உரையாசிரியர்கள் (காலநிரல்)
பண்டைய தமிழ் இலக்கண நூல்கள் நூற்பாக்களாகவும், [1] இலக்கிய நூல்கள் பாடல்களாகவும் அமைந்திருந்தன. இவை சுருக்கம், மனத்தில் பதியும் எளிமை முதலான பாங்குகளுடன் எழுதப்பட்டவை. உரைநடைப் பாங்கில் பேசும் மக்களுக்குப் புரிவதற்காக அந்த இலக்கண, இலக்கிய நூல்களுக்கு உரைநூல்கள் தோன்றின. இத்தகைய உரைநூல்களை எழுதிய பல ஆசிரியர்களின் காலநிரல் எளிய ஒப்பு நோக்குக்காக இங்கு தரப்படுகிறது.
- எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் எந்த உரைநூலும் எழவில்லை. நக்கீரர் இறையனார் அகப்பொருள் உரை இக்காலத்தில் தோன்றியது. [2]
9 ஆம் நூற்றாண்டு
தொகு- தமிழ்நெறி விளக்கம் என்னும் இலக்கண நூலுக்கு நூலாசிரியரே உரையும் எழுதியுள்ளார்.
10 ஆம் நூற்றாண்டு
தொகு- மணக்குடவர் திருக்குறளுக்கு உரை எழுதினார். இவர் சைவர்
- நீலகண்டனார் என்னும் சைவர் நக்கீரரின் இறையனார் களவியல் உரையை எழுதிவைத்தார்.
- ஆத்திரையன் பேராசிரியன் என்னும் சைவர் தொல்காப்பியம் பொதுப்பாயிரம் பகுதிக்கு உரை எழுதினார்.
11 ஆம் நூற்றாண்டு
தொகுஇலக்கிய உரைகள்
- சிலப்பதிகாரம் அரும்பத உரையாசிரியர்
- பரிப்பெருமாள் திருக்குறள் உரை. இவர் சைவர்
இலக்கண உரைகள்
- யாப்பருங்கல உரையாசிரியர். இவர் சைனம்
- குணசாகரர் - யாப்பருங்கலக் காரிகை உரையாசிரியர். இவர் சைனர்.
- இளம்பூரணர் - தொல்காப்பியம் முழுமைக்கும் உரை எழுதியவர். இவர் சைனர்.
12 ஆம் நூற்றாண்டு
தொகுஇலக்கிய உரைகள்
- புறநானூறு 266 பாடல்களுக்கு உரை எழுதிய 'பழைய உரை' ஆசிரியர்.
- அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரை (சைவம்)
- திருக்கோவையார் 'பழைய உரை' எழுதியவர்
இலக்கண உரை
13 ஆம் நூற்றாண்டு
தொகுஇலக்கிய உரை
- காலிங்கர் - திருக்குறள் உரை
- பரிமேலழகர் - திருக்குறள் உரை, பரிபாடல் உரை - வைணவர்
- பழைய உரையாசிரியர்கள்
- பதுமனார் - நாலடியார் உரை (சைவம்)
- தருமனார் - நாலடியார் உரை (சைவம்)
- நாலடியார் விளக்கவுரை ஆசிரியர்
- பேராசிரியர் (திருக்கோவையார் உரையாசிரியர்)(சைவம்)
- பலர் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் உரையாசிரியர்கள்
இலக்கண உரை
- வச்சணந்திமாலை உரையாசிரியர் (சைனம்)
- பேராசிரியர் - தொல்காப்பியம் பொருளதிகார உரை (சைவம்)
- இராசபவித்திர பல்லவதரையர் - அவிநயம் நூலும் உரையும் (சைனம்) (இப்போது கிடைக்கவில்லை)
- சேனாவரையர் - தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரை (சைவம்)
- நாற்கவிராச நம்பி - நம்பியகப்பொருள் நூலும் உரையும் (சேனம்)
14 ஆம் நூற்றாண்டு
தொகுஇலக்கிய உரை
- நச்சினார்க்கினியர் - பத்துப்பாட்டு உரை, கலித்தொகை உரை, சிந்தாமணி உரை (சைவம்)
- சமய திவாகர முனிவர் - நீலகேசி உரை (சைனம்)
இலக்கண உரைகள்
- மயிலைநாதர் - நன்னூல் உரை (சைனம்)
- களவியற்காரிகை உரையாசிரியர் (சைவம்)
- நச்சினார்க்கினியர் - தொல்காப்பிய உரை (முழுமைக்கும்) (சைவம்)
15 ஆம் நூற்றாண்டு
தொகுஇலக்கிய உரை
- தக்கயாகப்பரணி உரையாசிரியர் (சைவம்)
- பரிதியார் - திருக்குறள் உரை (சைவம்)
இலக்கண உரை
- தொல்காப்பியம் சொல்லதிகாரம் பழைய உரையாசிரியர் (சைவம்)
- கல்லாடர் - தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரை (சைவம்)
- தெய்வச்சிலையார் - தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரை (சைவம்)
- சாமுண்டிதேவ நாயகர் - புறப்பொருள் வெண்பாமாலை உரை (சைவம்)
- நேமிநாத உரையாசிரியர் (சைனம்)
ஒப்பிட்டுக் காண்க
தொகுகருவிநூல்
தொகு- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, பதிப்பு 2005