உரையாசிரியர்கள் (அகரவரிசை)
தமிழில் தோன்றிய பண்டைய இலக்கண, இலக்கிய நூல்கள் செய்யுள் வடிவிலும், பாடல்கள் வடிவிலும் அமைந்துள்ளன. இவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு அவற்றிற்கு உரைநூல்கள் தோன்றின.
இவை உரையாசிரியர்கள் (காலநிரல்) என்னும் கட்டுரையில் காலத்தை மையமாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றை எளிதில் ஒப்புநோக்க ஏந்தாக இந்த அகரவரிசை நோக்கு இங்குத் தரப்படுகிறது.
பட்டியல்
தொகுஉரையாசிரியர் | உரைநூல் | இலக்கணம் அல்லது இலக்கியம் | ஆசிரியர் சமயம் | நூற்றாண்டு |
---|---|---|---|---|
அடியார்க்கு நல்லார் | சிலப்பதிகாரம் | இலக்கியம் | சைவம் | 12 |
அரும்பதவுரைகாரர் | சிலப்பதிகாரம் அரும்பதவுரை | இலக்கியம் | சைவம் | 11 |
ஆத்திரையன் பேராசிரியர் | தொல்காப்பியப் பொதுப்பாயிரம், அதன் உரை | இலக்கணம் | சைவம் | 10 |
இராச பவித்திர பல்லவதரையர் | அவிநயம் நூலும், உரையும் (கிடைக்கவில்லை) | இலக்கணம் | சைனம் | 13 |
இளம்பூரணர் | தொல்காப்பியம் முழுமைக்கும் | இலக்கணம் | சைனம் | 11 |
உரையாசிரியர் | களவியல் காரிகை | இலக்கணம் | சைவம் | 14 |
உரையாசிரியர் | நேமிநாதம் | இலக்கணம் | - | 15 |
உரையாசிரியர் | வச்சணந்திமாலை | இலக்கணம் | சைனம் | 13 |
கல்லாடர் | தொல்காப்பியம் சொல்லதிகாரம் | இலக்கணம் | சைவம் | 15 |
காலிங்கர் | திருக்குறள் | இலக்கியம் | – | 13 |
குணசாகரர் | யாப்பருங்கலக் காரிகை | இலக்கணம் | சைனம் | 11 |
சமய திவாகர வாமன முனிவர் | நீலகேசி | இலக்கியம் | சைனம் | 14 |
சாமுண்டி தேவ நாயனார் | புறப்பொருள் வெண்பாமாலை | இலக்கணம் | – | 15 |
சேனாவரையர் | தொல்காப்பியம் (சொல்லதிகாரம்) | இலக்கணம் | சைவம் | 13 |
தருமனார் | நாலடியார் | இலக்கியம் | சைவம் | 13 |
தெய்வச்சிலையார் | தொல்காப்பியம் சொல்லதிகாரம் | இலக்கணம் | – | 15 |
நக்கீரர் | இறையனார் அகப்பொருள் உரை (எழுதப்பெறவில்லை) | இலக்கணம் | சைவம் | 8 |
நச்சினார்க்கினியர் | தொல்காப்பியம் முழுமைக்கும் | இலக்கணம் | சைவம் | 14 |
நச்சினார்க்கினியர் | பத்துப்பாட்டு, கலித்தொகை, சிந்தாமணி | இலக்கியம் | சைவம் | 14 |
நாற்கவிராச நம்பி | நம்பியகப்பொருள் | இலக்கணம் | சைனம் | 13 |
நீலகண்டனார் | இறையனார் அகப்பொருள் உரை எழுதி வைத்தவர் | இலக்கணம் | சைவம் | 10 |
நூலாசிரியர் | தமிழ்நெறி விளக்க உரை | இலக்கணம் | – | 9 |
பதுமனார் | நாலடியார் | இலக்கியம் | சைனம் | 13 |
பரிதியார் | திருக்குறள் | இலக்கியம் | சைவம் | 15 |
பரிப்பெருமாள் | திருக்குறள் | இலக்கியம் | சைவம் | 11 |
பரிமேலழகர் | திருக்குறள், பரிபாடல் | இலக்கியம் | வைணவம் | 13 |
பழைய உரை (பலர்) | பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் | இலக்கியம் | – | 13 |
பழைய உரை | அகநானூறு | இலக்கியம் | – | 13 |
பழைய உரை | ஐங்குறு நூறு | இலக்கியம் | – | 13 |
பழைய உரை | தக்கயாகப் பரணி | இலக்கியம் | சைவம் | 15 |
பழைய உரை | திருக்கோவையார் | இலக்கியம் | சைவம் | 12 |
பழைய உரை | திருமுருகாற்றுப்படை | இலக்கியம் | சைவம் | 13 |
பழைய உரை | தொல்காப்பியம் சொல்லதிகாரம் | இலக்கணம் | – | 15 |
பழைய உரை | பதிற்றுப்பத்து | இலக்கியம் | – | 13 |
பழைய உரை | புறநானூறு 266 பாடல் | இலக்கியம் | சைவம் | 12 |
பெருந்தேவனார் | வீரசோழியம் | இலக்கணம் | சைவம் | 12 |
பேராசிரியர் | திருக்கோவையார் | இலக்கியம் | சைவம் | 13 |
பேராசிரியர் | தொல்காப்பியம் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல், உவம இயல், செய்யுள் இயல், மரபியல் | இலக்கணம் | சைவம் | 13 |
மணக்குடவர் | திருக்குறள் | இலக்கியம் | சைவம் | 10 |
மயிலைநாதர் | நன்னூல் | இலக்கணம் | சைனம் | 14 |
விருத்தியுரைகாரர் | யாப்பருங்கலம் | இலக்கணம் | சைனம் | 11 |
விளக்க உரை | நாலடியார் | இலக்கியம் | – | 13 |
கருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பாகம் 2, பதிப்பு 2005
கால வரிசையில் காண்க
தொகு இது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும். ஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம். |