உயிரே உனக்காக (தொலைக்காட்சித் தொடர்)

உயிரே உனக்காக அல்லது கஸம்- தேரே ப்யார் கி என்பது 19 சூலை 2017 முதல் 17 பெப்ரவரி 2018 வரை நஸ்ட் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு மொழிமாற்றுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் கலர்ஸ் தொலைக்காட்சியில் 19 சூலை 2017 முதல் சூலை 27, 2018 வரை ஒளிபரப்பாகி 621 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.[1]

உயிரே உனக்காக
Kasam — Tere Pyaar Ki
கஸம்- தேரே ப்யார் கி
வேறு பெயர்கஸம்- தேரே ப்யார் கி
வகைபுனைகதை
நாடகம்
காதல்
இயக்கம்முசாமாள் தேசாய்
நடிப்புகிரத்திக்கா தீர் சரத் மல்ஹோத்ரா
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்1
அத்தியாயங்கள்621
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்ஏக்தா கபூர்
ஷோபா கபூர்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்பாலாஜி டெலிபிலிம்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்7 மார்ச்சு 2016 (2016-03-07) –
27 சூலை 2018 (2018-07-27)
வெளியிணைப்புகள்
Official website

கதைச்சுருக்கம்

தொகு

ரிஷி மற்றும் அணு ஆகிய இருவரும் சிறுவயது நண்பர்கள். ஒருநாள் ஆபத்தில் ரிஷியின் உயிரை அணு காப்பாற்றினாள். பிறகு காத்யாயினி என்ற பெண் சாமியார் ஒருவர், இந்த இரு ஜோடியின் ஜாதகப் பொருத்தம் சிறப்பாக இருப்பதாகவும் அணு ரிஷியின் வாழ்க்கையில் ஒரு கவசமாக இருந்து அவனைக் காப்பாள் என்று தீர்க்கதரிசனம் கூறி அவர்களை காளிதேவியின் சிலை முன்பு சேர்த்து வைக்கிறார். ஆனால் அணுவின் குடும்பத்தை விரும்பாத ரிஷியின் அம்மா தன் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுவிடுகிறார்.

17 வருடங்களுக்குப் பிறகு அணு ரிஷியின் வருகைக்காக மகிழ்வுடன் காத்திருக்கிறார். ஆனால் ரிஷியோ தன் சிறுவயது நினைவுகளை மறந்துவிட்டான். ரிஷியின் பிடிவாதத்தால் அவன் குடும்பத்தினர் மீண்டும் இந்தியா திரும்பினர். அதே நாளில் அணுவின் பெற்றோர் ஒரு விபத்தில் இறந்துவிடுகின்றனர். அதற்கு முன்பு அணுவின் பெற்றோர் அவள் தன் சித்தி வாணி காட்டும் பையனை மணக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கி இருந்தனர்.

பிறகு ரிஷி பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் அவனை தன் மகள் நேகாவிற்கு திருமணம் செய்து வைக்க வாணி நினைத்தார். ஆனால் ரிஷியோ அணுவுடன் தான் சிறுவயதில் பழகினான். அதனால் ரிஷி குடும்பத்தினர் முன்பு ஸ்நேகாவை அணு என்று பொய் கூறி அறிமுகப்படுத்துகிறார். பிறகு அவள் அணுவிடம் இனி உன் பெயரைப் ப்ரீத்தி என்று மாற்றிக்கொள்ளுமாறு கூறுகிறார். பிறகு ரிஷி-அணு(ஸ்நேகா) திருமணம் முடிவு செய்யப்படுகிறது. ஆனால் ரிஷி விருப்பமின்றி அந்த திருமணத்திற்கு சம்மதித்தான். ஏனெனில் அவன் ப்ரீத்தியை பார்த்த நாள் முதலே அவளைக் காதலிக்கத் தொடங்கி விட்டான்.

ப்ரீத்தியின் திருமணம் பரத் என்ற பையனுடன் நிச்சயிக்கப்படுகிறது. தன் சித்தி காட்டிய பையடன் என்பதால் வேறு வழியின்றி ப்ரீத்தி அவனை மணக்க சம்மதிக்கிறாள். ஆனால் இந்த பரத் ஏற்கனவே சலோனி என்ற பெண்ணுடன் திருமணம் ஆனவன். இந்த உண்மையை அறியும் ரிஷி இதை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்பினான். ஆனால் அது முடியாமல் போனது.

இறுதியில் ப்ரீத்தி சுயநினைவின்றி இருந்தபோது ரிஷி அவளை தூக்கிச்சென்று ஒரு கோயிலில் திருமணம் செய்துகொண்டான். அப்போது ப்ரீத்தி தாம்தான் உண்மையான அணு என்ற உண்மையை ரிஷியிடம் சொல்கிறார். பிறகு அணு ஒரு விபத்தில் இறந்துவிடுகிறார். இதனால் துயருற்ற ரிஷி தன் உயிரையும் போக்கிக்கொள்ள முயன்றான். அப்போது அணுவின் ஆவி அவனிடம் தாம் மீண்டும் மறுஜென்மம் எடுத்து வருவேன் என்று கூறுகிறார்.

முநடிகர்கள்

தொகு
 • கிரத்திக்கா தீர் - அணு/ப்ரீத்தி
 • சரத் மல்ஹோத்ரா - ரிஷி
 • ஷிவானி தோமர்
 • சபா மிர்ஸா
 • விஜய் காஷ்யப்
 • விபா சிபர்
 • லலித் பிஷ்ட்
 • சேத்னா கெண்டிரா
 • சூபெர் கே. கான்
 • ஆதிதி ஷர்மா வேட்
 • மனோரமா பட்டீஸ்சம்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு