உருசிய சைபீரிய நடுவண் மாவட்டம்
சைபீரிய கூட்டாட்சி மாவட்டம் (Siberian Federal District, உருசியம்: Сиби́рский федера́льный о́круг, Sibirsky federalny okrug) என்பது உருசியாவின் எட்டு நடுவண் மாவட்டங்களில் ஒன்றாகும். 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த நடுவண் மாவட்டத்தின் மக்கள் தொகை 17,178,298 என இருந்தது. இதன் பரப்பளவு 4,361,800 சதுர கிலோமீட்டர்கள் (1,684,100 sq mi) ஆகும். நடுவண் மாவட்டத்தின் முழு பகுதியும் ஆசிய கண்டத்திற்குள் உள்ளது.
சைபீரிய நடுவண் மாவட்டம்
Сибирский федеральный округ | |
---|---|
உருசியாவில் சைபீரிய நடுவண் மாவட்டத்தின் அமைவிடம் | |
நாடு | உருசியா |
உருவாக்கம் | 18 மே 2000 |
நிர்வாக மையம் | நோவசிபீர்சுக் |
அரசு | |
• சனாதிபதியின் தூதர் | செர்ஜி மென்யாயிலோ |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,361,800 km2 (16,84,100 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 2வது |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 1,71,78,298[2] |
• தரவரிசை | 3வது |
• அடர்த்தி | 3.8/km2 (10/sq mi) |
Time zones | |
ஓம்சுக் மாகாணம் | ஒசநே+06:00 (Omsk Time) |
most of the district | ஒசநே+07:00 (Krasnoyarsk Time) |
இர்கூத்சுக் மாகாணம் | ஒசநே+08:00 (Irkutsk Time) |
கூட்டாட்சிப் பகுதிகள் | 10 contained |
பொருளாதாரப் பகுதிகள் | 2 contained |
ம.மே.சு. (2018) | 0.796[3] high · 7th |
இணையதளம் | sfo.gov.ru |
13 மே 2000 அன்று சனாதிபதி ஆணையின் பேரில் இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது. உருசியாவின் மொத்த நிலப்பரப்பில் இது 30% உள்ளடக்கியுள்ளது.[4] உருசிய சனாதிபதி விளாதிமிர் பூட்டின் பிறப்பித்த ஆணைக்கு இணங்க ,2018 நவம்பரில், புரியாத்தியா மற்றும் சபைக்கால்சுக்கி கிராய் ஆகியவை சைபீரிய நடுவண் மாவட்டத்திலிருந்து நீக்கப்பட்டு, தூரக் கிழக்கு நடுவண் மாவட்டத்தோடு இணைக்கபட்டன.[5]
மக்கள்வகைப்பாடு
தொகுஉள்ளடக்கங்கள்
தொகுஇந்த மாவட்டத்தில் மேற்கு சைபீரிய (பகுதி) மற்றும் கிழக்கு சைபீரிய பொருளாதார பகுதிகள் மற்றும் பத்து கூட்டாட்சி அமைப்புகளை உள்ளடக்கியுள்ளது :
# | கொடி | கூட்டாட்சி அமைப்புகள் | பரப்பளவு கி.மீ 2 இல் | மக்கள் தொகை (2010) | தலைநகரம் / நிர்வாக மையம் |
---|---|---|---|---|---|
1 | அல்த்தாய் குடியரசு | 92,900 | 206,168 | கோர்னோ-அல்தேஸ்க் | |
2 | அல்த்தாய் பிரதேசம் | 168,000 | 2,419,755 | பர்னால் | |
3 | இர்கூத்சுக் மாகாணம் | 774,800 | 2,248,750 | இர்குட்ஸ்க் | |
4 | கெமரோவோ மாகாணம் | 95,700 | 2,763,135 | கெமரோவோ | |
5 | கிராஸ்னயார்ஸ்க் பிரதேசம் | 2,366,800 | 2,828,187 | கிராஸ்நோயார்ஸ்க் | |
6 | நோவசிபீர்சுக் மாகாணம் | 177,800 | 2,665,911 | நோவசிபீர்சுக் | |
7 | ஓம்சுக் மாகாணம் | 141,100 | 1,977,665 | Omsk | |
8 | தோம்சுக் மாகாணம் | 314,400 | 1,047,394 | டாம்ஸ்க் | |
9 | துவா குடியரசு | 168,600 | 307,930 | கைசில் | |
10 | அக்காசியா குடியரசு | 61,600 | 532,403 | அபகன் |
சனாதிபதி தூதர்கள் பட்டியல்
தொகு- லியோனிட் டிராச்செவ்ஸ்கி (18 மே 2000 - 9 செப்டம்பர் 2004)
- அனடோலி குவாஷ்னின் (9 செப்டம்பர் 2004 - 9 செப்டம்பர் 2010)
- விக்டர் டோலோகோன்ஸ்கி (9 செப்டம்பர் 2010 - 12 மே 2014)
- நிகோலே ரோகோஷ்கின் (12 மே 2014 - 28 ஜூலை 2016)
- செர்ஜி மென்யாயிலோ (28 ஜூலை 2016 முதல்) [6]
குறிப்புகள்
தொகு- ↑ "1.1. ОСНОВНЫЕ СОЦИАЛЬНО-ЭКОНОМИЧЕСКИЕ ПОКАЗАТЕЛИ в 2014 г." [MAIN SOCIOECONOMIC INDICATORS 2014]. Regions of Russia. Socioeconomic indicators - 2015 (in ரஷியன்). Russian Federal State Statistics Service. Archived from the original on 26 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 26 July 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Russian Federal State Statistics Service (2011). Всероссийская перепись населения 2010 года. Том 1 [2010 All-Russian Population Census, vol. 1]. Всероссийская перепись населения 2010 года [2010 All-Russia Population Census] (in Russian). Federal State Statistics Service.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 18 March 2020.
- ↑ "Siberia Federal District, Russia (Siberian)". RussiaTrek.org. பார்க்கப்பட்ட நாள் July 15, 2012.
- ↑ "Официальный интернет-портал правовой информации". publication.pravo.gov.ru. Archived from the original on 2022-02-05. பார்க்கப்பட்ட நாள் 2018-11-04.
- ↑ "Путин освободил Меняйло от должности губернатора Севастополя" (in Russian). Echo of Moscow. 28 July 2016. பார்க்கப்பட்ட நாள் 28 July 2016.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)