்சியால் உமா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5][16] 2015 பொதுத் தேர்தல் பரப்புரையின்போது, உமாவும் லிபரல் டெமக்கிராட்சு வேட்பாளரும், பழமைவாதக் கட்சியின் உறுப்பினர் முக்கேஷ் நாக்கர் என்பவரால் நிறுவப்பட்ட தர்ம சேவா பூர்வபட்சா என்ற அமைப்பால் சாதிப் பாகுபாட்டுக்கு எதிரான சட்டத்திற்கு 2013 இல் ஆதரவளித்தமைக்காகத் தாக்கப்பட்டனர்.[17][18][19] 2015 பொதுத்தேர்தலில் உமா குமரன் தோற்கடிக்கப்பட்டார்.[20][21] மே 2024 இல், புதிதாக உருவாக்கப்பட்ட இசுட்ராட்ஃபோர்ட்-போ தொகுதியில் தொழிற்கட்சியின் வேட்பாளராக உமா குமரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[22][23] 2024 பொதுத்தேர்தலில் உமா 11,634 வாக்குகள் பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.[24][25]
தேர்தல் வரலாறு
தொகுதேர்தல் | தொகுதி | கட்சி | வாக்குகள் | முடிவு | |
---|---|---|---|---|---|
2010 உள்ளாட்சி[26] | ஹரோ | தொழிற் கட்சி | 1,535 | தெரிவு செய்யப்படவில்லை | |
2015 பொதுத்தேர்தல்[27][28] | ஹரோ கிழக்கு | தொழிற் கட்சி | 19,911 | தெரிவு செயப்படவில்லை | |
2024 பொதுத் தேர்தல்[24] | இசுட்ராட்ஃபோர்டு மற்றும் போ | தொழிற் கட்சி | 19,145 | தெரிவு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Expecting to benefit from desire for change". The Jewish Chronicle (London, UK) இம் மூலத்தில் இருந்து 2 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240602035448/https://www.thejc.com/news/expecting-to-benet-from-desire-for-change-dqx1hyox.
- ↑ "Talk at the Cafe Spectator: Lankan-origin Britons enter election fray in UK". The Sunday Times (Sri Lanka) (Colombo, Sri Lanka). 23 June 2024. https://www.sundaytimes.lk/240623/columns/a-common-tamil-candidate-jaishankar-tells-tamil-parties-he-has-nothing-to-say-561774.html.
- ↑ 3.0 3.1 "A Daughter Of Sri Lankan Tamil To Contest For Labour Party In Harrow East". கொழும்பு டெலிகிராஃபு. 18 October 2013 இம் மூலத்தில் இருந்து 28 May 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220528173257/https://www.colombotelegraph.com/index.php/a-daughter-of-sri-lankan-tamil-to-contest-for-labour-party-in-harrow-east/.
- ↑ "About Labour: Labour people - Labour's Candidates - Harrow East, Uma Kumaran". London, UK: தொழிற் கட்சி. Archived from the original on 22 April 2015.
- ↑ 5.0 5.1 5.2 5.3 Shammas, John (18 November 2013). "'We are a success story of multicultural Britain': Labour select Uma Kumaran as Harrow East 2015 candidate". MyLondon (London, UK) இம் மூலத்தில் இருந்து 1 December 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201201205713/https://www.mylondon.news/incoming/we-success-story-modern-multicultural-6315052.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 Garfinkel, Imogen (19 June 2024). "Labour candidate Uma Kumaran on a Gaza ceasefire, the NHS and the Grenfell fire". London, UK: Roman Road London. Archived from the original on 20 June 2024. பார்க்கப்பட்ட நாள் 22 June 2024.
- ↑ "Register of Interests of Members' Secretaries and Research Assistants (as at 12 April 2010)" (PDF). London, Uk: ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம். p. 40. Archived from the original (PDF) on 23 April 2010.
- ↑ Shoffman, Marc (23 April 2015). "Countdown to Election Day! Meet the candidates: Harrow East". Jewish News (London, UK) இம் மூலத்தில் இருந்து 31 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240531235037/https://www.jewishnews.co.uk/countdown-to-election-day-meet-the-candidates-harrow-east/.
- ↑ Morgan, Ben (8 May 2015). "Harrow East election result: Tory Bob Blackman doubles majority to retain seat". Evening Standard (London, UK) இம் மூலத்தில் இருந்து 25 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200325035144/https://www.standard.co.uk/news/politics/harrow-east-election-result-tory-bob-blackman-doubles-majority-to-retain-seat-10234545.html.
- ↑ Gallagher, Paul (21 April 2017). "Uma Kumaran: 'I can't stand – last time the Tories dragged the campaign into the gutter'". i (newspaper) (London, UK) இம் மூலத்தில் இருந்து 2 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240602015711/https://inews.co.uk/news/politics/general-election-2017-harrow-east-labour-candidate-60618.
