உரூபினா யாதவ்

உரூபினா யாதவ் (Rubina Yadav) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள வீராங்கனையாவார். 2001 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்ரு விளையாடுகிறார். இந்திய தடகள அணியிலும் உரூபினா அங்கம் வகித்தார். 2022 ஆம் ஆண்டு சீனாவின் காங்சூவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உயரம் தாண்டுதல் நிகழ்வில் [1] [2] ஒன்பதாவது இடத்தைப் பிடித்தார். [3] [4] ஏப்ரல் மாதம், பெங்களூரில் உள்ள சிறீ கண்டீரவா விளையாட்டரங்கில் நடந்த மூன்றாவது இந்திய கிராண்ட் பிரிக்சு போட்டியில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தகுதிச் சாதனையை அவர் எட்டினார். 1.80 மீ உயரம் தகுதியளவாக இருந்த நிலையில் இவர் 1.81 மீ உயரம் தாண்டி தகுதி பெற்றார்.[4] இன்சுபயர் விளையாட்டு நிறுவனத்தில் உரூபினா பயிற்சி பெற்றார். [5]

தொழில்

தொகு
  • 2023: மே மாதம், ராஞ்சியின் மொராபாடியில் உள்ள பிர்சா முண்டா கால்பந்து மைதானத்தில் நடைபெற்ற 26 ஆவது தேசிய கூட்டமைவு கோப்பை மூத்தோர் தடகள வெற்றியாளர் போட்டியில் 1.80மீ [6] உயரம் தாண்டி தங்கம் வென்றார். [7]
  • 2023: சூலை மாதம், தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள சுபச்சலசாய் தேசிய விளையாட்டரங்கில் நடந்த ஆசிய தடகள வெற்றியாளர் போட்டியில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். [7]
  • 2019: அக்டோபரில், ராஞ்சியில் நடந்த 59 ஆவது தேசிய ஓபன் தடகள வெற்றியாளர் போட்டியில் தங்கம் வென்றார். [8]

மேற்கோள்கள்

தொகு
  1. PTI. "AFI looking to add 15 more athletes to its already announced 65-member team for Asian Games" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-10.
  2. Sportstar. "Athletics Asian Games 2023, October 3 HIGHLIGHTS: Parul Chaudhary, Annu Rani win gold; Tejaswin win decathlon silver, Chithravel gets bronze in triple jump" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-11-12.
  3. "Full list of Indian athletes for Asian Games 2023" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-03.
  4. 4.0 4.1 Bureau. "India Grand Prix-3 | Rubina towers with a leap of 1.81m to attain Asian Games qualifying mark" (in en-IN). https://www.thehindu.com/sport/athletics/india-grand-prix-3-rubina-towers-with-a-leap-of-181m-to-attain-asian-games-qualifying-mark/article66720994.ece. 
  5. "Six Athletes from Inspire Institute of Sport Qualify for the 2023 Asian Athletics Championship" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-10.
  6. "Jyothi Yarraji wins second gold in 200m; Rohit Yadav bags javelin gold".
  7. 7.0 7.1 "Rubina Yadav | Profile".
  8. "Coach blames Jharkhand's poor show on inexperience".

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரூபினா_யாதவ்&oldid=3870857" இலிருந்து மீள்விக்கப்பட்டது