உயிரி இயற்பியல்

(உயிரி-இயற்பியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உயிரி இயற்பியல் (Biophysics) என்பது உயிரியல் அமைப்புக்கள் குறித்து ஆராய இயற்பியல் தத்துவங்களையும் செய்முறைகளையும் பயன்படுத்தும் ஓர் பல்துறை அறிவியல் கல்வியாகும்.[1] இவ்வியலானது உயிரியின் பரிமாணங்களான (Bio Scale) அணு முதற்கொண்டு மூலக்கூறு, உயிரணுக்கள்(cell), திசு, உறுப்புகள், உடலம், சூழல் தொகுதிவரையலான உயிரியல் அமைப்பின் பல்வேறு நிலைகள் விவரிக்கப்படுகின்றன. இவ்வியலை உயிரியல் மற்றும் இயற்பியலின் பாலமாகவும் குறிப்பிடலாம். இந்த பாடத்திட்டமும் உயிர்வேதியியல், நானோ தொழில்நுட்பம், உயிரிப் பொறியியல், வேளாண்இயற்பியல், மற்றும் தொகுதி உயிரியல் பாடத்திட்டங்களும் பெருமளவில் மேற்பொருந்தி உள்ளன.

ஒளிச்சேர்க்கை தொகுத்தல் மையம்.

வரலாறு

தொகு

இயற்பியலையும், உயிரியலையும் ஒப்பிடும் பொது உயிரி இயற்பியல் புதிய மற்றும் வளர்ந்து வரும் அறிவியல் துறை ஆகும்.

  • 1592 - கலீலியோ கலிலி படுவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அங்கு 1610 வரை வடிவியல், இயக்கவியல், மற்றும் வானியல் பயிற்றுவித்தார்.[2] இவர் குழி, குவி ஆடிகளுடைய கூட்டு நுண்ணோக்கியைக் கண்டறிந்தார்.
  • 1602 - வில்லியம் ஹார்வி இரத்தம் தமனிகளின் மூலமாக வெளிச்சென்று சிரைகளின் மூலமாய் அது மீண்டும் இதயத்தை அடைகிற இரத்தச் சுழற்சியைக் கண்டறிந்தார்.
  • 1662 - மார்செலோ மால்பீஜி - நுண்ணோக்கி உடற்கூறியலை மேம்படுத்துதல், மால்பீஜியன் குழாய்களைக் கண்டறிதல்.
  • 1840களில், பெர்லினைச் சேர்ந்த உடலியக்கவியல் வல்லுநர்கள் (the Berlin school of physiologists) உடற்செயலியலை உயிரற்ற காரணிகளைக் (வெப்பம், அழுத்தம், ஒளி) கொண்டு ஆராய்ந்துள்ளனர். அவர்களுள் ஹெர்மான் வான் ஹெல்மோட்ஸ்(Hermann von Helmholtz), எர்னஸ்ட் ஹென்ரிச் வெபெர்(Ernst Heinrich Weber), கார்ல் எஃப். டபில்யூ. லட்விக் (Carl F. W. Ludwig), ஜோன்னஸ் பீட்டர் முல்லர் (Johannes Peter Müller).[3]
  • 1957ல் - உயிரி இயற்பியல் குழுமம் தொடங்கப்பட்டது. இன்று உலகெங்குமுள்ள ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட உயிரி இயற்பியல் வல்லுநர்கள் உறுப்பினர்களாயுள்ளனர்.[4]

கண்ணோட்டம்

தொகு

மூலக்கூறு உயிரி இயற்பியல், உயிர் வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியலைப் போன்று உயிர் இயக்கத்தின் பல்வேறு வினாக்களுக்கும் சிறப்பான அளவில் விடையளிக்கின்றன.

உயிரி இயற்பியலாளர்கள்,

  • உயிரிகளின் கல அமைப்புகளின் இயக்கம், பரிமாணம், சூழல் விளைவுகள் பற்றியும்,
  • டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏக்களின் இடையேயான தொடர்புகளை அறியவும்,
  • புரதச்சேர்க்கை, இயக்க ஒழுங்கமைவு பற்றி ஆராயவும்

மேலும் பல ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளனர்.

மேற்சான்றுகள்

தொகு
  1. "Careers in Biophysics brochure, Biophysical Society" (PDF). Archived from the original (PDF) on 2011-10-30. பார்க்கப்பட்ட நாள் 2013-03-31.
  2. [1] பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் உயிர் இயற்பியல் வரலாறு
  3. Donald R. Franceschetti. Applied Science - 5 Volume Set. SALEM PressINC; 15 May 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-58765-781-8. p. 234.
  4. Joe Rosen; Lisa Quinn Gothard. Encyclopedia of Physical Science. Infobase Publishing; 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8160-7011-4. p. 49.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயிரி_இயற்பியல்&oldid=3699715" இலிருந்து மீள்விக்கப்பட்டது