- ↑ "LGA Labour Group Annual Report 2018" (PDF). Local Government Association. London, UK: LGA Labour Group. p. 2. Archived from the original (PDF) on 10 June 2024. பார்க்கப்பட்ட நாள் 24 June 2024.
- ↑ "2024 – General Election – Week 3". London, UK: JBP Associates. 11 June 2024. பார்க்கப்பட்ட நாள் 25 June 2024.
- ↑ "Our Team". London, UK: C40 Cities Climate Leadership Group. Archived from the original on 30 August 2023.
- ↑ Harpin, Lee (20 May 2024). "Jewish Labour activist seeks to stand for Party in Corbyn's current seat". Jewish News (London, UK) இம் மூலத்தில் இருந்து 20 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240520132644/https://www.jewishnews.co.uk/jewish-labour-activist-seeks-to-stand-for-labour-in-jeremy-corbyns-current-seat/.
- ↑ "Pinner South Ward — Harrow". Local Elections Archive Project. Archived from the original on 28 November 2021. பார்க்கப்பட்ட நாள் 24 June 2024.
- ↑ Thain, Bruce (18 November 2013). "Uma Kumaran selected as Labour's Harrow East candidate". Harrow Times (Watford, UK). https://www.harrowtimes.co.uk/news/10816917.uma-kumaran-selected-as-labours-harrow-east-candidate/.
- ↑ "Uma Kumaran: Political Personality". Asian Voice. 29 May 2017 இம் மூலத்தில் இருந்து 24 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210924190824/https://www.asian-voice.com/Volumes/2017/3-June-2017/Uma-Kumaran-Political-Personality.
- ↑ Hundal, Sunny (10 December 2019). "The campaigns trying to turn British Indians against each other". openDemocracy (London, UK) இம் மூலத்தில் இருந்து 16 January 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240116231309/https://www.opendemocracy.net/en/opendemocracyuk/campaigns-trying-turn-british-indians-against-each-other/.
- ↑ Oliphant, Victoria (6 May 2015). "Labour candidate Uma Kumaran condemns Dharma Sewa Purvapaksha leaflet as 'gutter politics'". Harrow Times (Watford, UK). https://www.harrowtimes.co.uk/news/12933345.labour-candidate-uma-kumaran-condemns-dharma-sewa-purvapaksha-leaflet-as-gutter-politics/.
- ↑ "Election 2015: Bob Blackman fends off Labour challenge in Harrow East". The Jewish Chronicle (London, UK) இம் மூலத்தில் இருந்து 4 March 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240304131122/https://www.thejc.com/news/election-2015-bob-blackman-fends-off-labour-challenge-in-harrow-east-opzmyqn4.
- ↑ de Silva, Neville (11 May 2015). "UK election brings sweet music to Lankan ears". Daily FT (Colombo, Sri Lanka). https://www.ft.lk/article/417789/UK-election-brings-sweet-music-to-Lankan-ears.
- ↑ Aletha Adu; Mason, Rowena; Courea, Eleni (31 May 2024). "Diane Abbott free to stand for Labour in election, says Starmer". தி கார்டியன் (London, UK) இம் மூலத்தில் இருந்து 9 June 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240609213927/https://www.theguardian.com/politics/article/2024/may/31/diane-abbott-free-to-stand-for-labour-in-election-says-starmer.
- ↑ "East Ham, Stratford and Bow and West Ham and Beckton Parliamentary candidates chosen". London, UK: Newham Labour. 8 June 2024. பார்க்கப்பட்ட நாள் 25 June 2024.
- ↑ 24.0 24.1 "Election 2024: Stratford and Bow results". BBC News (London, UK). https://www.bbc.co.uk/news/election/2024/uk/constituencies/E14001525.
- ↑ "Uma Kumaran elected as MP for Stratford and Bow, Stephen Timms elected as MP for East Ham, and James Asser elected as MP for West Ham and Beckton". Newham, UK: Newham London Borough Council. Archived from the original on 5 July 2024. பார்க்கப்பட்ட நாள் 5 July 2024.
- ↑ "Election results for Pinner South: Borough Election - Thursday 6 May 2010". Harrow, UK: Harrow London Borough Council. 6 May 2010. பார்க்கப்பட்ட நாள் 24 June 2024.
- ↑ "Election results for Harrow East: Parliamentary Election - Thursday 7 May 2015". Harrow, UK: Harrow London Borough Council. 7 May 2015. Archived from the original on 5 July 2022.
- ↑ "Election history: 2015 General Election - Harrow East". London, UK: ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம். பார்க்கப்பட்ட நாள் 24 June 2024.